engalin uyir
Friday, 30 September 2011
Thursday, 29 September 2011
தேவர் போற்றி :
தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்
தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க
காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த
கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை
வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை
வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்
வாழையடி வாழையென அவரைப் போற்றி
வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்
மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை
மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்
பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்
பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்
கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்
கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக
நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்
நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்
உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்
உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்
புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை
புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை
கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி
கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்
எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை
என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ள
வேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்
வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்
போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்
போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்
காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு
கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு
ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்
அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்
தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ
தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்
காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று
கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்
சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற
செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி
ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை
அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி.
மறவர் போற்றும் வீரப்போர்
தமிழர் திருமகனாம் தொல்காப்யிர் வாழ்ந்த காலம் வீரயுகக்காலம். உலகோர் போற்றும் மறக்காலம். அந்த சங்ககால மக்கள் வாழ்க்கை முறை அம்மக்களின் நாட்டுணர்வு, அவர் தம் வீரச்சிறப்பு, வாணிகம், அக்காலப் புலவர்களின் ஆழ்ந்த புலமை, மகளிரின் வீரப்பண்பு போன்ற செய்திகளையும் தொல்காப்பியம் தௌ;ளத் தெளிவாக காட்டுகிறது.
படை பலம்
அன்று ஒரு நாட்டின் வீரத்தினை நிலை நிறுத்திக் காட்டியது, நால்வகைப் படைபலங்களே ஆகும்.
தனி ஒரு வீரரும் தம் வீரத்தை தயங்காது முன்னேறிக் காட்டினர். அவர்களின் போர்ப்படைகளிலே தேர்ப்படை, யானைப்டை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் இருந்தன என்பதை,
“தேரும், யானையும், குதிரையும், பிறவும் ஊர்ந்தனர் இயங்கவும் உடையர் என்ப” (பொ. மெல்.17)
என்று தொல்காப்பியரே தெளிவாகக் காட்டியுள்ளார். இச்சூத்திரம் தொல்காப்பியர் காலத்திலிருந்த ஊர்திகளைக் காட்டுகிறது. இவ்வூர்திகளை படைகளாலே பயன்படுத்திக் கொண்டு தம் வீரப் போரை நிகழ்த்தினர். இதனையே,
“தானை, யானை, குதிரை, என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்” (தொல். பொ.புற. 14)
என்ற நூற்பாவினால் தெளிவாக உணரலாம். அன்று தொல்காப்பியர் குறிப்பிட்ட இப்போர் வகைகளே இன்றும் உலக அளவில் ஒரு நாட்டிற்கு பாதுகாப்பைத் தேடித் தருகின்றது.
“தேரோர் தோற்றாய வென்றியும், தேரோர்
வென்ற கோமான் முன் தேர்க் கறவையும்” (தொ.பொ.புற.17)
தேரிலே ஏறிவந்த பொருளர் முதலியோடு புகழ்ந்து கூறிக்காட்டி வெற்றியும், தேரேறிப் போர் செய்ய வந்த அரசர்களை வென்ற வேந்தன், தன் வெற்றிக்களிப்பால் தேர்த்தட்டிலே ஏறி நின்று ஆடும் குரவைக் கூத்துமூ, என்று வந்துள்ளமையால் தேர்ப்படையின் சிறப்புக் கூறப்படுகிறது.
தொல்காப்பியர் காலத்துத் தமிழ்மக்கள் கடல் கடந்து சென்றனர். அதாவது கப்பலேறிக் கடல் கடந்து சென்றனர். இதனடிப்படையில் கால்நடையாகப் பொருள் தேடச் செல்வதற்குக் காலிற் பிளவு என்று பெயர்.
பண்டைத் தமிழர் பண்பாட்டில் “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது இன்றும் வழங்கிவரும் ஒன்றாகும். ஆகவே தான் கடல் தாண்டி செல்வதற்குக் கருவிகளையும், ஓடங்களையும், கட்டு மரங்களையும் அமைப்பதற்கு அவர்கள் அறிந்திருந்தனர். இது பிற்காலத்தில் அவர்களுக்குக் கப்பற்படை அமைக்கம் திறமை உண்டாகக் காரணமாக இருந்தது. கப்பற்படை தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகச் சொல்வதற்கு இடமில்லை.
முறையான போர்
பண்டைத் தமிழர்கள் ஆக்கிரமிப்புப்போரை அடியோடு வெறுத்தனர். எதிர்த்து வந்தவர்களைக் கண்டு அஞ்சவில்லை. தற்காப்புப் போர் புரிந்து வெற்றி கொண்டனர். தங்களது குடிகளை நடுங்கவைக்கும் கொடுங்கோல் மன்னர்களைப் பண்டையத் தமிழர்கள் சும்மா விட்டு வைக்கவில்லை. அவர்களைப்போரினைக் கொண்டு விரட்டினர்.
“வஞ்சி தானே முல்லையது புறனேஎஞ்சா மன்னரை வேந்தனை வேந்தன் அஞ்சாதத் தலைச் சென்று அடல்குறித்தன்றே” (தொல். பொ. பு. 6)
வஞ்சியென்பது முல்லையென்னும் அகத்திணையோடு தொடர்புடையது. அடங்காத மன்னனைக் கொண்டு, நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த வேந்தனை, அறங்கருதும் மற்றொரு வேந்தன், படையெடுத்து வந்து அதிகப்படி படை திரட்டிச் சென்று அவனோடு போர் செய்வது.
“தும்பை தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப” (தொ. பொ. புற. 12)
தும்பை என்பது நெய்தல் என்னும் அகத்திணையோடு தொடர்புடையது. தனது ஆற்றலை உலகம் புகழ வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு, போர் புணர வந்த அரக்கனை, எதிர்த்துச் சென்று போர் செய்து அவன் கர்வத்தைப்போர்க்களத்திலே அழிக்கும் சிறந்த செயல் ஆகும்.
தமிழர்கள் அகந்தை கொண்டு ஆக்கிரமிப்புப் போரிலே இறங்கமாட்டார்கள், எதிரிகளுக்கு அடிபணியவும் மாட்டார்கள். தற்காப்புப்போரின் மூலம் தங்கள் வீரத்தையும், வாழ்க்கையும், பாதுகாத்துக்கொள்ளும் பண்புடையவர்கள். இவ்வுண்மைகளை மேலே காட்டிய வஞ்சித்திணை, தும்பைத்திணை இரண்டும் விளக்கும்.
அறப்போர்
என்று நெட்டியமையார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய பாட்டால் அவன் படையெடுக்கும் முன்னர் ஆநிரை முதலியவைகளைக் கவர்ந்து கொள்ளுமாறு பகைவர்க்கு அறிவித்தான் என்பது தெளிவாகிறது. இந்தப் பாடலினை விதிமுறையாகக் கொண்டே சங்க காலத்தில் போர்ச்செயல்கள் நடைபெற்றன. மறவர்கள் அறத்தை மானமாகக் காத்து வந்தனர் என்பதும் இப்பாடலால் அறியலாம். இப்பாட்டு போரின் கொடுமையிலிருந்து விலக்கப்பட வேண்டியவர்களைத் தொகுத்துக் கூறுகிறது.
வீரர்கள் யாருக்கு பணியாவிட்டாலும் பார்ப்பனருக்குப் பணிந்தனர் என்பதை
“பார்ப்பார்க்கல்லது பணியறியலையே”
“பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்”
என்ற தொடர்கள் பாப்பனரைக் கொலை புரிதல் கொடும்பாவமெக் கருதினர் என்பதையும் எடுத்துரைக்கின்றன. பார்ப்பார் என்னும் சொல் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணரைக் குறிக்கும் எனலாம்.
தொல்காப்பியர் கால அரசர்கள் “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்ற உணர்வை தலையெனக் காத்து போர் செய்து வந்தனர்.
அச்சுத களப்பாளான்...
களப்பாளர் என்பது கள்ளர் குலத்தின் பட்டபெயர்களில் ஒன்றாகும். கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில்தமிழகத்தின் மத்திய பகுதியில் களப்பிரர் ஆட்சி செய்தனர். அவர்களுள் ஒருவனேஅச்சுத களப்பாளன். இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனதுநாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும்நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள்காணப்படுகின்றன. (நன்றி : விக்கிபீடியா)
இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனேசேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில்சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த யாப்பெருங்காலக்காரிகையின் ஆசிரியரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றியசில பாடங்களை மேற்கோள்காட்டியுள்ளார். இம்மன்னர் பௌத்தமதத்தைச்சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்
[3]
தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் 'களப்பிரர் காலம்' என்பது இருண்ட காலமாகக்
கருதப்படுகிறது.இதைப் பற்றிய செய்தி கிடைக்காததால் ? இவர்கள் யார் ? எப்படி அதிகாரம் இவர்களுக்கு வந்தது ? எவ்வளவு ஆண்டுகள் தமிழ் நாடு இவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது ?
> ? அப்போதைய இலக்கி ய,சமூக,அரசியல்
> வாழ்க்கை எப்படி இருந்தது? எவ்வாறு அது பழைய நிலைக்கு மீண்டது? அப்போது
> வெளிநாட்டுத் தொடர்பு எப்படி இருந்தது ? ஏதேனும் சிறு
> குறிப்புகளானும் உள்ளனவா? ராஜரங்கன்
அன்பிற்குரிய அரசரங்கருக்கு,
ஆராய்ச்சி அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்"
என்ற நூலை விடியல் பதிப்பகம், (11, பெரியார்நகர், மசக்காளிப்பாளையம் வடக்கு, கோவை 641 5,
தொலைபேசி எண்: 0422-576772) திசம்பர் 2000-இல் மீண்டும் பதிப்பித்திருக்கிறது. அதைப் படியுங்கள்.
பொத்தகத்தில் இருந்து சில செய்திகளையும், என் புரிதலையும் இங்கு கொடுத்திருக்கிறேன்.
களப்பிரர்கள் 'களப்பாளர்கள்' என்றும் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் கன்னடநாட்டில் இருந்து வந்த வடுகர்கள்????????; கன்னட தேசத்தில் களபப்பு என்னும் நாட்டையாண்ட சிற்றரசர்கள்; இன்றையச் சிரவண பெலகொள என்ற கன்னடப் பகுதியே அன்றைய களப்பப்புப் பகுதியாகும்?????. (களபப்பாளர்கள்>களப்பாளர்கள்; களபப்பர்>களப்பர்>களப்ரர்)
களபப்பு நாட்டில் உள்ள சந்திரகிரி மலையில் தான் சந்திரகுப்த மோரியன் அரசைத் துறந்தபின் சமணத் துறவியாக இருந்து பின் வடக்கிருந்து உயிர்துறந்தான். கி.பி. 250 அளவில், களப்பப்பர் அரசு
குவலாளபுரம் (இன்றையக் கோலார்) வரை பரவியிருந்தது. களப்பப்பு நாட்டிற்குள் தான் நந்தி மலை இருந்தது. (இன்றைக்கு பெங்களூரில் இருந்து பெல்லாரி போகும் சாலையில் nandi hills இருக்கிறது. ஒரு முறை போய்வாருங்கள்.) நந்திமலைச் சாரலில் இருந்து தான் பாலாறு எழுகிறது.
சங்க காலம் தொட்டு கொங்கு மண்டலத்தில் நடந்த சண்டைகளே மிகுதி. அந்தக் காலக் கொங்கு மண்டலம்
இன்றையத் தமிழ்க் கொங்கு மண்டலத்தையும், கன்னட கொங்கர் நாட்டையும் (பின்னால் கங்கர் நாடு என்று
திரித்துக் கூறப் பட்டது) கன்னடக் கடம்பர் நாட்டையும் கொண்டது. கடம்பர்களும் கொங்கர்களும் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றனர். தமிழ அரசரும் கன்னட அரசரும் தங்கம் உள்ள கோலாருக்காகவும்,
காவிரியைத் தன்வயம் கொள்வதற்குமாகக் கொங்கு மண்டலத்தில் போட்ட சண்டைகள் மிகுதி. அன்றையப் பழங் கன்னடம் கொடுந்தமிழில் ஒரு வகையே! களப்பப்பு அரசர்கள் சங்க காலத்தில் கடம்பர்களுக்கும், கன்னடக்
கொங்கர்களுக்கும் கீழிருந்த சிற்றரசர்களே! களப்பப்ப அரசர்கள் ஏறத்தாழ கி.பி.250 -இல் சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி தங்கள் நாட்டை விரிவு படுத்தி, ஆட்சி நடத்தியிருக்கிறார்கள்.
(தமிழக அரசர்கள் ஒருவருக்கொருவர் இந்தக் காலத்தில் அடிக்கடி ஒருவருக்கொருவர் போரிட்டுத் தங்களை
வலுவற்றவராய் ஆக்கிக் கொண்டது இவரைப் போன்றோர் தமிழகத்தைக் கைப்பற்றவாய்ப்பாக இருந்தது.) பல்லவ
நாடு மட்டும் தப்பித்தது. தமிழகத்தை ஆண்ட களப்பாளர்களின் கொடியில் வில், புலி, கயல் மூன்றுமே
இருந்தன. இவர்களின் அரசு தமிழகம் வரை விரிந்தபோது, தலைநகர் மதுரையாயிற்று. தில்லையிலும் ஒரு
கிளை அரசாண்டதை அறிகிறோம்.
அச்சுத விக்கந்தக் களப்பாளன் என்பவன் மிகவும் பேர்பெற்ற களப்பாள அரசன். அவனிடம் சேர, சோழ,
பாண்டிய மன்னர்கள் தளைப்பட்டுப் பாடியதாக 5 வெண்பாக்கள் யாப்பருங்கலம், யாப்பருங்கல விருத்தியுள்
மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. அச்சுதன் என்பது களப்பாளர்களின் பொதுப்பெயர்.எப்படிப் பாண்டியர்களுக்குச்
செழியன், வழுதி, மாறன் என்ற பெயர்கள்உண்டோ அது போல. களப்பிரர் தமிழகத்தில் நடத்திய ஆட்சிக்
காலத்தில் சமண வச்சிரநந்தியின் திரமிள சங்கம் ஏற்பட்டது. களப்பாளர்கள் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள்
தமிழகத்தை ஆண்டார்கள். (கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள பிணக்கு நெடுநாள் பட்டது; இருவரின்
வரலாறுகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவை. ஒருவரை ஒதுக்கி இன்னொருவருக்கு வரலாறு சொல்லமுடியாது.
தமிழரை ஒதுக்கிச் சிங்களருக்கு எப்படிவரலாறு சொல்ல முடியாதோ அது போல.கன்னடர் ஊடுறுவாத தமிழக
அரசு கி.பி.250 ற்குப் பின் கிடையாது.)
அச்சுதர்கள் விண்ணெறிக்கும் சமண நெறிக்குமாக மாறி மாறிப் புகுந்திருக்கிறார்கள். அதே பொழுது,
பெரும்பாலும் சமண நெறியே உயர்ந்தோங்கி இருந்திருக்கிறது. நமக்குச் சமண நெறி பழக்கமானதே கன்னட
நாட்டின் வழியாகத்தான். சமண நெறிக்கு வெளியூர் அரசர்கள் ஆதரவு காட்டியதாலே, பின்னாளில்
சிவநெறியையும் விண்ணெறியையும் நிலை நாட்டப் புகுந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும், சமயக்குரவர்களூம்
தங்களின் தமிழ்மையையும் உள்ளூர்த் தன்மையையும் அழுத்திக் கூறி வெல்ல வேண்டி வந்தது.
பின்னாளில் களப்பாளர்களும் நாயன்மார் காலத்தில் சிவநெறிக்குச் சிலபோது ஆட்பட்டிருக்கிறார்கள்.
பாண்டிய நாட்டை ஆண்ட களப்பாள அரசனுக்குப் பிள்ளையில்லாமல் தான் மூர்த்தி நாயனார் யானையால்
தேர்ந்தெடுக்கப் பட்டுச் சிறிது காலம் மதுரையை ஆள்கிறார். பிறகு மீண்டும் களப்பாளர் தங்கள் ஆட்சியை
நிறுவுகின்றனர். சோழநாட்டை ஆண்ட களப்பாள அரசர்களில் கூற்றுவநாயனாரும் ஒருவர். சிவ ஞான போதத்தை
எழுதிய மெய்கண்டாரும் ஒரு களப்பாளரே.
கி.பி. 6ம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோன் களப்பாளரைத் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றுகிறான். இதே
காலத்தில் பல்லவ சிம்மவிஷ்ணு களப்பாளரைத் தோற்கடித்துச் சோழநாட்டைக் கைப்பற்றிக் கொள்ளுகிறான்.
பின் விசயாலயன் பல்லவரை வெல்லும் வரை சோழநாடு எழவே இல்லை. சேர நாட்டைக் களப்பாளரிடம் இருந்து
வென்ற அரசன் பெயர் தெரியவில்லை
[4]களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்டஇலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள்அக்காலகட்டத்தில் உருவானவை. திருக்குறளும் அவற்றில் ஒன்று
களப்பிரர் காலகட்டத்தைச் சேர்ந்த பல சமண குடைவரைக் கோயில்கள்தமிழ்நாட்டில் உள்ளன. உதாரணம் சிதறால் மலை [குமரிமாவட்டம்] அப்பாண்டநாதர் கோயில் [ உளுந்தூர்பேட்டை] . அவற்றை எல்லாம் கணக்கில்கொண்டு புதிய வரலாறு விரிவாக இனிமேல்தான் எழுதபப்டவேண்டும்
முனைவர் க.ப.அறவாணன் களப்பிரர் காலம் குறித்து சில முக்கியமானஆய்வுகளைச் செய்திருக்கிறார். அவரது ‘களப்பிரர்காலம் பொற்காலம்’ என்றநூல் முக்கியமான ஒன்று.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதிக்கு அருகிலுள்ளபூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும்மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது.
மதுரை முதல் புதுக்கோட்டை வரை இவர்கள் ஆண்டிருந்த நிலப்பகுதி என்றும்இப்பகுதியில் உள்ள பல ஊர்பெயர்கள் சாதிகளின் ஆசாரங்கள் ஆகியவற்ரைக்கோன்டு களப்பிரர் வரலாற்றை ஆராயலாம் என்றும் சொல்கிறார்கள்.
சைவர்களின் வெறுப்பு எவ்வாறு இருந்தது என்றால் களப்பிரர் காலகட்டத்தில்ஏராளமான நீதி நூல்கள் எழுதப்பட்டதற்குக் காரணம் அக்காலத்தில் அவர்களின்கொடுங்கோல் ஆட்சியால் நீதி வழுவி சமூகம் சீர்குலைந்ததுதான் என மீண்டும்மீன்டும் எழுதியிருக்கிறார்கள்! அப்படியானால் பக்தி காலகட்டத்தில் ஏன்அத்தனை பக்தி நூல்கள் எழுந்தன? பக்தி வழுவி நாத்திகம் மேலெழுந்தமையாலா? என்ன அபத்தமான பேச்சு!
ஆனால் அப்படித்தான் நம் ஆரம்பகால வரலாறு முற்றிலும் அடிபப்டைகள்இல்லாமல் எழுதப்பட்டது. அதற்குக் காரணம் அப்போது வரலாற்றைகாலவரிசைப்படி எழுதுவது என்ற அளவிலேயே வரலாற்றெழுத்துநின்றுவிட்டிருந் தது. வரலாற்றின் கோட்பாடுகள் எவையும்முன்வைக்கப்படவில்லை.
இந்திய வரலாற்றாய்வில் முக்கியமான கோட்பாட்டு சட்டகங்கள்அக்காலகட்டத்தில்தான் முன்வைக்கபப்ட்டன. டி.டி.கோசாம்பியின் மரபுஉருவாகி வந்தது.ஆனால் தமிழ்க அறிஞர்கள் அவற்றைஎல்லாமறிந்திருந்தார்கள் என்பதற்கான தடையமே இல்லை
களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் சமணம் செழித்தது. சமணம் பல்வேறுஇனக்குழு மக்களை அகிம்சை வழியில் ஒன்றாகத் திரட்டிய மதம். தமிழ்நாட்டில்நாக வழிபாடு அதிகமாக இருந்திருக்கலாம். ஆகவே ஐந்துதலை நாகம்தலைக்குமேல் நிற்கும் தீர்த்தங்காரரான பார்ஸ்வநாதர் இங்கே சமணர்களால்முன்னிறுத்தப்பட்டார் . மக்கள் அதிகமாக அவரையே வழிபட்டிருக்கிறார்கள்.
சம்ணம் மருத்துவம், கல்வி ஆகிய இரு வழிகளில் மக்களிடம் சென்றடைந்தது. ஆகவே மருத்துவநூல்கள், நீதிநூல்கள், இலக்கணநூல்கள் ஆகியவையேஅவர்களால் அதிகமும் எழுதபப்ட்டன. தமிழகத்தில் கல்வி பரவலாக அவர்கள்பெரும்பங்கு வகித்தார்கள். சித்த மருத்துவத்தின் பிதாமகர்கள் அவர்களே.
சமணம் வணிகத்தின், வணிகர்களின் மதமும் கூட. தமிழகத்தைஒன்றிணைக்கவும் விரிவான வணிக வழிகளை உருவாக்கவும் அது உதவியது. இது தமிழகத்தின் பொருளியல் வளார்ச்சிக்கு பெரும்பங்கு வகித்தது. பலநூற்றாண்டுக்காலம் தமிழ் பண்பாட்டின் முகமாக சமணமே விளங்கியது.
களப்பிரர்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் இங்குள்ள மக்களுடன்ஐக்கியமாகிவிட்டிருக்க க் கூடும். தமிழ்கத்தில் உள்ள பலசாதிகள்களப்பிரர்வழித்தோன்றல் களாக இருக்கலாம். அவர்களின் வரலாற்றை நாம் இன்றுதெளிவாக பகுப்பாய்வுசெய்ய முடியாது. நெடுங்காலம் ஆகிவிட்டது.
களப்பிரர்காலகட்டம் தமிழகத்துக்கு முக்கியமான அரசியல்-பொருளியல்-பண்பாட்டுக் கொடைகளை வழங்கியது என்றே நான் எண்ணுகிறேன். வரும்காலத்தில் விரிவான ஆய்வுகள் வழியாக இது மேலும் நிறுவப்படக்கூடும்
தமிழகத்தைக் கி.பி. 250 முதல் 600 வரை களப்பிரர் அல்லது
களப்பாளர் ஆண்டனர். களப்பிரர் தமிழகத்திற்கு வந்த அயலவர்.
அவர்கள் கருநாடக தேசத்திலிருந்து தமிழகத்தில் புகுந்து
மூவேந்தர்களை வென்று தமிழகத்தைக் கைப்பற்றினர். கி.பி. ஆறாம்
நூற்றாண்டில் பல்லவர்களும், பாண்டியர்களும் அதிகார வலிமை
பெறும் வரை இவர்தம் ஆட்சி இருந்தது. இவர்கள் காலத்தில்
தமிழகத்து அரசியலிலும், சமயத்திலும், சமூகத்திலும், இலக்கியப்
பாடுபொருளிலும் மாறுதல்கள் ஏற்பட்டன.
''அளவரிய அதிராஜரை நீக்கி அகலிடத்தைக்
களப்பாள ரென்னும் கலியரசன்
கைக்கொண்டனன் ''
என்று வேள்விக்குடிச் சாசன வரிகள். அச்சுதக் களப்பாளன்
தமிழகத்தைக் கைப்பற்றியதைச் சொல்கின்றன.
ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விட்டுணு எனும்
பல்லவனும், பாண்டியன் கடுங்கோனும் களப்பாளரை வெற்றி
கொண்டனர். பல்லவர்களும் தமிழகத்திற்கு அயலவரே. ஆந்திர
தேசத்தில் கிருஷ்ணா ஆற்றுக்கும், வடபெண்ணை ஆற்றுக்கும்
இடையே ஆட்சியை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த பல்லவ
வம்சத்தினர் களப்பாளருடன் மோதித் தொண்டை மண்டலத்தைக்
கைப்பற்றினர். காஞ்சி அவர்தம் அரசிருக்கை ஆகியது.
ஒரு சாரார் களப்பிரர் என்னும் பெயரே கள்வர் எனத் திரிந்ததாகும் எனக்கருதுகின்றனர். களப்பிரர் என்பார் தட்சிணத்தை ஆண்ட ஓர் அரச வமிசத்தினர். இவர்கள் ஒரு காலத்திற் பண்டி நாட்டையும் வென்று அடிப்படுத்திருக்கின்றனர்.
நன்றி : எழுத்தாளர் ஜெயமோகன், அகத்திய மடலாடற்குழு, ஈகரை இணையம், மாய தேவர்
Wednesday, 28 September 2011
வேதாரண்யம் தேவர் வரலாறு
நமது வேதாரண்யம் பற்றின பழமையான வரலாற்றினை ... இதில் எனக்கு தெரிந்த உண்மையான தகவல்களை நான் தருகிறேன் .... இதே போல் ... அனைவரும் அவர் அவர்களுக்கு தெரிந்த ...வேதரன்யத்தை பூர்விகமாக கொண்ட தேவர்(அகமுடையார்) பற்றி தங்களுக்கு ஆதாரபுர்வமாக தெரிந்த செய்திகளை (devarsrini@gmail.com) என்ற id கு தருமாறு கேட்டு கொள்கிறேன்
திருமறைகாடு என்பதுதான் வேதாரன்யத்தின் உண்மையான தமிழ் பெயர். அதாவது
வேதம் என்பது மறை, ஆரண்யம் என்பது காடு, வடமொழியில் -வேதாரண்யம் ...தமிழில்-திருமறைக்காடு...
வேதங்களின் தலைவன் ...முதல்வன் ..எம்பெருமான் சிவபெருமான் விற்றிருக்கும் ஆரண்யம் (காடு). என்பது நமது திருமறைகாடு என்பதிற்கு பொருள்.
வேதம் என்பது மறை, ஆரண்யம் என்பது காடு, வடமொழியில் -வேதாரண்யம் ...தமிழில்-திருமறைக்காடு...
வேதங்களின் தலைவன் ...முதல்வன் ..எம்பெருமான் சிவபெருமான் விற்றிருக்கும் ஆரண்யம் (காடு). என்பது நமது திருமறைகாடு என்பதிற்கு பொருள்.
தல வரலாறு:
வடமொழி வேதங்கள் ரிக், யசூர்,சாம, அதர்வண என்ற நான்கும் மனித உருக் கொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன் இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை ., இனி நாங்கள் இருப்பது நல்லதல்ல என்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது.பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர்.பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும் ,வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம் என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.
வடமொழி வேதங்கள் ரிக், யசூர்,சாம, அதர்வண என்ற நான்கும் மனித உருக் கொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன் இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை ., இனி நாங்கள் இருப்பது நல்லதல்ல என்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது.பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர்.பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும் ,வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம் என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.
தல சிறப்பு
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு. இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது. வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம். நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி - அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.
கோட்டைபத்து அகமுடையரின் கோட்டை
சோழ பேரரசின் கிழக்கு எல்லை வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை
உலகின் தலைசிறந்த கடற்படை சோழர்களின் கடற்படை...கோடியக்கரை என்று சோழர்களின் ஒரு முக்கியமான துறைமுகம் ...இது போர் படை துறைமுகமாக மட்டுமே இருந்தது ... சோழர்களின் மிக முக்கிய படைகளில் கோட்டைபத்து தேவர்கள் என்பது இதிலிருந்து நமக்கு விளங்கும்....
இது மறுக்க முடியாத உண்மை....
உலகின் தலைசிறந்த கடற்படை சோழர்களின் கடற்படை...கோடியக்கரை என்று சோழர்களின் ஒரு முக்கியமான துறைமுகம் ...இது போர் படை துறைமுகமாக மட்டுமே இருந்தது ... சோழர்களின் மிக முக்கிய படைகளில் கோட்டைபத்து தேவர்கள் என்பது இதிலிருந்து நமக்கு விளங்கும்....
இது மறுக்க முடியாத உண்மை....
கோட்டைபத்து அகமுடையர்களின் கோட்டை காக்கும் முறை
கோட்டைபத்து அகமுடையர்களின் கோட்டை காக்கும் முறை
கோட்டை என்பது மன்னனின் அரண்மனை ,கருவுலம்(கஜான), ஆயுத கிடங்கு , அமைச்சர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் , அனைத்து தலைமை அலுவுலகங்கள்...அனைத்தும் உள்ளடங்கியது .. இதனைத்தையும் சுற்றி வானுயர்ந்த மதில் எழுப்ப பற்றிருக்கும்.... அதன் பிறகு அகழி ஒன்று கோட்டையை சுற்றி தோண்ட பற்றிருக்கும் அதில் கொடிய முதலைகள் விட பற்றிருக்கும்....இப்படி பட்ட கோட்டை காவல் மற்றும் கோட்டையின் தினசரி செயல்பாடுகள் அனைத்தும்.... இவர்கள் வசமே இருந்தது .
வேல் ,வில் அம்பு ,வாள் ,அரிவாள் ,கொதிக்கும் எண்ணெய்(மதில் மேல் ஏறி வருபவர்கள் மீது ஊற்ற), மற்றும் பல ஆயுதங்கள் கொண்டு கோட்டையை காத்தனர்
கோட்டைக்குள் யார் எப்போது வர வேண்டும் ... என்று நிர்ணயக்கும் அதிகாரம் இவர்களிடம் மட்டுமே இருக்கும்..
இலச்சினை இல்லாத எவரும் கோட்டைக்குள் அனுமதிகவோ முக்கிய அதிகாரிகளை பார்க்கவோ முடியாது ...
நாடு முற்றிலும் எதிரிகள் ஆக்ரமித்த பிறகும்... கோட்டைக்குள் அவர்கள் நுழையாத படி அம்பு மழை போல் எய்து எதிரிகளை விழ்த்தி கோட்டையை காத்தனர்....
கோட்டை என்பது மன்னனின் அரண்மனை ,கருவுலம்(கஜான), ஆயுத கிடங்கு , அமைச்சர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் , அனைத்து தலைமை அலுவுலகங்கள்...அனைத்தும் உள்ளடங்கியது .. இதனைத்தையும் சுற்றி வானுயர்ந்த மதில் எழுப்ப பற்றிருக்கும்.... அதன் பிறகு அகழி ஒன்று கோட்டையை சுற்றி தோண்ட பற்றிருக்கும் அதில் கொடிய முதலைகள் விட பற்றிருக்கும்....இப்படி பட்ட கோட்டை காவல் மற்றும் கோட்டையின் தினசரி செயல்பாடுகள் அனைத்தும்.... இவர்கள் வசமே இருந்தது .
வேல் ,வில் அம்பு ,வாள் ,அரிவாள் ,கொதிக்கும் எண்ணெய்(மதில் மேல் ஏறி வருபவர்கள் மீது ஊற்ற), மற்றும் பல ஆயுதங்கள் கொண்டு கோட்டையை காத்தனர்
கோட்டைக்குள் யார் எப்போது வர வேண்டும் ... என்று நிர்ணயக்கும் அதிகாரம் இவர்களிடம் மட்டுமே இருக்கும்..
இலச்சினை இல்லாத எவரும் கோட்டைக்குள் அனுமதிகவோ முக்கிய அதிகாரிகளை பார்க்கவோ முடியாது ...
நாடு முற்றிலும் எதிரிகள் ஆக்ரமித்த பிறகும்... கோட்டைக்குள் அவர்கள் நுழையாத படி அம்பு மழை போல் எய்து எதிரிகளை விழ்த்தி கோட்டையை காத்தனர்....
நன்றி
orkut சொந்தமே
இராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்
இராஜராஜனின் ஒரு மெய்க்கீர்த்தி இவ்வாறு கூறுகிறது:
ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்
இதன் மூலம் இராஜராஜனின் போர்த்திறன் வெளிப்படுகிறது. காந்தளூர் என்னும் துறைமுகத்தில் சேரர்களின் (பாஸ்கர் ரவி வர்மன் திருவடி) கப்பல்களை அழித்ததாகக் குறிப்பிடும் இவ்வரிகளிலிருந்து, சோழ கப்பற்படை நன்கே இருந்தது எனக் கொள்ள்லாம். அதே போல ஸ்ரீலங்காவின் மீது 993(கி.பி)-ஆம் ஆண்டில் படையெடுத்து அதன் வடபுறத்தினைக் கைப்பற்றி அந்த இடத்திற்கு ‘மும்முடி சோழ மண்டலம்’ எனப் பெயரிட்டதும், இராஜராஜனின் கடற்படைத் திறனைக் காட்டுகிறது. தனது ஆட்சிக் காலத்திலேயே ஸ்ரீலங்கவை முழுவதுமாக வென்று, பின்னர் வெங்கி நாட்டையும் தனதாக்கிக் கொண்டு அதைச் சக்திவர்மனுக்கு ஆட்சி புரிய அளித்தான். கடற்படையில் சிறந்திருந்த போதும், இராஜராஜன், அப்படையை எந்நாட்டையும் அழிக்கப் பயன்படுத்தவில்லை.
சைலேந்திரர்களுடன் அவனது உறவு குறிப்பிடப்படவேண்டியது. ஏனெனில் சரித்திரரீதியாக நாம் அறிந்து கொள்வதெல்லாம் சைலேந்திரர்கள் குறிப்புகள் மூலமே! சுமத்ராவிலும் இன்றைய மலேசியாவிலுமிருந்து தான் நமக்கு அதிகமான சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்தே, அதாவது, அவை அங்கு கிடைப்பதிலிருந்தே, இராஜராஜனின் பெருமை அறியப்படலாம். அங்கு கிடைக்கும் பல சான்றுகளினின்றும் சைலேந்திர நாட்டு சூளாமணிவர்மன் அவனது மகனான விஜயோத்துங்கவர்மன் (1003-1005) ஆட்சியிலும் இராஜராஜனின் உறவு அந்நாட்டினுடன் மிக நன்றாகவே இருந்திருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்கிறோம். ராஜேந்திரன் காலத்தில் தான் கடற்படை ஆக்ரமிப்புக்குப் பயன் படுத்தப்பட்டது. இராஜராஜனின் கப்பல்கள் மாலத்தீவுக்குச் சென்று அங்கு 10,000 தீவுகளைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது.
அதே போல சீன நாட்டிலிருந்தும் பல சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.
இப்போது அதற்கான சான்றுகள் ஒன்றும் இல்லையெனினும், நாகபட்டினம்தான் சோழர்களின் முக்கியமான துறைமுகமாக இருந்தது. அப்போதைய சோழ நாட்டு மாலுமிகள் கடல்வழிப் பயணத்தை நன்கே அறிந்து வைத்திருந்தனர். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும். தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடாவில் கடல் நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு, (அந்த நீரோட்டத்திற்கு வடக்கன் என்று பெயர்) கப்பல்கள் வெகு சுலபமாகத் தெற்கு நோக்கிப் பயணிக்கும். (ஆகையால் தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி உண்டானதாக நான் நம்புகிறேன்.) அப்படிச் செல்லும் கப்பல்கள் ஸ்ரீலங்காவின் கிழக்குக் கரையிலுள்ள அக்கரைபட்டினம் என்ற ஊரை அடையும். அப்போது காற்று கிழக்கு நோக்கி வீசும். அதைப் பயன்படுத்திக் கொண்டு கப்பல்கள் கிழக்குத் தீவுகளை அடையும். இதை நன்கு அறிந்திருந்தவர்கள் இராஜராஜ சோழன் காலத்து மாலுமிகள். இராஜேந்திரன் இந்தத் திறமையை சீர் செய்து இன்னும் கப்பல்கள் செல்வதைப் பெருக்கினான். ஆனால் அவ்வழிகளை அமைத்துக் கொடுத்தது இராஜராஜன்தான். அதற்கு முன்னர் கலிங்கர்களும், குஜராத்தியர்களும் அறிந்திருந்தனர்! இருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்தியது இராஜராஜன்தான் என்றால் மிகையாகாது!
தவிரவும் இராஜராஜன் காலத்தில்தான், வணிகக் குழுக்கள் கீழை நாடுகளுக்குச் சென்று தமது வணிகக் கூடங்களை நிறுவியது. அப்போது தான், பல நாடுகளினின்று வந்த வணிகர்களும்கூடி வணிகத்தை முழுமையாக பன்னாட்டு நிறுவனமாக மாற்றினர். ஆகையால், வணிகத்தை நாடு கடந்து சிறப்பாக நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்ததில் இராஜராஜனின் பங்கு அதிகம் இருந்தது எனக் கொள்ளலாம்.
முக்கியமாக, நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன் என்று கூறலாம்!
நன்றி :மாய தேவர்
ஆப்கானில் தேவர் அரச வம்சம் ஆச்சரியமான செய்தி.
கள்ளரால் ஆப்கானிய இந்து அரச வம்சம் கிபி 800களில் தோற்றுவிக்கப்பட்டு மேற்கே ஈரானும், கிழக்கே காஷ்மீரும் தெற்கே இந்துப்பெருங்கடலுமாக பரந்து விரிந்திருந்தது.இந்த வம்சத்து பீம்பால கள்ளர் உருவாக்கிய கல்வெட்டு 2001இல் கிடைத்தது இந்த வம்சத்து அரசாட்சியை பற்றி கூறுகிறது.
இந்த வமிசத்தைச் சார்ந்த ஸ்பலபதி தேவர் அச்சடித்த நாணயத்தை மேலே பார்க்கிறீர்க
கள்ளரால் ஆப்கானிய இந்து அரச வம்சம் கிபி 800களில் தோற்றுவிக்கப்பட்டு மேற்கே ஈரானும், கிழக்கே காஷ்மீரும் தெற்கே இந்துப்பெருங்கடலுமாக பரந்து விரிந்திருந்தது.இந்த வம்சத்து பீம்பால கள்ளர் உருவாக்கிய கல்வெட்டு 2001இல் கிடைத்தது இந்த வம்சத்து அரசாட்சியை பற்றி கூறுகிறது.
இந்த வமிசத்தைச் சார்ந்த ஸ்பலபதி தேவர் அச்சடித்த நாணயத்தை மேலே பார்க்கிறீர்க
Tuesday, 27 September 2011
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு முன்னுரை:
(இராஜ இராஜா தேவர் என்ற கல் வெட்டு)
குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது.
அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன.
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன்,
கல்லணையைக்கட்டிய கரிகாலன்,
மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே!
உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன.
இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:
கள்வன் ராஜ ராஜன்” என்றும், “களப ராஜராஜன்” என்றும் தன்னுடைய மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ள இராஜராஜ சோழன் – கள்ளரே! ஆவார்.
இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை “களப ராஜராஜன்” என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை ”கள்வன் ராஜ ராஜன்” என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள “களப” என்ற வார்த்தை “களவ” என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல்.
ஆரியர்கள் இமயம் கடந்து இந்தியாவிற்குள் வந்த காலம் கி.மு.1500. அவர்கள் வடநாடெங்கும் பரவியதை ஆரிய வர்த்தனம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆரியவர்த்தனம் நடைபெற்றபிறகு, அவர்கள் வாழ்வியல்தேடி தெற்கே விந்தியமலை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தகாலம் கி.மு.6ம் நூற்றாண்டு ஆகும். கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குமுன், அதாவது ஆரியர்கள் தமிழகம் வருவதற்குமுன், தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. திருமணக்கலப்பு ஏதும் தடைசெய்யப்படவில்லை குறிஞ்சி நிலத்து குறவன் ஒருவன் முல்லைநிலத்து இடைச்சியை மணக்கலாம். அதுபோல் நெய்தல் நிலத்து பரதவன், மருதநிலத்து விவசாயப்பெண்ணைமணக்கலாம்.(ஆதாரம ்:முனைவர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)அப்போது, தமிழகத்தில் மக்கள் அவரவர் செய்துவந்த தொழிலுக்கேற்ப பல குலங்கள் மட்டுமே தோன்றியிருந்தன. தமிழக மக்கள் அனைவரும் அவரவர் செய்துவந்த தொழிலின் அடிப்படையில், தொழில் பெயராலேயே அழைக்கப்பட்டனர். எ.கா:—(1)அளவர் (2)இடையர் (3)உமணர் (4)உழவர் (5)எயினர் (6)குயவர் (7)கூத்தர் (8)கொல்லர் (9)தச்சர் (10)தட்டார் (11)தேர்ப்பாகர் (12)பரதவர் (13)பறையர் (14)புலையர் (15)வண்ணார் (16)வணியர் (17) வெள்ளாளர் (18)களவர். இன்றைய கள்ளர்குல முன்னோர்கள் அனைவரும் உலகம் தோன்றிய நாள்முதல் போர்க்களம் சென்று போராடுவதையே தங்கள் குலத்தொழிலாகக்கொண்டிருந்தனர் என்பதை பன்னிருபடலம், புறப்பொருள்வெண்பாமாலை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.
களவர்(விளக்கம்): ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின்கல்வெட்டில் “தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது” பொறித்துவைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களைவிருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:
“தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………”
பழங்காலத்தில், போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின்மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல்வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர் நம்குலமறவர்களாகிய வெட்சிமறவர் கள்வர்கள் போர்செய்த முறையையும் அவர்கள் போர்க்களம் சென்று வீரமரணம் அடைந்தபின் நடுகல்லாகி அனைவராலும் வணங்கப்பட்ட செய்திகள் பலவற்றையும் நேரில் கண்ட செய்திகளாக பன்னிருபடலத்தில் நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறார். தொல்காப்பியருக்குப்பின் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் வாழ்ந்தவர் திருவள்ளுவர்.அவரும் நம்மறக்குடி மக்களின் மாண்பையும் வீரத்தையும் நேரில்கண்டு போற்றிப்பாடியுள்ளார். திருவள்ளுவரின் கீழ்காணும் இருபாடல்கள் நம் குல முன்னோர்கள் போர்க்களத்தில் நின்று போராடும் காட்சியை நமக்குக் காட்டுகின்றது:
“விழித்தக்கண் வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின் ஓட்டு அன்றோ வன் கணவர்க்கு”(குறள் 775)
பொருள்: போர்க்களத்தில் நேருக்குநேர்நின்று போர்புரியும்போது, எதிரி எறியும் வேலைக்கண்டு, திறந்திருந்த கண்களை சிறிது மூடிதிறந்தாலும்(இமைத்தாலும்) அது கோழையின் செயலாகக்கருதி, புறமுதுகிட்டு ஓடியதற்கு ஒப்பாகும்.
“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்” (குறள் 774
பொருள்:போர்க்களத்தில் வீரன் ஒருவன் தன்னைத்தாக்க எதிரேவரும் யானையின் மீது தன் கையிலிருக்கும் கூரிய வேலை வேகமாக எறிந்து அதன் உடலில் ஆழமாக பாய்ச்சி விடுகின்றான். வேலின் வன்மையை தாக்குபிடிக்கமுடியாத அந்த யானை வலியினால் பின்வாங்கி அவன் எறிந்த வேலோடு திரும்பி ஓடிவிடுகின்றது. மேற்கொண்டு போராட வேலில்லையே என அவ்வீரன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். அப்போது, எதிரி எறிந்த வேல் ஒன்று வேகமாக பாய்ந்துவந்து அவன் மார்பில் பதிந்த நிற்கின்றது. அதுகண்டு அவன் மனம் மகிழ்ந்தான். வேல்ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவன் மார்பில் தைத்துநிற்கின்ற அந்த வேலை பிடிங்கி கையில் எடுத்து சுழற்றிக்கொண்டு எதிரியைத்தாக்க மகிழ்ச்சியுட்ன் ஓடுகின்றான்.
மேலும், போர்க்களம்செல்லும் முன் தன் மனைவியை மைத்துனர் வீட்டில் விட்டுச்செல்வதையும் நம் குலமுன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். போர்க்களம் செல்லும் நம்குல மறவர்கள், மாலையில்வீடுதிரும்புவோம் என்ற நிச்சயமற்றநிலையை மனதில் கருதியே அவ்வழக்கத்தைக்கடைபிடித்தனர்.
தமிழ் இனத்தில்பள்ளுபறை என்னும் 18 சாதிகள் உண்டு. ஆனால், எந்த சாதியினரும் செய்யாத மிகவும் ஆபத்தான தொழிலையேஇவர்கள் செய்ததற்குக் காரணம், முற்கால மன்னர்கள் இவர்களை மிகவும் போற்றி மதித்துள்ளனர் என்பதுமட்டுமல்லாமல் பிறந்த மண்ணுக்காகவும், மன்னனுக்காகவும் போரில் வீர மரணம் அடைவதை பெறும் பேறாகக்கருதியவர்கள் நம்குலமுன்னோர்கள் என்பதும் அவர்கள் உண்மையாக போர்செய்து வெற்றிவாகைசூடி மன்னனுக்குபெருமைதேடித்தந்தனர் என்பதையே தஞ்சை பெருவுடையார் கோயிலில்உள்ள பேரரசன் இராஜராஜ சோழனின்கல்வெட்டு சான்று கூறுகிறது. போர்க்களம் சென்ற தன் தளபதிகள் உடல் உறுப்புக்கள் ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டும் என, சிவபெருமானைவேண்டி இராஜராஜசோழன் திருவிளக்கு எரிய நிவந்தம் விட்ட செய்திகளும்தஞ்சை பெருவுடையார்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.இரட்டைப்பாடி ஏழரைஇலக்கத்தின்மன்னன் மேலைச் சாளுக்கியனுடன் 100 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போரில் 9,00,000 போர்வீரர்கள் போரிட்டுஇறுதியில் சோழமன்னன் வெற்றிவாகை சூடினான்..தரைப்படை,குதிரைப்படை ,யானைப்படை மற்றும்கப்பற்படைமூலம் கடல்கடந்த நாடுகளையும் தாக்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோழர்படை வென்றது.
1. பாண்டிநாடு
2. பல்லவநாடு
3. சேரநாடு
4. இலங்கை
5. இரட்டைப்பாடி ஏழரை இலக்கம்
6. வேங்கி
7. சாளுக்கியநாடு
8. சக்கரக்கோட்டம்
9. கலிங்கம்
10. கங்கபாடி
11. நுளம்பப்பாடி
12. குடகு
13. கேரளம்
14. கொல்லம்
15. மாநக்கவாரம்
16. மாப்பாளம்
17. மலேயா தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்
18. கடாரம்
19. சாவகம்
20. இலாமுரிதேசம்
21. சிறீவிசயம்
22. கருமனம்
23. புட்பகம்
24. யவனம்
25. மிசிரம்
26. காழகம்
27. புட்பகம்
28. அரபிக்கடலிலுள்ள முன்னீர் பழந்தீவுபன்னீராயிரம்
29. அங்கம்
30. வங்கம்
31. கோசலம்
32. விதேகம்
33. கூர்சரம்
34. பாஞ்சாலம்
35. இடைதுறைநாடு
36. வனவாசி
37. கொள்ளிப்பாக்கை
38. மண்ணைக்கடக்கம்
39. மதுரமண்டலம்
40. நாமணக்கோணை
41. பஞ்சப்பள்ளி
42. மாசுணிதேசம்
43. ஒரிசா(ஒட்ட விசயம்)
44. சுமத்ரா தீவிலுள்ள விசையம்
45. பண்ணை
46. மலையூர்
47. இலங்கா சோகம்
48. இலிம்பிங்கம்
49. வளைப்பந்தூறு
50. தக்கோலம்
51. மதமாலிங்கம்
ஆகிய நாடுகளை சோழர் படைவென்றுஉலகப்பேரரசாக மாறியது. சோழனின் படை வடஇந்தியாவில் உள்ள கங்கைக்கரைவரை சென்று வெற்றிவாகைசூடியது.
வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங் களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றா ன். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்ச ெய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனும ான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து , அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான். இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிப ி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநா ட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழன ின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின ் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியா வின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகுஇந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை எ ன்று வரலாறுகூறுகிறது.மதுரை மண்டலம் என்பது யமுனைக்கரையில் உள்ள வடமதுரையே என்பதில் ஐயமில்லை.அந்நகர் அக்காலத்தில் செல்வமும் செழிப்பும் புகழும்பொதிந்து காணப்பட்டதால், அந்நகர்மீது கஜினிமுகமது பன்முறை தாக்குதல்நடத்தி கொள்ளையடித்து தீயிட்டு சீரழித்தான்.அப்போது வடநாட்டு மன்னர்களின் வேண்டுகோளைஏற்று சிவபாதசேகரனின் மகனான இராசேந்திரசோழன்,சோமநாதபுரம் கோயிலைக் காப்பாற்றவும்,கஜினிமுகம்மதுவுட ன் போரிட்டு அவன்தொல்லையிலிருந்து வடஇந்தியாவைவைக் காப்பாற்றவும், மாபெருமபடை திரட்டிக்கொண்டு வடநாட்டின்மீது திக்விஜயம் விஜயம் மேற்கொண்டான் என்று கருதத்தோன்றுகிறது என்று டாக்டர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.(பக்கம்279) இராஜேந்திரசோழனின் நாட்டம் அடுத்துக் கங்கை வெளி யின் மீது பாய்ந்த்து. மேலைச்சாளுக்கிய மன்னன்இரண்டாம் சயசிம்மனுக்கு படைத்துணைநல்கிய வர்களான கலிங்கத்து அரசனும், ஒட்டவிசயஅரசனும் சோழர்படைக்கு அடிபணிந்தனர். இப்படைகள் மேலும் வடக்கே முன்னேறிச்சென்று இந்திரதரன், இரணசூரன், தருமபாலன்ஆகியமன்னர்களை வென்று கங்கைவெளியில் அடிவைத்தன. வங்க நாட்டு பாலவமிசத்து மன்னன் மகிபாலன் என்பான்சோழர்படைக்கு தலைவணங்கி அடிபணிந்தான். கங்கைஆற்யறைக்கடந்துசென்றும் சோழர் படை சிற்சில இடங்களில்போரிட்டுவென்றது. வங்காளம் முழுவதுமே சோழப்பேர்ரசின் மேலாட்சிக்குஇணங்கிற்று.இராசேந் திரசோழனின் வடநாட்டுபடையெடுப்பில் படைத்தலைவனாக சென்ற கருநாடகக்குறுநிலமன்னன் ஒருவன் மேலை வங்கத்தில் குடியேறினான்.அவன் வழியில் பிறந்த சமந்தசேனன் என்ற ஒருவன் தோன்றி, “சேனர் பரம்பரை” ஒன்றை மேற்கு வங்காளத்தில் தொடங்கி வைத்தான். மேலும், இராசேந்திரசோழன் கங்கைக்கரையிலிருந்து சைவர்கள்(கங்கை வேளாளர்) சிலரை கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் குடியேற்றினான்(ஆதாரம்: திரிலோசன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல்).கங்கைத்திருநாட்டில் வேளாண்மைத்தொழில் செய்த வேளாளர் இன்றும்தமிழகத்தில், தங்களை கங்கைக்குலத்தவர் என்றே கூறிக்கொள்கின்றனர். வேளாளர்களுக்குக் கங்கக்குலம் அல்லது கங்க வம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத்தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டனர். (ஆதாரம்:ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் எழுதியுள்ளது).இராசேந்திரன் கிபி.1018ல் இலங்கை முழுவதையும் வென்று சோழப்பேரரசின்கீழ் கொண்டுவந்தார். முதலாம் பராந்தகச்சோழனிடம் தோற்றோடிய வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டிநாட்டு மணிமுடியையும், இந்திரஆரத்தையும், இரெத்தின சிம்மாசனத்தையும், பாண்டியனின் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டு வந்தார்.(”தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மாப்பினவே” என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதனை குறிப்பிடுவதை காண்க) மேலும் சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும் பறித்தார். இலங்கையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. சேரனும் தன்அரசுரிமையையும், செங்கதிர் வீசிய மணிமாலை ஒன்றையும் இராசேந்திரனிடம் பறிகொடுத்தான். இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்பிரதிநிதியிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான்.(கிபி.1018-19) அப்பிரதிநிதியின் பெயர் சடாவர்மன் சுந்தரபாண்டியன். இவன் 23 ஆண்டுகள் அரசாண்டான். வடநாட்டு வெற்றிகளுக்குப்பிறகு நாடுதிரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்னும் குளம் ஒன்றை வெட்டி அதில்கங்கையிலிருந்து கொண்டுவந்தநீரைசொரிந்து கங்கா ஜலமயம் ஜயஸ்தம்பம் என்று பெயரிட்டுத் தன் வெற்றிக்கு விழாகொண்டாடினான். தன்மருமகன் இராசராச நரேந்திரனை (வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவனை) வேங்கிநாட்டு மன்னனாக மணிமுடிசூட்டினான். தன்மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான்.
““களவர்” என்ற வார்த்தை மருவி “களபர்” என்ற வார்த்தை பிறந்jது. களவர் என்போர் சுத்தத் தமிழர். முக்குலத்தோர். இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு அறிந்திருப்பது அவசியம். கள்ளர் என்பதன் மூலவார்த்தை களம் ஆகும். அதிலிருந்து பிறந்ததே களவர் என்ற வார்த்தை. களவர் என்ற ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களே மறவரும் அகமுடையோரும் ஆவர். மூவரும் போர்க்களத்தொழிலையே செய்துவந்த ஒருதாய்வயிற்று மக்களாவர். போர்க்களத்தொழில் ஒரேகுடும்பத்திலிருந்து பிறந்தது. கள்ளர் என்போரே மூத்தவரானார். அவரே மற்ற இளையவர்களுக்கும் போர்பயிற்சி அளித்த குருவானார் எனலாம். தனக்கு போர்க்களத்தில் உதவிடும் பொருட்டே தன் இளையவர்களுக்கும் போர்பயிற்சிஅளித்து தன்நிழலைப்போல் பின்தொடர பழக்கியிருந்தனர் எனலாம்.
மறவர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் ஒருபிரிவினர் ஆவார். இவர்கள் வீர தீரத்துடன் ஊக்கம் காட்டி போர்புரிந்ததால், மறவர் என்று அழைக்கப்பட்டனர். மறம் என்றால் வீரம். வீரத்துடன் போரிட்ட தால் மறவர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் கோட்டைக்கு வெளியே அரணாக நின்று எதிரி படையை தடுத்துநிறுத்தி இறுதிகட்ட போர்புரிவர். இது இவர்களின் தலையாய பணியாக இருந்தது.
அகமுடையோர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் மற்றொரு பிரிவினர்ஆவார். இவர்கள் கோட்டையின்உள்ளே இருந்தபடி ,மதில்களின் மீது மறைந்து நின்றபடி கோட்டையை முற்றுகையிட வரும் எதிரியின் படைமீது குறி தவறாமல் அம்புமழை பொழிந்து, எதிரிகளை தடுத்து நிறுத்திப்போர் புரிந்தனர். வில்லில் நாண் ஏற்றி அதன் மீது அம்பைப்பூட்டி குறிதவறாமல் எதிரியின்மீது எய்தனர். அவ்வாறு எறிந்துஅவர்களைக் கொல்வதில் வல்லவர்கள். கோட்டையின் உள்ளேஇருந்தபடி போர்புரிந்ததால் அகமுடையோர் எனப்பெயர் பெற்றனர். அகம் என்றால் உள்ளே என்று பொருள்படும்.இவர்கள் கோட்டைக்கு உள்ளே இருக்கும் அரசகுடும்பத்தினர்கள், பெருந்தர மக்கள், அரசனின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலையாய கடமையாக இருந்தது அதற்காக கோட்டையின் மதில்கள்மீது நின்று அம்புமழைபொழிந்து எதிரிகளை கொன்றதோடு மட்டுமல்ல….கோட்டைப்பாதுகாப்புப ்பொறிகளையும் பயன்படுத்தி கோட்டைமீது ஏறுகின்ற எதிரிகளை தாக்கி கொன்றனர். இவ்வாறு கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளை இவர்கள் பயன்படுத்திகொன்றனர் என்பதை இளங்கோவடிகள் பாடல் மூலம்கீழ்கண்டவாறு அறிகின்றோம்:
பாடல்: “மிளையும் கிடங்கும் விளைவிற் பொறியும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் லுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் சுவையுட்ம கழுவும் புதையும் புழையும் அய்யவித் சீப்பும் முழுவிற்ற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்………………..”
பொருள்:
1)அம்பெய்யும் பொறி
2)கரிய விரலையுடைய குரங்குபோன்ற கடிக்கும் பொறி
3)கல்லெறியும் கவண்
4)கோட்டைமீதேற முயற்சிக்கும் எதிரிமீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய்
5)அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுவதற்கான பாத்திரம்
6)இரும்பு கம்பிகளைக் காய்ச்சும் உலை
7)கல்லும் கவணும் வைக்கும் கூடை
8)கோட்டைமதில்மீது ஏற முயற்சிக்கும் எதிரிமீது மாட்டி இழுக்கும் தூண்டில்
9)சங்கிலி
10)எதிரியின்மீது வீச்ச் சேவல் போன்ற பொறி
11)அகழியைத்தாண்டி மேலே ஏறும் எதிரியைத்தாக்கி கீழேதள்ளும் இயந்திரம் 1
2)திடீரென பாயும் அம்புக்கூட்டம்
13)எதிரியின்மீது தீவீசும்,தீபந்தம் மற்றும் தீப்பொறி
14)சிற்றம்புகள் எய்யும் இயந்திரம்
15)மதிலின் மேல் உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக்குத்தும் குத்தூசிகள்
16)மதிலில் ஏறியவனின் உடலைக்கிழிக்கும் இரும்பாற்செய்த பன்றி உருவமுடைய இயந்திரம்
17)மூங்கில் போன்ற உருவமுடைய இரும்பு உலக்கைகள்
18)கோட்டைக்கு ஆதரவாகப்போடப்படும் பெரிய மரக்கட்டைகள்
19)பெரியமரக்கட்டைகளை பிணைத்து குறுக்கே போடும் உத்திரங்கள்
20)தடி,ஈட்டி,வேல்,வாள் வீசும் இயந்திரப்பொறி. இக்கருவிகளைக்கொண்டு கோட்டைமீதிருக்கும் அகமுடையப்படையினர் போராடினர். இவ்வாறு போராடிய வீரர்கள் நொச்சிப்பூமாலை அணிந்துபோராடினர். எனவே, இது நொச்சித்தினை எனப்படும்.
கள்ளர், மறவர், அகமுடையோர் என்னும் மூவரும் ஒருதாய்வயிற்றில் பிறந்தவர்கள்என்பதை விசயநகரப்பேர்ரசின் அமைச்சர் வெங்கய்யா அவர்கள் 1730ல் எழுதிய “தொண்டைமான் வம்சாவளி” என்றநூல் வலியுறுத்திக்கூறுகிறது. தொண்டைமான் கள்ளர் வம்சத்தினர் என்று “இராஜதொண்டைமான் அநுராகமாலை சுவடிகூறுகிறது. பூவிந்தபுராணம், கள்ளகேசரிபுராணம் கள்ளர்,மறவர், அகமுடையோர் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் இந்திரகுலத்தார் என்றும் கூறுகின்றன. இன்றைக்கும் தேவர், சேர்வை ஆகிய பட்டங்கள் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய மூவருக்குமே உள்ளதை நுண்மான் நுழைபுலம்கொண்டு நுணுகிஆராய்ந்தால், இவர்கள் மூவரும் ஒரு தகப்பனுக்குப்பிறந்த, ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எளிதில் உணரலாம். தகப்பனின் பட்டப்பெயரே அவன் பெற்ற ஆண்மக்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நடைமுறையிலுள்ள மரபு ஆகும். அவ்வாறே தேவர், சேர்வை என்ற பட்டங்கள் ஒருதகப்பன் பெற்ற மூன்று ஆண்மக்களுக்கும்(கள்ளர்,மறவர், அகமுடையோர் ஆகிய மூன்று ஆண்மக்களுக்கும்) வந்துள்ளது. பன்னிருபடலமும், புறப்பொருள்வெண்பாமாலையும் களவர் குலத்திலிருந்து பிறந்த முக்குலத்தோர் போர் செய்த முறைகளை முக்கியமாக எட்டு தினைகளாக்கி விவரித்துக் கூறுகின்றன.அவைகள் வருமாறு:-
1)வெட்சித்தினை: வேந்தனால் ஏவிவிடப்பட்ட வெட்சிமறவர் கள்வர்கள் படை பகைஅரசனின் நாட்டிற்குள் புகுந்து காவற்படையை வென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்து, ஊர்மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துதல். “வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் வெட்சி” என்று தொல்காப்பியர் பாடியுள்ளார். மற்றொரு இடத்தில் “தன்னுறு தொழிலே வேந்துறு தொழில் என்றன்ன இருவகைத்தே வெட்சி” என்று பாடியுள்ளார்(இ.வி.சூ.602 மேற்.) வெட்சிப்பூ மாலை அணிந்து போராடியதால் இது வெட்சித்தினை ஆயிற்று.(இதன் விளக்கத்தை எம்_130 மரபணு கள்ளர்களுக்கே உள்ளது என்ற என்னுடைய மற்றொரு கட்டுரையில் காண்க)
2)கரந்தைத்தினை: வெட்சிமறவர் கள்வர்கள் படை கவர்ந்து சென்ற ஆநிரைகளை, அவர்கள் நாட்டின் ஊர்மன்றத்திற்குள் கொண்டுபோய் சேர்க்கும் முன் அவர்களை வழிமறித்து வெட்சிமறவர் கள்வர்படையை வென்று, இழந்த ஆநிரைகளை மீட்டு வருதல். இவர்கள் கரந்தைப்பூ மாலை அணிந்து போராடியதால், இது கரந்தைத்தினை ஆயிற்யறு.(வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்களே ஆவர். இதனை தொல்காப்பியரின் பன்னிருபடலத்தில் காணலாம்.)
3)வஞ்சித்தினை: பகைஅரசனின் நாட்டைக்கைப்பற்றக் கருதிய வேந்தன், பகைநாட்டின்மீது போர்தொடுத்தல். (கள்ளர், மறவர்,அகமுடையோர் ஆகிய மூன்றுபடைகளும் இணைந்து பகைமன்னனின் நாட்டின்மீது படைஎடுத்துப்போய் போர் தொடுத்தல்) வஞ்சிப்பூ மாலைஅணிந்துபோராடுவர்.
4)காஞ்சித்தினை: நாட்டைக்கவர படையெடுத்து வரும் அரசனின் படைகளை எதிர்த்து போராடுதல் (கள்ளர்,மறவர் படைகள் இணைந்து நாட்டைக்கவர வரும் எதிரி அரசனின்படைகளை எதிர்த்து நின்று போராடுதல்)
5)நொச்சித்தினை: பகைவர் படையின் முற்றுகையிலிருந்து கோட்டையை காக்க கோட்டைமீதிருந்து எதிரிகள் மீது அம்புமழைபொழிந்து தாக்கும் அகமுடையோர் படையின்(வில்லாளிகள்) போர். அகமுடையோர்படை கோட்டைமேலிருந்து அம்புமழைபொழிந்து தாக்குவர். அதேநேரத்தில், கோட்டையை முற்றுகையிடும் எதிரிபடைகளுடன் கோட்டைவாசலில் பாதுகாப்பாகநின்று கள்ளர்,மறவர் படைகள் இணைந்து எதிரியுடன் போர் செய்வர். நொச்சிப்பூமாலை அணிந்து போராடுவர்.
6)உழிஞைத்தினை: பகைவரது கோட்டையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு, கோட்டையின்காவலை உடைத்து, கோட்டைக்குள்புக எதிரிநாட்டரசன் படைகள் நடத்தும்போர். எதிரிநாட்டின் கள்ளர், மறவர் அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் மூன்றும் இணைந்து நடத்தும்போர். உழிஞைப்பூ மாலை அணிந்து போராடுவர்.
7)தும்பைத்தினை: இரண்டு நாட்டு அரசர்களின் படைகளும் நேருக்கு நேர் மோதி நடத்தும் இறுதிகட்டப் போர். (இப்போரில் இரண்டு நாடுகளின் கள்ளர்,மறவர்,அகமுடையோர்(வில்லா ளிகள்) படைகள் நேருக்குநேர் கடுமையாக மோதிக்கொள்ளும் இறுதிகட்டப்போர். தும்பைப்பூ மாலை அணிந்து போராடுவர்..
8)வாகைத்தினை: இரண்டு நாடுகளின் கள்ளர், மறவர், அகமுடையோர்படைகளும் போரிட்டு ஒருநாடு வெற்றி வாகைசூடும் போர். வெற்றிபெற்ற படைகள் வாகைப்பூ மாலை சூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர்
கள்ளர் என்ற வார்த்தை களம் என்ற மூலவார்த்தையிலிருந்து பிறந்ததுபோல், வேறு எந்த இனமும், களம் என்ற வார்த்தையிலிருந்து பிறக்கவில்லை. இந்த அடிப்படைஉண்மையை அறியாது எழுதப்படும் வரலாறு, பெருக்கல்வாய்ப்பாடு அறியாத மாணவன் போடுகின்ற கணக்கின் விடைபோல் தவறாகவே முடிந்துவிடும்.களவர் குலத்தினராகிய நம்முன்னோர்கள் ஆற்றிய போரினையே 2300ஆண்டுகளுக்கு முன் அகத்தியரின் மாணவர்களாகிய பன்னிருவர் எழுதியுள்ளனர். அப்பன்னிரு மாணவர்களில் முக்கியமானவர் தொல்காப்பியர். தொல்காப்பியரே முதல் இருபடலங்களை எழுதியுள்ளார். அவ்விரு படலங்களே வெட்சித்தினையும் கரந்தைத்தினையும் ஆகும். வெட்சிச்தினையிலும் கரந்தைத்தினையிலும் கள்ளர்கள் ஆற்றிய போரையே தொல்காப்பியர் தெளிவாக பாடியுள்ளார். அதன்பிறகு ஐயனாரிதனார் என்னும் சேரர்குடியைச்சேர்ந்த புலவரும் கி,பி,9ஆம் நூற்றாண்டில் புறப்பொருள்வெண்பாமாலையை பாடியுள்ளார். இப்பன்னிருபடலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் களவர் என்ற நம் முன்னோர்கள் ஆற்றிய குலத்தொழில் போரைமிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டுகின்றன.
இக்களவர் என்ற பெயரையே, இராஜராஜசோழனின் கல்வெட்டில் கள்வன் ராஜராஜன் என்றும் களப ராஜராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். “களப” என்ற வார்த்தையும் “கள்வன்” என்ற வார்த்தையும் கள்ளர் இனத்தைக்குறிக்கும் இரு வார்த்தைகளாகும். இவ்விருவார்த்தைகளும் ஒரே பொருளைத்தன் குறிக்கின்றன. எனவேதான், கல்வெட்டு 1ல் “களப என்றும் மற்றொரு கல்வெட்டில் களப என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அவ்வார்த்தைக்குப்பதிலாக எளிதில் புரியக்கூடிய “கள்வன்” என்ற வார்த்தையையும் வெட்டிவைத்துள்ளனர். இவ்வார்த்தைகள் கள்ளர்கள் முற்காலத்தில் செய்த குலத்தொழிலைக்குறிக்கும் காரணப்பெயர்களாகும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எனவே, சோழமன்னர்கள் அனைவரும் வீரஇனமாகிய கள்ளர் குலத்தவரே ஆவர்...
பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்:
1. மாநில எல்லை சீரமைப்பில் காமராஜ் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய வியாபாரி நாடர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளை சென்னை மாகாணத்தோடு இணைப்பதில் காட்டிய அக்கறையினை கேரள இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேடு, தேவிகுளம், முல்லைப் பெரியாறு, தேக்கடி, குமுளி, மூன்று போன்ற நாடார் இன மக்கள் வசிக்காத மூப்பனார், நாயக்கர், தேவமார், அரிசன், இஸ்லாமியர் வாழும் பகுதிகளை இணைப்பதில் அக்கறை கட்டவில்லை. இன்று வரை இப்பகுதி வாழ் தமிழ் மக்கள் காமராஜ் நாடார் மீது பெரும் மனக்குறையுடன் தான் கேரளா மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அன்றே… இப்பகுதி இணைப்பு குறித்து எதிர்க்கட்சிகளும், எல்லாப் பத்திரிக்கைகளும், எவ்வளவோ எழுதியும் காமராஜ் நாடார் கண்டு கொள்ளதவராகவே இருந்து விட்டார்.
2. 1954-ல் மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு தமிழ்நாடு முதன் மந்திரி பதவி மீது காமராஜ் நாடாருக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கு மற்றக் கட்சி தலைவர்களிடமும், சுய மரியாதை இயக்கத் தலைவர்களிடமும், ஆதரவு கேட்டுப் பெற்ற காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரிடம் ஆதரவு கேட்க, ஸ்ரீ வரதராஜுலு நாய்டு வீட்டில் சந்திப்பு நடக்கிறது. அவரிடம் காமராஜ் மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியோடு இருப்பது நல்லது என்றும் “உங்களைப்பற்றித் தெரியும் (காமராஜ் நாடார் இனப்பற்று மிக்கவர்) இந்தப் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என்றும் பசும்பொன் பெருமகனார் மறுத்துவிட காமராஜ் நாடாருக்கு தேவர் மீது வெறுப்பு தோன்றுகிறது.
3. இதற்கு முன்னரே பசும்பொன் பெருமகனார் பற்பல கூட்டங்களில் விருதுநகர் வியாபாரிகள் பற்றிப் பேசி வந்தார்.
“நிலத்தில் எடுக்கப்படும் இரும்பு, தங்கம், வெள்ளி, நிலக்கரி, பெட்ரோல் பெருட்கள், புகையிலை, கரும்பு, உலோகம் மற்றும் தாதுப் பொருட்கள் முதலான விலைப் பொருட்களை அரசே எடுத்துக் கொண்டு, அதற்குரிய விலையை நிர்ணயம் செய்கிறது.
ஆனால் தரமாக விளையக்கூடிய பொருட்களை விவசாயிடமிருந்து வாங்கி, அதைத் தரம் பிரித்து வணிகம் செய்து, தரமில்லாத பொருட்களை கலப்படம் செய்து விற்று, அதை உண்ண வைக்கிறார்கள்”.
“வயலில் இடுப்பொடிய விவசாயம் செய்கிறான் நம் விவசாயி. உடப்பில் உப்புப்பரிய பருத்தி எடுக்கிறாள் எம் பெண் மக்கள். ஆனால் அதற்கு விலை வைப்பதோ விருதுநகர் வியாபாரி. இது எந்த வகை நியாயம்! இதையெல்லாம் அரசாங்கம் நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்க செய்ய வேண்டாமா? என்று மேடையில் பேசினார்.
விருதுநகர் வியாபாரிகள் கலப்படம் செய்து, தரமில்லாத பொருட்களை விற்கிறார்கள். வியாபாரம் தர்மத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்கிறார்கள் என்று பல கூடங்களில் பேசி வந்தார்கள்.
அன்றைய சினிமாவிலும், நாடக மேடைகளிலும் கலப்படம் பற்றிய பாட்டுக்கள் பல வந்துள்ளன. உதாரணமாக ஒரு பாட்டு….
“இருந்தா முக்காலணா
இல்லேன்னா காலணா! லேபிள்
இருந்தா முக்காலணா
இல்லேன்னா காலணா!
பழைய புட்டி, பழைய டப்பா….
டப்பா….டப்பா….என்ன டப்பா!
என்ற பாட்டு அப்போது மிகவும் பிரபலம். இது விருதுநகர் நாடார் வியாபாரிகளுக்கேன்றே எழுதப்பட்டது போலிருக்கும்.
அப்போது கார்லிக்ஸ் டப்பா டின், பால்பவுடர் டப்பா, முகப்பவுடர் டப்பா, காப்பித்தூள் டாப்பா, டின்கள் இவைகளின் லேபிள் கிழியாமல் இருந்து கொடுக்கப்படும் டப்பா, மற்றும் டின்களுக்கு கூடிதல் காசும், லேபிள் இல்லாமலும், கிழிந்தும் இருக்கும் டப்பா மற்றும் டின்களுக்கு குறைந்த காசும் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள், கூடை வியாபாரிகளான நாடார் வியாபாரிகள். இவைகள் அன்று கலப்படம் செய்து விர்ப்பதர்க்கு பயன்பட்டன.
இப்படியெல்லாம் பசும்பொன் பெருமகனார் பேசியதனால் தூத்துக்குடி நாடார் வியாபாரி ஒருவர் கோபம் கொண்டு “இவரை வெட்டிப் போட்டுவிட்டு ஜெயிலுக்கு போனால் தப்பில்லை” என்று பேசியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பெருமகனாரும்….
“என் ஒருவனைக் கொள்வதனால்; அவர்களுக்கு திருப்தி எனில், என்னை கொன்று விட்டுப் போகட்டும். நான் இறந்தாலும்; என் போன்ற ஆயிரமாயிரம் முத்துராமலிங்கத்தைப் பெற்றெடுக்கும் சக்தியுள்ளவள் என் பாரத மாதா!” என்று பேசினார்.
4. பசும்பொன் பெருமகனார், காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்று பல மேடைகளில் பேசினார். இது பற்றி திரு.கே.ஆர்.நல்லசிவம், எம்.எல்.ஏ. அவர்கள் 1957 அக்டோபர் மாதம் 29ந் தேதி சென்னை மாகாண சட்டசபை கூட்டத் தொடரில் ஒரு கேள்வி எழுப்பிகிறார்.
“ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் திரு. காமாராஜ் நாடார் அவர்கள் கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகிப்பதற்கு உடந்தையாக உள்ளார்கள் எனக் குறிப்பிட்டதாகச் செய்தி வந்தது. நாட்டிலும் இது பற்றி அநேகப் பேச்சுக்கள்!
குறிப்பாக….
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வந்திருக்கிறது. விலைவாசிகள் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. சர்க்கார் ஒரு பங்கு அதாவது 500 கோடி ரூபாய்க்கு நூறுகள் வெளியிட்டார்கள் என்றால்…. அதைபோல் வெளியில் இருப்பவர்கள் இன்னொரு மடங்கு 500 கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சிட்டார்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்” என்று பேசுகிறார்.
அதற்கு காமராஜ் நாடரின் பதில்…
திரு. காமராஜ் (தமிழக முதல்வர்): நான் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகிக்கிறேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா! அச்சிட்டு விநியோகிக்க நான் உடந்தையாக இருக்கிறேன் என்பது போலவே பேச்சு இருக்கிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா?
திரு.கே.ஆர்.நல்லசிவம், (எம்.எல்.ஏ): உண்மையிலேயே அவர் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்று தான் கேள்விப்பட்டேன். செல்வாக்குள்ள பத்திரிக்கைகளில், பத்தாயிரம், இருபதாயிரம் பிரசுரமாகிற பத்திரிக்கைகளில் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆகவே இது பொய் என்பதை நிரூபிப்பதற்காகவாவது ஏன் அப்போதே முதல் மந்திரி அவர்கள் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு தொடரவில்லை என்று தான் கேட்கிறேன்.
உண்மையில் அந்தக் குற்றச்சாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றால் நாட்டுமக்கள் உண்மையை அறிந்து கொள்ள, அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்திய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு நடத்தியிருக்கவேண்டும். அவர் என்ன சாதாரணமானவரா? ஒரு பொறுப்புள்ள அங்கத்தினர். பாராளுமன்ற உறுப்பினர்.
இந்தக் கேள்விகளுக்கு காமராஜ் நாடார் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.
(“சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு” பக்கம் 85-86 )
5. பசும்பொன் பெருமகனார், சென்னை திருவல்லிக்கேணி கூட்டத்தில் காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிக்கத் துணை போகிறார் என்று பேசியதைக் கேட்ட ஐ.ஜியின் நடவடிக்கையால் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் விருதுநகர் நாடார் வியாபாரி நாராயணசாமி கைது செய்யப்படுகிறார். ஆனால் அவரை காமராஜ் நாடார் சிபார்சு செய்து, வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க இயலாதவாறு செய்து விடுவிக்கப்படுகிறார்.
அந்த விருதுநகர் வியாபாரி மீது நடவடிக்க எடுக்கப்பட்டதா என்று சட்டசபையில் கேள்வி கேட்டபோது திரு. காமராஜ் நாடாருக்குப் பதிலாக திரு.கே.சி.சுப்பிரமணியம் பதில் கூறுகிறார்.
“இந்த கேஸை மேற்கொண்டு நடத்த முடியவில்லை!” என்று கூறுகிறார். ஏனெனில் காமராஜ் நாடார் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கும். அதனால் மூடி மறைத்துவிட்டார்கள்.
(“தேவரின் மேடை பேச்சு” பக்கம் 64 )
6. அப்போது காமராஜ் நாடாரின் மந்திரி சபையில் மந்திர்கள் லஞ்சம் வாங்கியது சம்பந்தமாக பசும்பொன் பெருமகனார் குற்றம் சாட்டிப் பேசினார். காமராஜ் நாடாரின் சக மந்திரி ஒருவர் லஞ்சமாக பணம் பெற்றுக் கொள்ளாமல், ஒருவரிடம் “ப்ளாங்க் செக்’ வாங்கிய விவகாரம் அப்போது பிரபலமாகப் பேசப் பட்டது. அம்மாதிரி பெயர் பி.பரமேஸ்வரன். அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கப் படவில்லை.
7. 1955-ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வில் (Tண்Pஸ்C) சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு செய்ததில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாடார் இன மக்களாகவே காமராஜ் நாடரின் சிபாரிச்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். கள்ள நோட்டு அச்சிட்டதாக அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான தேனி தியாகராஜன் அவர்கள் மீது வதந்திகளும், கோயம்புத்தூர் கிருஷ்ணன் (மில் அதிபர்) மீது நூறு ரூபாய் கள்ள நோட்டு வழக்கும், நடந்த செய்தி தமிழகம் மற்றும் இந்தியாவையே உலுக்கியது.
8. உண்மையான காங்கிரஸ்காரர்களும், காமராஜ் நாடாரால் மனம் நொந்து போன தேசியவாதிகளும் சேர்ந்து, பசும்பொன் பெருமகனார் தலைமையில் சீர்திருத்தக் காங்கிரஸ் போன்ற கட்சியை தோற்றுவித்து, 1957 தேர்தலில் 80 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றிகளினால் அதிர்ச்சியடைந்த காமராஜ் நாடாருக்கு, அடுத்த தேர்தலில் சீர்திருத்த காங்கிரஸ் ஜெயித்து வந்து ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தோன்றத் தொடங்கியது. இதனால் காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று துடிக்கிறார்.
9. 1955-ல் பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் சீலபத்ரயாஜி மூலம் காங்கிரஸ் கட்சியில் பார்வர்டு பிளாக் கட்சியை இணைக்க நடந்த முயற்சியை பசும்பொன் பெருமகனார் தடுத்து விட்டதோடு, நேரு நடத்திய இணைப்பு நாடகத்தை போலி என்று மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கியது நேருவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
10. இரண்டாம் முறை பர்மா சென்று வந்த பசும்பொன் பெருமகனார் “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை பார்த்து விட்டு தான் வருகிறேன். இப்போது அவர் யுத்த முனையில் இருக்கிறார்” என்று கல்கத்தாவில் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் பேசியது; நேதாஜி இறந்து விட்டார் என்று நம்ப வைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்த நேருவுக்கு மிகுந்த கோபத்தோடு தலைவலியைக் கொடுத்தது.
“உண்மையான சுதந்திரம் 1937லிலேயே வந்திருக்க வேண்டும். பத்து வருட கால தாமததிருக்கு காரணமே, அப்போதுள்ள காங்கிரஸ்காரர்கள் தான்” என்றும்
மேலும் “நாம் அடைந்துள்ள இந்த சுதந்திரமானது முழுச் சுதந்திரமல்ல. மூளிச் சுதந்திரம். மவுண்ட் பேட்டனின் பிரித்தாளும் தந்திர முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரதத் தாய் கைகளுக்கு இரட்டை விலங்கு போடப்பட்ட நாள் தான் ஆகஸ்ட் 15ம் நாள். மேலும் மூன்றாவது உலகப் போர் தொடங்கும் காலத்தில் நேதாஜி சுபாஸ் பாபு தக்க நேரத்தில் தனது சேனையோடு பாரதத்திற்குள் பிரவேசிப்பார். அக்காலத்தில் நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கச் செய்வார்” என்று பசும்பொன் பெருமகனாரது ஆணித்தரமான பேச்சும்,
“இந்தியாவின் வீரமகனான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தலையை அடமானமாக வைத்துதான் பிரிட்டிசாரிடம் சுதந்திரம் பெற்றது காங்கிரஸ். இது கேவலமான சுதந்திரம்” என்றும் பேசியது நேருவுக்கு எரிச்சலை ஊட்டியது.
1937லிருந்து தொடர்ந்து எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருப்பவரை எப்படியாவது பாராளுமன்றத்திற்கு வரவிடாமல் செய்து விடுங்கள் என்று காமராஜ் நாடாருக்கு நேரு கட்டளை இடுகிறார்.
மேலே நேருவுக்கு நேதாஜி சம்பந்தமாக பசும்பொன் பெருமகனரால் பெரும் தலைவலி, நெருக்கடி, கீழே தமிழ்நாட்டில் காமாராஜ் நாடாருக்கு தன் இனமக்கள் பிரச்சனைகளைப் பேசியதால் இடைஞ்சல் ஆகியவை தனி மனிதரான பசும்பொன் பெருமகனாரை நேரிடையாக சந்திக்க முடியாமல்…
இரண்டு அரசுகளின் மூலம் ஒரு சதித் திட்டம் தீட்டப்படுகிறது. அதுதான் இராமநாதபுரம் ஜாதிக் கலவரம். அதற்கு பகடைக் காயாகப் பயன்படுத்தப் பட்டு பலிகடாவாக ஆக்கப்பட்டவர்தான் காங்கிரசின் பிரதிநிதியான திரு. இம்மானுவேல் அவர்கள்.
அப்போதைய முதல் மந்திரியான காமராஜ் நாடாரின் ஆலோசனையின் பேரில், அரிசன நலத்துறை மந்திரியான கக்கன் அவர்களும் இம்மானுவேலுக்கு கட்சியில் பல பதவி தருவதாகக் கூறினார். அரிசனங்களின் ரிசர்வ் தொகுதிகளில் தேர்தலுக்கு நிற்பதர்க்கான தகுதி இந்து-அரிசனுக்குத் தான் உண்டு. ஆகவே கிறிஸ்தவரான இம்மனுவேலுவை இந்து மதத்திற்கு மாற்றி இம்மானுவேல் சேகரன் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். ஆனால் கக்கன் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், காமராஜ் நாடார் எந்த பதவியும் அவருக்குத் தராமல் காலதாமதம் செய்தார். இதை அப்போதைய அரிசன மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர்.
மேற்கூறியவைகள் எல்லாம் காமராஜ் நாடார் படிக்காதவராக இருந்தாலும், தனது இன மக்களுக்கு அனுசரணையாகவும், கூடுதல் பற்றுதலுடனும் இருந்தார் என்பதற்கு சான்றாகவும், பசும்பொன் பெருமகனாருக்கு எதிராக செயல்பட தூண்டிய காரணிகள் என்பதுவும் வெள்ளிடைமலை.
நன்றி :
தனியன்.
கீழத்தூவல் தேவரின ஐவர் படுகொலை
1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், கீழத்தூவலை சேர்ந்த தவசியாண்டி தேவர், சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் ஆகியோரை காவல்துறையினர் கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற தினத்தை தேவர் சமூகத்தினர், கீழத்தூவலில் ஆண்டு தோறும் செப்டம்பர் பதினான்காம் நாள் வீர வணக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.
வரலாற்று பக்கங்களில் மறைக்கமுடியாத உண்மைகள் சில:
தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது.
இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட காவல் துறையினர் உட்பட பெரிய காவல்துறை அதிகாரிகளைக் கலந்து பேசினார்.தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய, அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதன் ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்தனர் காவல் துறையினர்.
கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் "ரே" அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட தவசியாண்டி தேவர் , சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் யென்ற ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான்.
அங்கே, கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ...? என்று அறியாமல் கைகளும் கால்களும், கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் சுட்டுக் கொன்றார்கள்.துப்பாக்கியின் வெடி சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே...? ரத்த வெறி பிடித்தஇன்ஸ்பெக்டர் "ரே" , அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.
அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம் என்ன...? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை...? முத்துராமலிங்க தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்திற்காக தான், அந்த ஐந்து அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றனர்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இளைஞர்களின் உடல்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத சோதனை நடத்திய பின் ரகசியமாய் போலிசாரே எரித்து விட்டனர். இதுதான் இன்றுவரைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலை சம்பவமாகும்.
கீழத்தூவல் படுகொலைக்கு பின்பும் காங்கிரச அரசின் கொலைவெறி
கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை...? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.
காங்கிரஸ் அரசின் வெறித்தனம்
மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்" என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்...? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.
தேவரை கைதுசெய்ய தீவிரம் காட்டிய காங்கிரஸ் :
இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா...? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, முத்துராமலிங்க தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன.
இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது.
தேவரை கைது செய்து மகிழ்ந்த காங்கிரஸ்:
தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர். தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, "மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.
_
Monday, 26 September 2011
ஏர்டெல் இலவச இன்டர்நெட் வேண்டுமா?
என்னடா இப்போ இதல்லாம் இலவசமா தராங்களான்னு நினைக்கிறீங்களா இது உங்கவீட்டு கணிப்பொறிக்கு இல்லை உங்க மொபைல் போனுக்குதான் இந்த மென்பொருளின் பெயர் டீசார்க் இது நோக்கியாவின் என் சீரிஸ்ல மட்டும்தான் வேலை செய்யும் மேலும் சில மொபைலிலும் வேலை செய்யும்னு சொல்றாங்க ஆனால் நான் நோக்கியாவின் என் சீரிஸ்லதான் வேலை செய்கின்றேன். இது எப்படி சாத்தியம் ஆம் அதாவது இது சிறிய கேச்சி போன்று வேலை செய்து குறிப்பிட்ட வெப்தளங்களின் பக்கங்களை சேமித்துவைத்துக்கொள்ளும் இதனைதான் நாம் மொபைல் போனில் பார்க்கின்றோம். மேலும் இது பல வசதிகளை கொண்டு உள்ளது. இதனில் உள்ள மிகப்பெறிய குறை என்ன வென்றால் இதை பயன் படுத்தி எதையும் நாம் டவுன்லோட் செய்ய இயலாது.இதை பயன் படுத்தி சில படங்களை தேடுதல் வளைதளங்களை தேடுதல் போன்ற வேலைகளை செய்யலாம்.இதை டவுன்லோட் செய்ய கூகில் சேர்ச்சில்"teeshark-411 free download" இதை கொடுங்கள் பின்பு டவுன்லோட் செய்ய.
Sunday, 25 September 2011
Tuesday, 20 September 2011
devarsrini
என் தேவரின் மேல் கொண்ட பக்தி தீவிரம்,
என் இனத்தின் மேல் கொண்ட காதல் தீவிரம்,
என் உறவுகள் மேல் கொண்ட அன்பு தீவிரம்,
என் ஊரின் மேல் கொண்ட அக்கறை தீவிரம்,
என் நட்பின் மேல் கொண்ட நம்பிக்கை தீவிரம்,
மற்ற உயிரின் மேல் என் கருனை தீவிரம்,
என்னைப்பற்றி எனக்குள் ஆர்வம் தீவிரம்,
ஆம்! நான் தீவிரவாதிதான்!!!!!.
அடிப்படை அன்பு ஒன்றே வண்ம
சரித்திரத்தைப் பேசும் சமூக அக்கறையுள்ள குறும்படம் ரேகை
மருதிருவர் குறும்படத்தை இயக்கிய தினகரன் ஜெய், ஜெகமதி கலைக்கூடத்துக்காக இயக்கியிருக்கும் இன்னொரு சரித்திர ஆவணம் - ரேகை குறும்படம். அவருடைய முதல் முயற்சியான மருதிருவர் படத்தில் மருது சகோதரர்களின் விடுதலைப்போர் வரலாற்றையும் ஆலயங்களுக்கு அவர்கள் ஆற்றிய திருப்பணிகளையும், நல்ல ஓவியங்கள் மற்றும் ஆவணங்களின் வழியாகக் காட்சிப்படுத்தியிருந்தார் தினகரன் ஜெய். ரேகை படமும் தமிழக விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பு உடையது.
பிரிட்டிஷ் அரசின் ஆளுகையில் இருந்த நாடுகளில் அவர்களுக்கு எதிராகக் கலகத்தில் இறங்கிய இனக் குழுக்களையும் சமூகங்களையும் அடக்கி ஆளுவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசு கடைப் பிடித்தது. அதில் ஒன்று ""குற்றப் பழங்குடிகள் சட்டம்''. 1911ல் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நான்கு முறை திருத்தி அமைக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என்று நாடு முழுதும் கணக்கெடுக்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்திய இனக்குழுக்களைத் தேர்ந்தெடுத்தனர். தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட சுமார் 90க்கும் மேற்பட்ட சாதியரை இந்தக் கொடுஞ் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தினர். இதில் குறிப்பாக பிற மலைக்கள்ளர்கள் இச்சட்டத்தின் கீழ் மிகவும் அதிகமாகக் கொடுமைப் படுத்தப் பட்டனர். சுமார் 15000 பேர் கண்காணிக்கப்பட்டு பலர் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றனர் என இந்த சட்டத்தின் கொடுமையை சொல்லி விரிகிறது திரைப்படம்.
இதற்கு எதிரான கிளர்ச்சிகள் பல இடங்களில் வெடித்தன. ஆனால் போலீசாரோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்கத் தூண்டி விட்டனர். பிறமலைக் கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. போலீசுக்குப் பிடிக்காதவர்களும் இந்தச் சட்டத்தால் பெரிதும் பழி வாங்கப் பட்டனர். 1920ன் இறுதியில் போலீஸ் ரேகை நிபந்தனையை விதித்தது. இந்தக் கொடுமையான சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்ட குழுக்களில் இருக்கும் ஆண்கள் அனைவரும் தங்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்ட பதிவேட்டில் தங்கள் கைவிரல் ரேகையைப் பதித்து விட்டு இரவு முழுதும் காவல் நிலையத்திலேயே தங்க வேண்டும். அதில் மேலும் கொடுமை என்னவென்றால் அதிகப் போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் பல கிராமத்தில் வசித்தவர்களுக்கு நடந்து வந்து காவல் நிலையம் சேரவே பல மணி நேரங்கள் பிடித்தன. அந்த இனக்குழுக்களைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் அடைந்த துயரங்களுக்கு அளவே இல்லை.
இதை எதிர்த்து 1920, ஏப்ரல் 3 அன்று பெருங்காமநல்லூரில் பெரும் கலவரம் வெடித்தது. படையாச்சி, ஆதிதிராவிடர் போன்ற பல சாதியினரும் இதற்கு எதிராகக் கிளம்பினார்கள். கிளர்ச்சியாளர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ""கட்டை விரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப்போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே'' என முத்துராமலிங்கத் தேவர் முழங்கினார். வன்னியகுல சத்திரிய சபா நடத்திய ரேகை சட்ட ஒழிப்புப் போராட்டம், செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை நடத்திய ரேகை எதிர்ப்புப் போராட்டம் எனப் பல போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. ஒரு வழியாக 1947 ஜ÷ன் 05ல் ரேகை சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஒரு பரந்த வரலாற்றை, குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கதையை, அவர்களுடைய போராட்டத்தின் கதையை திறம்படச் சொல்லிச் செல்கிறது படம். இந்தப் படத்தின் சிறப்பு அம்சம் என்று சொல்ல வேண்டும் என்றால், ஆவணப்படமாக இருந்தும், ஆவணங்களையும் ஓவியங்களையும் மட்டும் துணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தேர்ந்தெடுக்கப் பட்ட சம்பவங்களை நடிகர்களை வைத்து நடிக்க வைத்துப் படமாக்கி இருப்பதும் படத்தின் கதை சொல்லும் களத்தை வலுவாக்குகிறது.இந்திய சுதந்திரப்போர் குறித்த சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறும் குற்றப்பரம்பரை சட்டம் மற்றும் அதன் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றையும் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்னும் சமூகப் பொறுப்புடனும் அக்கறையுடனும் இந்தப் படைப்பினை வழங்கியிருக்கும் ஜெகமதி கலைக்கூடமும் தயாரிப்பாளர் சி.தீனதயாளபாண்டியனும் எழுதி இயக்கிய தினகரன் ஜெய் மற்றும் இதில் ஈடுபட்ட கலைஞர்கள் அனைவரும் நம் பாராட்டுக்கு உரியவர்கள். சமீபத்தில் ரேகை குறும்படம் மக்கள் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி.
மற்ற தொலைக்காட்சி நிலையங்களும், தினகரன் ஜெய் போன்ற இயக்குநர்களையும் ரேகை போன்ற சமூக அக்கறையுள்ள படைப்புக்களையும் ஊக்குவிக்க வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் தமிழில் பேச முடியாத தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அபத்தமான பேட்டிகளையும் தரமற்ற படங்களுக்கும் நடிகர்களுக்கும் அரசியல் காரணங்களால் தரப்படும் தராதரமல்லாத விளம்பரங்கள் மற்றும் விருதுகள் வழியாக பார்வையாளர்களிடையே கருத்துத் திணிப்பு செய்வதையும் மற்ற மூன்றாம் தரமான கண்றாவிகளையும் சற்றுக் குறைத்து இவை போன்ற நல்ல திரைப்படங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். இதனால் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை எடுக்க முன் வருபவர்களுக்கு மேலும் ஊக்கம் தருவதாக அது அமையும் இல்லையா?
நன்றி : http://sanimoolai.blogspot. com/
கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத படைப்பு..
போட்டோஷாப் கலைஞர்களா நீங்கள்? இது சாத்தியமா ?
போட்டோ சாப் எனும் மென்பொருள் மூலமாக பல கிராபிக் வேலைகளை செய்ய முடியும் . புகைப்படத்துறையிலும் போட்டோசாப் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நன்றி புதியஉலகம்.காம்
ஆனால் இந்த போட்டோ சாப் மூலம் ஒரு கலைஞர் ஓவியத்தை வரைந்து பார்ப்பவர்களை வியக்கவைத்திருக்கிறார். வெறும் கோடுகளால் ஆரம்பித்து முப்பரிமாணத்தில் ஒரு பெண்ணின் தோற்றத்தை வரைந்து வியக்கை வைத்துள்ளார் அந்நபர்.
இவரின் திறமையை நீங்களும் பாருங்கள்..
நன்றி புதியஉலகம்.காம்
Subscribe to:
Posts (Atom)