engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Sunday, 16 October 2011

கள்ளர் குல மாமனிதர்கள்

Picture
காலத்தால் அழியா புகழ் பெற்ற கள்ளர் சரித்திர நாயகன்ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
தமிழக மக்களால் நாட்டர் ஐயா என
பாசமுடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்.அவர்கள் தஞ்சைமாவட்டத்தில்திருவையாற்றுக் கருகிலுள்ள  நடுக்காவேரி என்னும் சிற்றூரில் கள்ளர்குலத்தோன்றலாகிய வீ. முத்துச்சாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும்நன்மகனாய் 12-04-1884 இல் பிறந்தார்.
இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம்திரிபரப்பயின்று, மதுரை தமிழ் சங்கம் நடத்திய பிரவெச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905, 1906, 1907) முறையாகஎழுதி முதன்மையாக தேர்ச்சி பெற்று, மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தபெருமாகனாராகிய பண்டித் துரை தேவர் அவர்களால்தங்கப் பதக்கக்ங்களும். தங்கத்தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள்.தாமே பயின்ற தமிழ்பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் ப்ணிபுரிய அழைத்த கல்வி நிருவனங்கள்பல.கோயம்பத்தூர் தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக ஒரு ஆண்டும்திருச்சி பிஷப் கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியரரக 24 ஆண்டுகளும்  அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் தமிழ பேராசிரியராக 7 ஆண்டுகளும் பணி புரிந்து ஒய்வு பெற்றார்.பின் தமிழ் வேள் உமா மகேஸ்வரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தை புலவர் கல்லூரியில்4 ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்துசிரப்பித்தார்கள்.

1940
ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமில் மா நாட்டில்நாவலர் என்னும் சிரப்புபட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப்பெற்றது. ஐயா அவர்கள்எழுதிய உரைகள், தமிழ் ஆராச்சி நூல்கள் பல. 1921 -22 இல் திருவருட் கல்லூரி ஒன்ற்றுநிறுவ முயற்சி செய்து நிறைவேறாமல் போக , 1925 - 26 இல் தஞ்சை அல்லது திருச்சியில்தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்பெற வேண்டுமென்று விரும்பி அப்போதைய அமைச்சர்டி.என். சிவஞானம்பிள்ளை அவர்கள் தலைமையில் அமைத்த செயற்குழுவில் உறுப்பினராகஇருந்து செயலாற்றிச் சிற்ப்பித்தார்கள்எளிய வாழ்வும் இனிய நோக்கமும்கொண்டவர், நெஞ்சிலுரமும் நேர்மைத் திறமும் மிக்கவர். சிறந்த புலமையாளர், உயர்ந்தபண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றிய நாட்டர் 28-3.1944 அனறு தம் மணி விழா நடை பெறுவதற்கு இருவராத்திற்கு முன் காலமானார். அன்னாரின் உடல்பிறந்த மண்னணில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின்படி பூசை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இக்காலத்தில் தமிழ் புலவர் ஒருவருக்காகஎழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இதுவே.

நாட்டாராய்யாவின் அகன்ற அறிவு.
ஆழ்ந்தபுலமை.
தெளிந்த ஆய்வு.
தேர்ந்த எழுத்துத்திறன்.
பேச்சாற்றல்.
படைப்பாற்றல்.
உரைவளம்.
மனவளம்.
மனிதநேயம்.
போன்ற சிறப்புகளையெல்லாம் எதிர்கால இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்துநடை, பேச்சுநடை இரண்டிற்கும்
தூய நடை எடுத்துவைத்தார்.
உயர்வான தமிழ் வளர்த்தார்.
உலகில் நல்ல பேர்வளர்த்தார்.
தமிழுக்குப் பெருமைதனைத்தான் வளர்த்தார்.
உலகுள்ளவரை தமிழ் வாழும்.
தமிழுள்ளவரை நாட்டார்தம் புகழ் வளரும்.


N.P.Manicham

Picture
N.P.MANICHAM N.P. Manicham Errthaandaar (ந.பா.மாணிக்கம் ஏற்றாண்டார்), popularly Known as Makkal Thondar Manichanar, was a Major Philanthropist, Poprietor-Editor of Urimai Murasu Weekly magazine, Founder of Mukkulathor School, Tamilnadu Manavar Illam, Parimanam Primary School and General secretary of Mukkulathor Sangam.
Early Days
N.P. Manicham Errthaandaar was born in 1917 at Errthandar Patti, also known as Natarajapuram, a Small Village in Trichirapalli District, Tamilnadu, to Parimanam Errthandar and Unnamalai Ammal in a Kallar Landlord Family.

For his higher secondary education he joined in ER Higher Secondary School, those days there were only Brahmin students studying in ER school, some of his Collogues (From Brahmin Society) have asked him why he has to study while he has more wealth and vast agricultural land. Manichanar was upset because of there behavior, This discriminatory attitude made him moved to Government Higher Secondary school Lalgudi, and Become Close Friend to Anbil P. Dharmalingam, during school days itself he provided food for the poors, then he and Anbil P. Dharmalingam have Started Kallar Hostel (Kallar Manavar Viduthi) in Lalgudi for Poors, Mr. Chandrahassan I.A.S, Former Leader- Raja Rajan Kalvi Panbattu Kalagam (Official organization for Kallars) was also staying in that Hostel.

Social Welfare
Before Independence there were less no of schools in south Tamilnadu, poor children don’t have access to their basic education and health facilities. In 1945 Manichanar, Founded Mukkulathor School in Thiruverumbur, Trichirapalli with the help of his Friends and Relations for the children of the poors. a mentionable person donated for that School is Nadigar Thilagam Sivaji Ganesan.

He was the Founder-Editor, Publisher of Urimai Murasu, a weekly Magazine for the Welfare of Backward classes, their Education and social Status. Manichanar Founded Tamilnadu Manavar Illam in 1954 in Kailasapuram, Trichirapalli, a hostel for orphans who either lost their father or both the parents are provided free education, food and accommodation.

Mukkulathor Sangam
He Joined with Pasumpon Muthuramalinga Thevar, P. K. Mookayya Thevar, Andiappa thevar and Served as a General Secretary of Mukkulathor Sangam. Manichanar Participate and Led nationwide campaigns for expanding initiatives against untouchability Brothers to participate in Golden Jubilee function of Mukkulathor sangam. To portray him Mukkulathor Sangam given him a title Mukkula Vendar.
 (Of Dalits), ignorance and poverty, he exhorted backward class and Scheduled Caste peoples for Self Respect. He is the person who Made Pudhukottai Kaduvetiyar to serve for his society and Vandayar
Later Life and Death
Till death he continued serve for his Society, poors, orphans, and for the upliftment of backward and Scheduled Castes. Manichanar Died on 24th October 1987 in Thiruverumbur, Trichirapalli.
His mortal remains are buried in Tamilnadu Manavar Illam.

Veeriya Vandaiyar

Picture

A. Veeriya Vandayar
 Rao Bahadur Sri. A. Veeriya Vandayar, popularly known as Poondi Vandayar, was a Pilanthropist, Founder of Sri Pushpam College- Poondi and Long-standing Leader for Kallar Mahajana Sangam.Early Life.
Veeriya Vandayar was born in 1899 at Poondi in Tanjure District, Tamilnadu. In the Royal Family of Poondi.


Social Welfare
Vandayar Founded
Sri Pushpam College in 1956, at that time there were no College for technical education in Tanjure, except Kudanthai  Arasu  Kalluri, he started college for the upliftment of economically backward people, Late Rao Bahadur Sri. A. Veeriya Vandayar after visiting European countries established the college with a vision of new ideas. The institution is named after the family deity Sri Pushpa Vaneswara. This college named after him is a fitting tribute paid to the beacon light to shatter the ignorance of the rural mass. The entire family members are serving the society in this area for the upliftment of economically backward people.Social Welfare
He was the Long-standing Leader for
Kallar Mahajana Sangam until it was merged into Mukkulathor Sangam, he led nationwide campaigns for upliftment of his society and economically backward people.Death
Till death he served for
economically backward people, his Society and poors, he died on 1970 in Poondi, Tanjure.

Sivaji Ganesan the Legend of Tamil Cinema

Picture
சிவாஜி கணேசன் (அக்டோபர் 1,1927 - ஜூலை 21,2001) புகழ் பெற்ற தமிழ்திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர்,பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு 'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில்பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

திரைப்பட வாழ்க்கை 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத்திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா,வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன்,வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை

1955வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர்,1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி,தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

விருதுகளும் கௌரவங்களும்

  • ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
  • பத்ம ஸ்ரீ விருது (1966)
  • பத்ம பூஷன் விருது (1984)
  • செவாலியே விருது (1994)
  • தாதா சாகேப் பால்கே விருது (1997)
  • 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.

Sithambaram Kandiyar Durairajah

Picture
Very popularly was known in Ceylon as the Kathirgama Kandiyar and VSDR Kandiyar born on the 5th August 1905 to Vadamalai Sithambaram Kandiyar and Anjalai Ammal. The first to establish the Kallar Maga Sabai in 1942 at Kandy in Ceylon. He was the President elect from 1942 to till his death on 24th December 1970. According to available information the Membership of the Kallar Maga Sabai crossed 13000 in 1969. It was recorded in the Annual General Meeting of the Kallar Maga Sabai on the 14th September 1969 that the Kallar Maga Sabai should expand its activities to other regions of Ceylon to increase its member ship to 15000 by September 1970. Many of the Members of the Organization were Estate Owners or holding high positions in various Private sector establishments and Government Departments in Ceylon. Unfortunately the coomunal violence which took place in 1970 in Ceylon totally paralyzed the Kallar maga Sabai and it came to a stand still after the death of its founder member in December 1970.

Some of the names of members of the Kallar Maga Sabai as from the available Records at the Registras General office in Kandy are as follows:

1. Sithambaram Kandiyar Durairajah – Founder & Elected President (28 Years) till his death. Owner of 6 Estates having Coconut, Cocoa, Pepper, Cardamom and Rubber Plantations.

2. Vijaya Thevar Subbiah – General Secretary elect for more than 27 years.
Owner of Kambli Stores. Watthugamam.

3. Govindasamy Gangainattar – Treasurer elect for more than 20 years
Owner of Tennapittiya Estate. Malpana.

4. Gopala Rajapiriyar – Life Member for more than 28 years.
Owner of Coshina Estate. Ampitiya. Kandy

5. P.Karuppiah Kalingarayar – Life member for more than 26 years.
Owner of Aluvihara Estate Matale.

6. V. Rathinam Kilamudaiyar. Life member for More than 25 Years
Owner of Granlee Estate. Lindulla.

7. A Narayanasamy Thanjirayar. Life member for more than 25 Years.
Owner of Hunthana Estate. Uduwela. Kandy.

8. Karuppiah Thondaiman Soumiyamoorthy. Vice President and Life member for 20 Years.
Owner of Wavendon Group. Ramboda and the founder of Ceylon Workers Congress

Mr.Durairajah Kandiyar was responsible for the establishement of the First Cooperative Society in Malapana in Ceylon and registered himself as the 1st Member in the Society.

Built and Established the Rajawella Methodist Mission School in Pallekella Village which became the High school in the area after 20 Years and now fully controlled by the Government of Sri Lanka with a student population of more than 2000. Elected as the President of the Parent Teachers Association for more than 35 Years. Build a Mariamman Temple in his Village (Malpana) and the First Buddhist Temple (Known as Pansala) in his village.

Elected as the Managing Trustee for the Pilliyar Kovil at Kandy and held the Position till his death.Elected as the Managing Trustee for the Kathirgamam Devanai Amman Temple, Selva Vinayagar Temple, Sella kathirgamam Temple, Santhana Malai and Valli Malai temple etc, the positions which he held till his death. Donated lands of more than 1500 Acres for the colonization scheme of the Govt. of Ceylon for the land less poor people. Build and maintained more than 20 Wells and 11 Ambalams for travelers to rest and proceed in various Villages near to his home town. 

After his death on 21st December 1970 the family shifted to various parts of the world and few living now in India.


Soumiyamoorthy Thondaiman

Picture
Karuppiah Thondaiman Soumiyamoorthy. Ceylon. (1913 – 1999)

Born in Thirupathoor of Pudukkottai District of Tamil Nadu in 1913, Saumiyamoorthy Thondaiman came to Ceylon in 1924 at the age of 11. His father had migrated to Ceylon as a kangany (Supervisor) and through hard work and enterprise; he became the owner of an estate. He became a planter and so did many members of his extended family. In 1940 he entered politics as Chairman of the Reception Committee of the Gampola Branch of the Ceylon Indian Congress. He led his people through thick and thin for nearly six decades.

The Ceylon Indian Congress led by Thondaiman secured 8 seats in the first Parliament out of a total of 101. Thondaiman was elected from the Nuwara Eliya seat.  Upcountry Tamil votes influenced 12 other electorates in favour of the left parties. In 1950, the name of Ceylon Indian Congress was changed to Ceylon Workers Congress and it became a powerful force as it controlled a large and strong trade union.  This was done as the nomenclature ‘Indian’ was misleading and mischievous. He was the elected member of the International labour organization of the United Nations the Post which he held till his death.

In 1960 and 1965 Thondaiman was appointed Member of Parliament to represent the stateless Tamils as they had been earlier disenfranchised.  Constitutionally, it was possible to appoint members from unrepresented peoples.  When the number of Tamils registered as citizens increased, their influence in elections was felt.  In 1971, after 30 years, he again won an election through Tamil votes in Nuwara Eliya.  In 1978 he was appointed as cabinet minister of Rural Industries. From then on, he invariably held a ministerial post till his death.  He used his ministerial position to uplift the economic position of the estate people and to regain lost rights. In 1994 the CWC secured nine seats in Parliament and became a force to reckon with.

Thondaiman used his political and ministerial position to win back some of the rights of his oppressed people.  They were successful in extracting their civic rights. Wages were also increased due to trade union action.  Thondaiman succeeded because he was a master strategist and used his cabinet position to obtain concessions.  He used the strength of the CWC trade unions to pressurize the government and estate employers.  He used the Tamil vote bank in local, parliamentary and presidential elections.  He used the voting power of the CWC in Parliament to influence the formation of governments.  He came to be regarded as king maker, much to the chagrin of die-hard Sinhalese leaders. In 1988 the government passed an Act to grant citizenship to Upcountry Tamils, who had been rendered stateless, after their mass deportation under the infamous Srimavo-Shastri Pact. 

Thondaiman died at the age of 86 in 1999, while he was still a cabinet minister.  He was given a well-attended state funeral, perhaps the only Tamil to be given such a honour. Over a hundred thousand people attended his funeral.   Saumiyamoorthy Thondaiman was a dynamic leader of the Upcountry Tamils and was invariably labelled an uncrowned king.

அமரர் திரு. முத்துக்குமார் காங்கேயர் சந்திரகாசன். இ.ஆ.ப.

Picture

அமரர் திரு. முத்துக்குமார் காங்கேயர் சந்திரகாசன். இ.ஆ.ப.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த நத்தமாங்குடி என்ற சிறு கிராமம், கூழையாறும் நந்தையாறும் ஒன்று சேர்ந்து கொள்ளிடம் நதியில் சங்கமாகுமிடம். இங்கு திரு முத்துக்குமார் காங்கேயருக்கும் வள்ளிநாயகம் திருமட்டிக்கும் நன்மகனாய் 25/03/1922ல் பிறந்தார் சந்திரகாசன் காங்கேயர் பிறந்தார். ஐந்து வயதில் தனது சிற்றூர்த் தொடக்கப் ப்ள்ளியில் கல்வி பயின்று, ஐந்து முதல் எட்டாம் வகுப்புவரை ஓரத்தூர் டி.பி. செல்லசாமி அய்யர் பள்ளீயிலும், 10ம் வகுப்பினை லால்குடி கழக உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பினை (பி.ஏ) திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் கல்லூரியிலும் பயின்றார்.

1943ம் ஆண்டு தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழக அரசுப்பணியாளர் தேர்வும் எழுதி அதிலும் தேர்வடைந்து 7/4/19944ல் இளநிலை உதவியாளர் எனும் அரசுப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக உச்ச நிலை அடைந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலராகவும் பணியாற்றி 31/01/1980ல் ஓய்வு பெற்றார்.

தனது சமுதாயச் சிந்தனைகளை வளர்ச்சியடைய வைத்தவர்கள் முன்னாள் அமைச்சர் திரு புரவலர் அன்பில் தருமலிங்கம், திரு. ந.ப. மாணிக்கம் ஏற்றாண்டார், திரு கோதண்டபாணி மூவரையர் என்று தனது மலரும் நினைவுகள் நூலில் குறிப்பிடுகிறார்.

மனைவி குளித்தலை திரு இரத்தினச் சோழகர் மகள் ஞானாம்பாள், இவர்களுக்கு இளங்கோவன் , டாக்டர் கருணாநிதி, மதிக்குமார் என்ற மூன்று மகன்களும் வாசுகி என்ற மகளும் உண்டு.

தனது அரசுப்பணி ஓய்வின்பின் சமூகத்தொண்டில் தன்னை இனைத்துக்கொண்டு கள்ளர் குல் முண்ணேற்றத்திற்கு அரும்பாடு பட்டுள்ளார். இராசராசன் கல்வி பண்பாட்டுக்கழகத்தின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய தொண்டினை நாம் அனைவரும் உனர்ந்து அவர் வழியில் செயல் ஆற்றிட வேண்டும்.

இராசராசன் கல்விப் பன்பாட்டுக் கழகம் 16/03/1986ம் ஆண்டு நிருவப் பட்டு, 16/07/1986ல் பதிவு செய்யப்படது. 66 அங்கத்தினர்களை மட்டுமே கொண்டிருந்த இக் கழகத்தின் தலைவராக ஒருமனதாக 12/07/1987ம் ஆண்டு திரு சந்திரகாசன் காங்கேயர் தேர்வு செய்யப்பட்டார். இத் தேர்வுக்குபின் காங்கேயரின் முயற்ச்சியால் அங்கத்தினர்களின் என்னிக்கை வளர்ந்தது.

1986 - 1987 66 ஆக இருந்த அங்கத்தினர்களின் என்னிக்கை
1987 - 1988 266
1988 - 1989 682
1990 - 1991 1236
1991 - 1992 1700
1992 - 1993 2130
1993 - 1994 2401
1994 - 1995 2741 ஆக உயர்ந்தது.

உறுப்பினர்களின் சேர்க்கை விரிவடைந்து கழகத்தின் நிதி நிலையும் கணிசமாக உயர்ந்தது.

இராசராசன் கல்விப் பண்பாட்டு கழகத்தில் தனிக்குழுக்கள் அமைத்து சாதனை
திரு சந்திரகாசன் காங்கேயர் எட்டு ஆண்டுகள் கழக மேம்பாட்டிற்காகவும், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் நிறைவெற்றப்பட்ட
தீர்மாணங்களை நடை முறைப்படுத்தி வெற்றியும் கண்டார். தான் தலைமையேற்ற காலகட்டத்தில்
உறுப்பினர் சேர்க்கை குழு,
திருமணத் தகவல் தொடர்புக் குழு,
பண்பாட்டுக் குழு
இராசராசன் செய்தி மலர்க்குழு
நிதி மற்றும் கட்டக்குழு
மண்டலக் குழு
மகளீர் அணி போன்ற உள் அமைப்புகளை தோற்றுவித்து கழகத்தை நெறிபடுத்தினார். இதனுடன் உறுபினர் பட்டியலும், ஆறாவது ஆண்டு விழா மலர், இலவச மருத்துவ முகாம், நூலகத் திறப்பு விழ போன்ற நிகழ்வுகளையும் செயல்படுத்தி ந்ம் குல மக்களுக்கு அரும்பெரும் சேவைகள் பல செய்துள்ளார்.

தமிழ்நாடு கள்ளர் பேரவை தோற்றமும் செயல்பாடுகளும்
ஒரு வலுவான சமுதாய அமைப்பின் பின்னனி இருந்தால் தான் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து அரசுத்துறைகளிலும் உள்ள குறைபாடுகளை அரசின் தனி கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வு அல்லது பரிகாரம் பெறமுடியும். நமது சமுதாயப் பெரியோர்களால் நிறுவப்பட்டு வந்த சங்கங்கள் எல்லாம் நகர, வட்டார, இடங்களில் தான் இயங்கி வந்தன. இவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு அமைப்பு சமுதாய நலன் காக்க வேண்டும் என்று 15/12/1990ல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பில் நடந்த செயற்குழு கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
அதன் விளைவாக 14/04/1991 தமிழ் புத்தாண்டு நாள் அன்று தமிழ்நாடு கள்ளர் பேரவை தொடங்கப்பெற்றது. பின் இப் பேரவையை எல்லா மாவட்டங்க்களிலும் நிறுவ திரு சந்திரகாசன் காங்கேயர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திரு சந்திரகாசன் காங்கேயர் தலைமையில் தமிழ்நாடு கள்ளர் பேரவை 14/04/1991 முதல் 27/04/1997 வரை செயல்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, திருச்சி, புதுகை, போன்ற மாவட்டங்களில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் எம் இன மக்களை ஒன்று திறட்டி மா பெரும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளது. பேரணிகளில் புரவலர் அன்பில் தர்மலிங்கம், திருவாளர்கள் அய்யாறு வாண்ைட்யார், தங்கமுத்து நாட்டார், துரை கோவிந்தவாசன், தியாகராச காடுவெட்டியார், காளிதாஸ் முடிபூண்டார், சோமசுந்தர தேவர், விஜயரெகுநாதப் பல்லவராயர் முதலாய சமுதாய பெரியோர்கள் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்கள்.

இவ்வாறு சிறப்புடன் செயல் பட்டுவந்த திரு சந்திரகாசன் காங்கேயர் 27/04/1997 நாளன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொருப்பில் இருந்து நிறுவனத் தலைவராகவும் திரு இராமச்சந்திரப் பல்லவராயர் மாநிலத் தலைவராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின் திரு சந்திரகாசன் காங்கேயர் நிறுவனத் தலைவராக செயல்பட்ட போதிலும் மாநில தலைவர்களின் கருத்து வேற்றுமையால் தமிழ்நாடு கள்ளர் பேரவையின் செயல்பாடுகள் தொய்வடைந்து விட்டது.

அளவற்ற அன்பு, மட்டற்ற மரியாதை ஆகிய பண்புகளை வளர்த்து விட்ட எம் குல மாமனிதனுக்கு ந்ன்றி சொல்லுவோம்

அன்பில் Tharmalingham

Picture

வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்.

Picture
இரகுநாத இராசாளியார்.
அரித்துவாரமங்களம், இவ்வூரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் பத்தொன்பதாம்நூற்றாண்டின் பிற்பகுதியில்(1870) பிறந்து இருபதாம் நூற்றாண்டின்முற்பகுதியில்(1920) இயற்கையெய்திய கோபாலசாமி இரகுநாதஇராசாளியார். 

இராசாளியார்.அவர்களின் வாழ்க்கை இற்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடமாகவும்வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் அமைந்துள்ளது. தன் மாமன் வேலுவாண்டையாரின் திருமகள் பெரியநாயகியம்மையைவாழ்க்கைத் துணையாக ஏற்று வையகம் போற்ற வாழ்ந்தார். இளம் வயதில் தந்தையைஇழந்த நிலையில் கல்லூரி படிப்பை முடிக்க இயலாமல் குடும்ப சுமையைஏற்றுக்கொண்டார். தமிழ் மொழியின்பாலும் இலக்கியங்களின்பாலும் மிகவும்ஈடுபாடு கொண்ட இராசாளியார் பண்டைய இலக்கியநூல்கள் பலவற்றை தேடிப்பெற்றுதம் ஊரிலேயே ஒரு நூலகம் அமைத்தார். தமிழார்வம் காரணமாக தன்செல்வச்செழுமையை பயன்படுத்தி கிடைப்பதற்கரிய பல சுவடிகளைப் பெற்று தம்நூலகத்தை மிகச் சிறந்த நூலகமாக அமைத்தார்.இங்கு வருகை தந்த திருவாடுதுறை ஆதினகர்தர் நூலகத்திலுள்ள அரிய நூல்களையும்சுவடிகளையும் பார்த்து இந் நூலகத்திற்கு சரஸ்வதி மகால் எனவும் பெயர்இட்டார். தமிழ்த் தாத்தா என்று அழைக்கபடும் உ.வே.சாமிநாத ஐயர் புறநானூறுஒலைச்சுவடிகளை இராசாளியார் அவர்களிடம் தான் பெற்று அச்சிட்டார் என்பதுவரலாறு.இராசளியார் அவர்களின் தமிழார்வமும் மொழிப்பற்றும், அறிவுப்பசியும்அதைத்தீர்துக்கொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் எங்கு கூட்டங்கள்நடந்தாலும் சென்று பங்கேற்கும் பாங்கும் தனிச்சிறப்பாகும். நான்காம் தமிழ்சங்கம் எனப்போற்றப்படும் இன்றைய மதுரைத் தமிழ்ச் சங்கத்தைபாண்டித்துரை தேவருடன் இனைந்து உருவாக்கியதில் இராசளியார் பங்கும் ஒரு வரலாறு. இராசளியார் தஞ்சையில் இருந்த போது தஞ்சைத்தமிழ் சங்கம் செயல்பாடற்று போனது குறித்து கவலையுற்ற புலவர் பலர் இராசளியார் அவர்களிடம் தூண்டியதன் விளைவாக கரந்தையில் புதியதமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதும் வரலாறு.கரந்தை தமிழ்ச்சங்க நூலகத்திற்க்குத் தம் நூலகத்தில் இருந்துநூற்றுக்கணக்கான நூல்களையும் வழங்கி, குன்னூரில் ஒரு நூலகத்தையும் அமைத்துஅங்கு தொல்காப்பியருக்குச் சிலையும் நிருவி தமிழ் வளர்த்தார் பண்டிதர்இராசளியார். இவ்வாறு இலக்கியம், சமயம், அரசியல், ஆகிய துறைகளில் ஈடுபட்டுபுகழ் பெற்ற இராசளியார் குற்றபரம்பரை சட்டத்திற்கு எதிராகக் குரல்கொடுத்துத் தம் சமூக மக்களின் மேன்மைக்கு வழி செய்தார். செல்வத்துப் பயனேஈதல் என்பதற்கிணங்க வள்ளமை மிக்க நள்நிதிச் செல்வராகத் திகழ்ந்தார். இவர்வாழ்வு போற்றுவதற்க்கும், பின்பற்றுவதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


வில்வையா மன்னையார் சாம்பசிவம் 

Picture
வில்வையா மன்னையார் சாம்பசிவம்  
மருத்துவ அகராதி தந்த மேதை


சாம்பசிவம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடியைச் சேர்ந்த வில்வையா மன்னையாருக்கும் மனோன்மணி அம்மாளுக்கும் பிறந்தவர். இவர் தமிழறிஞரும் சென்னை நகரப் போலிஸ் துணை ஆணையாளருமான பவானந்தம் சகோதரி மகள் துரைக்கண்ணு அம்மையாரை 1903இல் மணந்துகொண்டார்.

இவர் 1931ஆம் ஆண்டில் மருத்துவக் கலைச்சொல் அகராதியை வெளியிட்டுள்ளார். சாம்பசிவம் ஏற்படுத்திக்கொண்ட The Research Institute of Siddhars Science, Madras என்ற பெயரளவிலான நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார். அகராதியின் இரண்டு தொகுதிகள் 1938இல் ரூபாய் 12,000க்கும் அதிகமான செலவில் வெளிவந்துள்ளன. 1949இல் சென்னை மாநில அரசு 5,000 ரூபாய் உதவித் தொகையும் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு வீடும் வழங்கிற்று என்ற விவரமும் உள்ளது. மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில் 1953இல் சாம்பசிவம் காலமானார். 1966இல் மறைமலை அடிகள் நூல் நிலைய நிறுவனர் வ. சுப்பையா பிள்ளை சென்னை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அகராதியின் கையெழுத்துப் படிவங்களையும், அச்சிட்ட படிவங்களையும் எடுத்து வந்ததாகவும் அவை 1972இல் அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.

சாம்பசிவம் கருத்தியல் பின்புலம் தெளிவாக வெளிப்படவில்லை. இவருடைய குடும்பத்தில் எவருக்கும் முறையான மருத்துவப் பயிற்சி இருந்ததாகவும் தெரியவில்லை. காவல் துறை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் இவர். இவருடைய பாட்டனார் எழுதி வைத்திருந்த சில பழைய மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்தன என 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் குறிப்பிட்டுள்ளார். சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டுக் கட்டப்பட்ட பிரதிகளைக் கண்ணுற இயலவில்லை
4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச்சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு கருவி நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி. தமிழ் அகராதியியலில் பெருஞ் சாதனையாகத் திகழும் இந்த அகராதி உருவான (1912 - 1936) அதே காலகட்டத்தில் மற்றொரு சிறந்த அகராதியும் உருவாகியிருக்கிறது. பல்கலைக்கழக அகராதி ஒரு பெரும் கல்வி நிறுவனத்தால், பல லட்சம் பணச் செலவில், ச. வையாபுரிப் பிள்ளை என்ற பேரறிஞரின் தலைமையில், மு. ராகவையங்கார், ஜி.யு. போப், அனவரத விநாயகம் பிள்ளை, பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி முதலான பல அறிஞர்களின் பங்களிப்போடு தயாரான தென்றால், இந்த அகராதி ஒரு தனிமனிதரின் முயற்சியில், அவர் ஒருவரின் பொருட்செலவில் மட்டுமே உருவானது. பெப்ரிசியஸ், வின்சுலோ போன்ற முன்னோடிகள் சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்குக் கைகாட்டியாக விளங்கினரென்றால் ஒரு சிறப்பகராதி என்ற முறையில் இவ்வகராதிக்கு முன்னோடியே இல்லை. தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கிய மருத்துவ அகராதியான A Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences என்ற அரிய சாதனையே இங்குச் சுட்டப்படுகிறது.

ஐந்து பெருந்தொகுதிகளும் 4,000 பக்கங்களும் 80,000 தலைச்சொற்களும் கொண்ட இவ்வகராதி இன்றைக்கும் மலைப்பை ஏற்படுத்துவது. தமிழ்ச் சித்த மருத்துவத் துறையில் இன்றும் நினைவில் கொள்ளப்படுவதோடு நடைமுறைப் பயனும் கொண்டதாக இந்த அகராதி இருக்கிறது. பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் சாம்பசிவம் பிள்ளையின் அகராதியிலிருந்து 'சா. அக.' என்ற குறுக்கத்தோடு எடுத்தாளப்பட்ட ஏராளமான தலைச்சொற்களுக்கான சொற்பிறப்பும், விளக்கமும், ஆங்கில இனச் சொல்லும் அமைந்திருப்பதைப் பரக்கக் காணலாம். சொல்லப் போனால் 'சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்கு அடுத்தபடியாகப் பயன்படுவது, சாம்பசிவம் பிள்ளை தமிழ் - ஆங்கில அகரமுதலியாகும். மருத்துவத் துறையில் அது நல்கும் அறிவு மதிப்பிடுந் தரமன்று' என்றே பாவாணரின் அகரமுதலி முன்னுரை சுட்டுகின்றது.

இருப்பினும் இந்த அகரமுதலி பற்றியும் இதனை உருவாக்கிய மேதையினையும் தமிழுலகம் போதுமான அளவு அறியவோ, போற்றவோ இல்லை. பெருமுயற்சியால் திருவினையாக்கிய டி.வி. சாம்பசிவம் பிள்ளை தம் வாழ்நாளில் இந்த அகராதியை அச்சு வடிவில் முழுமையாகக் காணவும் கொடுத்துவைக்கவில்லை. பண்டை நூல்களை மட்டுமே 'நுண்பல் சிதலைகள்' தாக்கி அழிக்கும் என்ற நினைப்புக்கு மாறாக, இருபதாம் நூற்றாண்டிலும் கரையான்களும் ஈசல்களும் சிலந்திகளும் தமிழோடு விளையாடி இருக்கின்றன. இந்தத் துன்பியல் நாடகத்தை மீட்டுமொரு முறை உரைக்க இக்கட்டுரை தலைப்படுகிறது.

சாம்பசிவம் பிள்ளை அகராதியின் சிறப்புகளை அத்துறை வல்லாரே முழுவதுமாக மதிப்பிட முடியும். உடற்கூறு, நோய்கள், மருந்துகள், மருத்துவ முறைகள், மூலிகைகள், தாவரங்கள், ரசாயனங்கள், ரசவாதம், கானியம், யோகம், மந்திரம், தந்திரம், தத்துவம் முதலான பலவற்றையும் உள்ளடக்கியதாக இந்த அகராதி விளங்குகிறது. இது அடிப்படையில் மருத்துவ அகராதியே ஆயினும் தமிழின் வளத்தையும் செழுமையினையும் காட்டக்கூடிய ஒரு கருவி நூலாகும். அகராதி அமைப்பைக் கொண்டதாயினும், பொருள் விளக்கங்கள் முதலானவை கலைக்களஞ்சியம் எனத்தக்க அளவில் விரிவாக அமைந்துள்ளன (எ-டு: 'அவுரி'; 'காடி'). 'ஔஷத வகுப்பு' போன்ற தலைச்சொற்களுக்கான விளக்கம் ஒரு தனிக் கட்டுரையாகவே சாம்பசிவம் பிள்ளை எழுதியுள்ளார். பல தலைச்சொற்களுக்கு விரிவான அடிக்குறிப்புகளும் எழுதியுள்ளார். மூலிகைகளுக்கான விளக்கங்கள் பதார்த்தகுண சிந்தாமணி என்று சொல்லுமளவுக்கு, Materia Medica போல் மிக விரிவாக அமைந்துள்ளன.

சாம்பசிவம் பிள்ளை வகை தொகையாக ஏராளமான தலைச்சொற்களை வழங்கியுள்ளார். 'அத்தி'க்கு 14 வகை, 'சங்கு'க்கு 23 வகை என ஏராளமான செய்திகள் உள்ளன. 'பேய்' என்ற முன்னொட்டோ டு அமைந்துள்ள பதின் கணக்கான தலைச்சொற்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன. இதேபோல் தீவிர நாடி, துள்ளு நாடி, வன்னாடி, அபல நாடி, நெருங்கிய நாடி, நிறை நாடி, கதி நாடி, தடங்கு நாடி, இடை விடு நாடி, தளம்பு நாடி, ஒழுங்கு நாடி, சுடர் நாடி, மென்னாடி, நுன்னாடி, கம்பி நாடி, மரண நாடி, விகற்ப நாடி, சன்னி நாடி, பூத்த மங்கை நாடி, ஒடுங்கு நாடி, துடி நாடி, உதர நாடி, இரட்டை நாடி, குதிரையோட்ட நாடி, தெறிக்கு நாடி எனப் பட்டியலிட்டிருப்பது தமிழ் மருத்துவத்தின் நோயறி திறனை வியப்புறக் காட்டுகிறது. இதேபோல் தாவர வகைகளையும் மூலிகை வகைகளையும் இவ்வகராதி அடக்கியுள்ளது.

விரிவாக அமைந்த தமிழ் விளக்கங்களோடு ஆங்கிலத்திலும் விளக்கங்கள் உள்ளன. மிகச் செறிவானதும் துல்லியமானதுமான ஆங்கிலத்தில் இவ்விளக்கங்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 'திகைப்பூண்டு மிதித்தால்' ஏற்படும் மருட்சியைச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி 'bewilderment' என்னும். சாம்பசிவம் பிள்ளையோ 'stupefaction' என்பார். சாம்பசிவனாரின் பொருட்சுட்டலே நுட்பமும் பொருத்தமும் உடையது. 'மயிர் நீப்பின் உயிர்வாழாக்' கவரிமான் என்ற விலங்கினை Tibetian yak என்று இவர் மா. கிருஷ்ணனுக்கு முன்பே இனங் கண்டுள்ளார். தாவர, மூலிகைப் பெயர்களுக்கு அவர் கூடுமானவரை இலத்தீனில் அமைந்த அறிவியல் பெயர்களையும் வழங்கியுள்ளார். தாம் அறியாதவற்றை 'unknown', 'unidentified' என்று அவர் குறித்திருக்கும் அறிவு நேர்மை இன்றைய ஆய்வாளர்களுக்கும் ஒரு பாடமாகும்.

இத்துணை வளமும் செழுமையும் கொண்ட கலைக் களஞ்சியத்தை டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கி, பாதி வெளியிட்டு, அவர் காலமான பின் நிறைவு பெற்றதை இனிக் காண்போம்.

மருத்துவ அகராதி என்ற கலைக்களஞ்சியத்தைத் தனியொருவராக உருவாக்கிக் காட்டிய டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறியக்கூடவில்லை. இன்று கிடைக்கப்பெறும் குறைந்த அளவு தகவல்களுக்கும் நாம் அவருடைய தம்பி மகனாகிய திரு அ. ராஜபூஷணம் மன்னையார் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்.

டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடி ஆகும். ஆயினும் இவர் பிறந்தது பெங்களூரில் (1880இல்). இவருடைய தாயார் மனோன்மணி அம்மாள்; தந்தையார் வில்வையா மன்னையார். இவர் படித்ததும் பெங்களூரில். பள்ளி இறுதிக்கு மேல் இவர் படிப்புச் செல்லவில்லை. 1899இல் பெங்களூரில் ஏற்பட்ட பிளேக் கொள்ளை நோயால் வெளியேறித் தஞ்சைக்கே (அம்மாப்பேட்டை) இவருடைய குடும்பம் குடியேறியது. சென்னை நகரக் காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்கமர்ந்த சாம்பசிவம் பிள்ளை, 1907இல் துணை ஆய்வாளராக்கப்பட்டார். 1903இல் துரைக்கண்ணு அம்மையாரை மணம் செய்து கொண்டார். துரைக்கண்ணு அம்மையாரின் தாய்மாமன் சென்னை நகரப் போலீஸ் துணை ஆணையாளராக விளங்கிய முதல் இந்தியரும் தமிழ் அறிஞருமான ச. பவானந்தம் பிள்ளை ஆவார். (பாரதியின் 'இந்தியா' பத்திரிகைக்கு எதிரான வழக்கையும் விசாரணையையும் நடத்தியவர் இவர்.) 1914இல் முதல் மனைவி இறந்த பிறகு, 1916இல் அம்மணி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். அவரும் தலைப்பிரசவத்தில் அடுத்த ஆண்டே காலமானார். இதன் பிறகு டி.வி. சாம்பசிவம்பிள்ளை மணம் செய்துகொள்ளவில்லை. நேர் வாரிசும் இல்லை. இது மருத்துவ அகராதியின் பதிப்பு வரலாற்றையும் பாதித்தது. 1935இல் இவர் காவல் துறை ஆய்வாளராகப் பணி ஓய்வு பெற்றார்.

ஒரு பெரும் மருத்துவக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கக்கூடிய திறனையும் ஆற்றலையும் உழைப்பையும் வெளிக்காட்டாத சராசரியான வாழ்க்கையினையே டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் வரலாறு காட்டுகிறது. தமது பாட்டனார் எழுதிவைத்திருந்த சில பழம் மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்ததென, 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் பிள்ளை குறித்துள்ளார். தமது குடும்பத்தில் எவருக்கும் முறையான வைத்தியப் பயிற்சி இருந்ததாகத் தெரியவில்லை என்று அ. ராஜபூஷணம் மன்னையார் குறிப்பிடுகிறார். இந்நிலையில் தம்முடைய விரிவான மருத்துவப் பயிற்சியைச் சாம்பசிவம் பிள்ளை எங்கு பெற்றார் என்பதே புலப்படவில்லை. பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவரின் ஆங்கில மொழி ஆற்றலும் வியப்பைத் தருகிறது.

கிடைக்கின்ற குறைவான வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களிலிருந்து சாம்பசிவம் பிள்ளையின் கருத்தியல் பின்புலமும் தெளிவாக வெளிப்படவில்லை. 1931இல் இவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையில் எழுதிய சுருங்கிய முன்னுரையும் (1931), முதல் தொகுதிக்கு (உயிரெழுத்துகள்) எழுதிய மிக விரிவான முன்னுரையும் - இரண்டுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை - சில போக்குகளை உணர்த்துகின்றன. (மொத்தத் தொகுதிகளும் வெளிவந்த பிறகே முன்னுரை எழுத எண்ணியிருந்ததாகவும் அகராதியைச் சரியாகப் பயன்கொள்ளும் வகையைத் தெளிவுபடுத்த வேண்டியே முதல் தொகுதியிலே முன்னுரை எழுத வேண்டியதானதென்றும் கூறியுள்ளார். அவர் மறைந்த கால் நூற்றாண்டுக்குப் பிறகே நூல் முழுவதும் அச்சாயிற்று என்னும்போது இதை நல்லூழ் என்றே மகிழ வேண்டும்).

நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட சாம்பசிவம் பிள்ளையின் முன்னுரை தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனையின் தாக்கத்தைக் காட்டுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சங்க நூல்களும் அதன்வழிக் கட்டமைக்கப்பட்ட தமிழின் மேன்மை, தனித்தியங்கும் ஆற்றல், வளம் ஆகிய கருத்துகளும் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கமும் அவருடைய கருத்துலகை வடிவமைத்துள்ளமை தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே சித்த மருத்துவத்தைத் தமிழ் மரபின் சிறப்பான ஒரு பகுதியாக அவர் காண்கிறார். நாகரிகத்தின் கொடுமுடியைத் தமிழர்கள் தொட்டதன் ஓர் அடையாளமாகத் தமிழ் மருத்துவத்தை அவர் பார்த்திருக்கிறார். நவீன மேலை மருத்துவத்தோடு ஒப்பிடவும் இது முழுமையுடையதாக அவர் கருதியிருக்கிறார். சித்தர்கள் தம் மருத்துவச் சாதனைகளை நிகழ்த்திய காலத்து ஐரோப்பா அறியாமையிலும் காட்டு மிராண்டித்தனத்திலும் மூழ்கியிருந்ததாக அவர் சொல்கிறார். நவீனக் காலத்திற்கேற்ப சித்த மருத்துவத்தை மீட்டுப் புத்துயிரளிக்காவிட்டால் அது அழிந்தும் மறந்தும் போகும் எனவும் அவர் அஞ்சியிருக்கிறார். அகராதி இந்த அச்சத்தின் வெளிப்பாடாகும்.

இந்தக் கருத்தியல் ஓர்மையே சாம்பசிவம் பிள்ளையின் பெருமுயற்சியின் பின்னணியில் தொழிற்பட்டிருக்கின்றது. தமிழ்ச் சித்த மருத்துவ நூல்களில் ஆளப்பட்டிருக்கும் ஏராளமான கலைச்சொற்களும் குழுக்குறிகளும் அவற்றின் உண்மையான பொருளை அறியத் தடையாக இருப்பதை உணர்ந்த சாம்பசிவம் பிள்ளை இதனைச் சீர்செய்ய முயன்றார். இந்தப் பணியினை அவர் எப்பொழுது தொடங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1938 கடைசியில் எழுதிய முன்னுரையில் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட உழைப்பு எனக் குறித்துள்ளதிலிருந்து, 1910களின் தொடக்கத்தில், அவரது 30ஆம் அகவையை ஒட்டி, தம் ஆய்வுகளை அவர் தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்க முடியும்.

தக்க துணை நூல்கள் இல்லாமல் சாம்பசிவம் பிள்ளை தத்தளித்திருக்கிறார். கடுமையான காவல்துறைப் பணிச் சுமைகளுக்கிடையே அவர் ஆய்வு தொடர்ந்திருக்கிறது. இதில் அவருக்கு யாரேனும் துணை நின்றார்களா என்பதும் தெரியவில்லை. கலந்து பேசுவதற்கேனும் எவரேனும் இருந்தனரா எனவும் தெரியவில்லை. அவரைப் பற்றிய இரங்கலுரைகளோ நினைவுக் குறிப்புகளோ கிடைக்காதிருப்பதிலிருந்து அவர் பலரோடும் கலந்துகொள்ளாதவராக, தனித்தே செயல்படக்கூடியவராக இருந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.

இவ்வாறு டி.வி. சாம்பசிவம் பிள்ளை அரிதின் முயன்று தொகுத்த அகராதியை முதலில் ஒரு சிறு சஞ்சிகையாக, 40 பக்க அளவில் வெள்ளோட்டம் விட்டிருக்கிறார். இது 1931இல் வெளிவந்திருக்கலாம். 'அ' முதல் 'அக்கினினிர்ம மந்தினி' வரை அமைந்த இந்தச் சஞ்சிகையில் 4 பக்க ஆங்கிலப் பொருளடைவும் உண்டு. இதனையே பல அறிஞர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலில் அவர் அனுப்பியிருக்கிறார் எனத் தெரிகிறது. பொருள் ஆதரவு வேண்டி இதனைச் செய்தாரா, கருத்தறிவதற்காக அனுப்பினாரா, விளம்பரத்திற்காக அனுப்பினாரா என்று தெரியவில்லை. இச்சஞ்சிகையைப் படித்து ஆர்க்காடு லட்சுமணசாமி முதலியார், உ.வே. சாமிநாதையர், வையாபுரிப் பிள்ளை, கா.சு. பிள்ளை, அனவரதவிநாயகம் பிள்ளை, டி.எஸ். திருமூர்த்தி முதலானோர் அளித்த கருத்துரைகளை ஆங்கிலத்தில் 'Opinions' என்ற தலைப்பில் அச்சிட்டு அதனையும் 8 பக்க அளவில் இணைத்துள்ளார்.

இதன் பிறகு 1931இல் 'அ' முதல் 'அமுத' வரைத் தலைச்சொற்கள் கொண்ட 200 பக்க சஞ்சிகையை சாம்பசிவம் பிள்ளை வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் The Research Institute of Siddhar's Science, Madras என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இது சாம்பசிவம் பிள்ளையே ஏற்படுத்திக்கொண்ட பெயரளவிலான நிறுவனம் என்பதில் ஐயமில்லை.

இதன் முன்னுரையில் இது ஒரு மாதிரி (Specimen) என்றே அவர் குறித்திருக்கிறார். மொத்தம் நான்கு தொகுதிகளாக, ஒவ்வொன்றும் 500 பக்க அளவில் அமையும் என்றும் அவர் எழுதியுள்ளார். ஆனால் அவர் காலமான பின்பே முழுமை பெற்ற இந்த அகராதி 4000 பக்கத்தை எட்டிவிட்டது.

கடைசியில் இந்த அகராதியின் முதல் தொகுதி 1938இல்தான் வந்தது. (ஆனால் பலர் தவறாக 1931 என்றே குறிப்பிடுகின்றனர். இதற்கான காரணம் இந்த அகராதியின் பதிப்பு வரலாற்றில் ஏற்பட்ட குழப்பங்களே ஆகும். அவற்றைப் பின்னர் காண்போம்.)

சாம்பசிவம் பிள்ளை இவ்வகராதி வெளியீட்டுக்காகத் தம் பூர்வீகச் சொத்தான இரண்டு வேலி நிலத்தை விற்றதோடு, ஓய்வூதியத்தையும் முன்னரே பெற்று 12,000 ரூபாவுக்கு மேல் செலவு செய்திருக்கிறார். (வ. சுப்பையா பிள்ளை, அ. ராஜபூஷணம் மன்னையார் ஆகியோர் தரும் தகவல் இது.) முதல் இரண்டு தொகுதிகள் அடுத்தடுத்து 1938ஆம் ஆண்டளவில் வெளிவந்ததாகத் தெரிகிறது.

1949இல் சென்னை மாநில அரசு அவருக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்ததோடு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நாயக்கர் தெருவில் ஒரு வீட்டையும் கொடுத்திருக்கிறது. இதுவும் அ. ராஜ பூஷணம் மன்னையார் தரும் தகவல். இந்த உதவியளித்தலுக்குப் பின்னே இருந்தவர்கள் யாரெனத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு உதவியே அகராதிக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது.

மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில், 1953இல் டி.வி. சாம்பசிவம் பிள்ளை காலமானார். வாரிசில்லாத நிலையில், சென்னை தாசில்தார் அவர் இருந்த வீட்டைப் பூட்டிவிட்டதோடு, வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்துச்சென்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டார். இது நடந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர்களில் ஒருவரும் மறைமலையடிகள் நூல்நிலையத்தைத் தோற்றுவித்தவருமான வ. சுப்பையா பிள்ளை (1966இல்) முயற்சி எடுத்து, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தேடியிருக்கிறார். அங்கு ஒரு கள்ளிப்பெட்டி நிறைய மருத்துவ நூல்களும் நிகண்டுகளும் செல்லரிப்புண்ட நிலையில் இருந்திருக்கின்றன. அதன் பக்கத்தில் ஒரு அடுக்கிலே அகராதியின் கையெழுத்துப் படிகளும் அச்சிட்ட படிவங்களும் இருந்திருக்கின்றன. மூன்றாம் பாகத்தின் 2174 பக்க எண்ணோடு முடியும் படிவத்தையும் அவர் கண்ணுற்றிருக்கிறார். (அங்கே இருந்த ஒரு பள்ளியிறுதிச் சான்றி தழிலிருந்து சாம்பசிவம் பிள்ளையின் தம்பி டி.வி. அண்ணாமலைப் பிள்ளையின் முகவரியைப் பெற்று, அவர் வழியாகச் சாம்பசிவம் பிள்ளையின் பணி அடையாள அட்டையிலிருந்த படத்தை வ. சுப்பையா பிள்ளை பெற்றிருக்கிறார். இன்று கிடைக்கப்பெறும் சாம்பசிவம் பிள்ளையின் ஒரே படம் இதுவேயாகும்.)

வ. சுப்பையா பிள்ளையின் இடையீட்டுக்குப் பிறகு, அகராதியின் கையெழுத்துப்படிகளும் அரைகுறையாக இருந்த அச்சுப்படிகளும் சென்னை அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதென அவர் 1972இல் குறித்துள்ளார்.

அங்கு அரசின் மானிய உதவியுடன் மூன்றாம் பகுதியின் பிற்பகுதி அச்சிடப் பெற்று பழைய படிவங்களோடு சேர்த்துக் கட்டப்பட்டு, வெளியிடப்பெற்றிருக்கிறது. இதில் அதன் இயக்குநர் டாக்டர் பு.மு. வேணு கோபால் முன்னின்றதாகத் தெரிகிறது. இவ்வெளியீடு 1972-1977க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். இப்பொழுது பார்க்கக் கிடைக்கும் முதல் மூன்று தொகுதிகளின் முதற்பதிப்புகளும் இச்சமயத்தில் கட்டப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வேளையில் கோவையின் விந்தை மனிதர் ஜி.டி. நாயுடுவை இந்த மருத்துவ அகராதி கவர்ந்திருக்கிறது. அவருடைய முயற்சியில் அடுத்த இரண்டு பாகங்கள் அச்சிடப்படலாயின. ஆனால் அவை வெளிவரும் முன் அவரும்஢ காலமாகிவிட்டார். கடைசியில் 1977இலும் 1978இலுமாக சாம்பசிவம் பிள்ளையின் பேரகராதியின் நான்காம் ஐந்தாம் தொகுதிகள் வெளியாயின. 1931இல் தொடங்கிய மருத்துவ அகராதியின் அச்சுவாகனப் பயணம் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவு பெற்றது.

இவ்வாறு கடைசி மூன்று தொகுதிகளும் அச்சிட்டு, கட்டப்பட்டு முற்றுப்பெற்றபோது சில பதிப்புக் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நான் பார்த்த பிரதிகளெல்லாம் பழைய படிவங்களோடு புதிதாக அச்சிட்ட படிவங்களும் சேர்த்துக் கட்டடம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. தலைப்புப் பக்கமும் புதிதாக அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது தெரிகிறது. (சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டு, கட்டப்பட்ட பிரதிகளை நான் கண்ணுற இயலவில்லை.) இந்தப் பிரதிகளில், வெள்ளோட்டமாக அச்சிடப்பட்ட சஞ்சிகையின் முகப்பை மாதிரியாகக் கொண்டு, 1931 எனப் பதிப்பு ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. இது பிழை. 1938இல்தான் முதல் இரு தொகுதிகள் அணியமாயின என்பதை முன்னரே கண்டோ ம். மேலும் நான் பார்வையிட்ட ஓர் இரண்டாம் தொகுதியில் 930 முதல் 1488 பக்கம் வரை சாம்பசிவம் பிள்ளை காலத்து அச்சுப்படிவங்களும் 1489 முதல் 1752 பக்கம் வரை (ஜி.டி. நாயுடு அறக்கட்டளையால்) நான்காம், ஐந்தாம் தொகுதிகள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் அதே தாளில் அச்சிடப்பட்டுள்ளது தெரிகிறது. இதிலிருந்து, சாம்பசிவம் பிள்ளை மறைந்தபொழுது பல அச்சுப் படிவங்கள் கட்டப்படாமல் இருந்திருக்கும் என எண்ண இடமுண்டு.

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் அரிய பதிப்புகளெல்லாம் பெரும் அலைக்கழிப்புகளுக்குப் பின்னரே வெளிவந்திருக்கின்றன. தீயூழாக, இந்த முயற்சிகள் பற்றிய போதுமான பதிவுகள்கூட இல்லை. இவ்வளவு அரிய அகராதியைப் பற்றி 'சொல்பொருள்' என்ற 900 பக்க அளவில் அமைந்த சிறப்பான தமிழ் அகராதி வரலாறுகூட இரண்டு இடங்களில் பெயரளவில் மட்டுமே சுட்டுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழி அகராதி தயாரிக்கப்பட்ட அனுபவத்தை விளக்கும் சிறு நூலை பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தமிழ்ப் பதிப்பகம் வெளியிடும் (Emile Littre, How I Made My Dictionary, Cre-A, 1992) சூழ்நிலையில் டி.வி. சாம்பசிவம் பிள்ளை போன்ற அறிஞர்கள் போற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

பின்குறிப்பு

பல்லாண்டுகளாகக் கிடைக்கப்பெறாமல் இருந்த இந்த அகராதியைத் தமிழக அரசு 1990களில் மறுபதிப்பிட்டுள்ளது. எப்படி நூல் வெளியிடக் கூடாது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். முதல் பதிப்பின் ஐந்து தொகுதிகளும் ஒரே சீராக ராயல் அளவில் தொடர் பக்க எண்களோடு நேர்த்தியாக அச்சிடப்பட்டவையாகும். புதிய 'பதிப்'போ ஆறு பகுதிகளாக வெவ்வேறு அளவில் அச்சிடப்பட்டுள்ளது. முதல் தொகுதி டெம்மிக்கும் குறைந்த அளவில் 1742 பக்கங்களில் புதிதாகப் பல பிழைகளோடு அச்சுக் கோக்கப்பட்டு ஒரே நூலாகச் செங்கல்போல் அமைந்துள்ளது. இரண்டாம் தொகுதி 'ஆப்செட்' முறையில் பழைய பதிப்பு அப்படியே படம்பிடித்து வெளியிடப்பட்டுள்ளது - நல்லவேளையாக! ஆனால் இது 929ஆம் பக்கத்தில் தொடங்கி 1752ஆம் பக்கத்தில் முடிகிறது! மூன்றாம் தொகுதியும் இதே 'ஆப்செட்' முறையில் 1753ஆம் பக்கம் தொடங்கி 2224ஆம் பக்கத்தில் முடிகிறது.

நான்காம் தொகுதி இரண்டு பாகங்களாகப் புதிதாக அச்சுக் கோத்து அச்சிடப்பட்டுள்ளது. காரணம் விளக்கப்படவில்லை. இதன் முதல் பாகம் 1ஆம் பக்க மெனப் புதிதாக இலக்கமிடப்பட்டு 1020ஆம் பக்கம்வரை உள்ளது. இரண்டாம் பாகம் இதன் தொடர்ச்சியாக 2000 பக்கம்வரை உள்ளது. ஐந்தாம் தொகுதி மட்டும் ராயல் அளவில் புதிதாக அச்சுக்கோத்து, 1 முதல் 1291 பக்கம் வரை எண்ணிடப்பட்டுள்ளது. அச்சுப் பிழைகள், வடிவமைப்பு, நேர்த்தி முதலானவை பற்றிச் சொல்லாமலிருத்தல் நலம். சாம்பசிவம் அகராதி தொடர்ந்து அச்சில் உள்ளது என்பதைத் தவிர இதில் மகிழ்வதற்கு ஏதுமில்லை.

துணைநூல்கள்

1. டி.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதிப் பதிப்புகள்.

2. டி.வி. சாம்பசிவம் பிள்ளை வெளியிட்ட மருத்துவ அகராதியின் மாதிரி சஞ்சிகைகள்.

3. அ. ராஜபூஷணம் மன்னையார், சித்த மருத்துவ மேதை டி.வி. சாம்பசிவம் பிள்ளை, குருவருள் பதிப்பகம், சென்னை, 2002.

4. வ. சுப்பையா, 'படந்தொகுத்தலிற் பட்டறிவு' (2), செந்தமிழ்ச் செல்வி, சூலை 1972.




 

தியாகராஜ காடுவெட்டியார்

Picture

ராஜபூசனம்  மன்னையார்

Picture
 

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips