மதுரை:மதுரை விடுதலைச் சிறுத்தைகள் மேயர் வேட்பாளர் மூ.பசும்பொன், உட்கட்சி பூசல் காரணமாக போட்டியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.சமூக நல்லிணக்க அணியை நடத்தி வந்த இவர், சில ஆண்டுகளாக இக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலராக இருந்தார். மேயர் தேர்தலில் போட்டியிடுமாறு தலைமை கேட்டுக் கொண்டதால், போட்டியிட்டார். நேற்று முன்தினம் மதுரையில், திருமாவளவன் பிரசாரம் செய்தபோது, அதில் பங்கேற்காமல் பசும்பொன் புறக்கணித்தார்.
நமது நிருபரிடம் பசும்பொன் கூறியதாவது :பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, செப்., 20ல் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தை முக்கிய நிர்வாகி ஒருவர், பசும்பொன் தேவர் குறித்து சில கருத்துக்களை கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க, திருமாவளவனிடம் கூறினேன். இதுவரை அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.நேற்று முன்தினம் அவர் சார்ந்த சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திருமாவளவன், பிரசாரம் செய்தார். அனைத்து மக்களும் வசிக்கும் பகுதிகளுக்கு வருமாறு அழைத்ததற்கு, "உங்கள் ஓட்டுகளை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார். இதனால் போட்டியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகி உள்ளேன். இதுகுறித்து தேர்தல் கமிஷன்,
கலெக்டர் சகாயத்திற்கும் தந்தி அனுப்பி உள்ளேன், என்றார்.

(ஜாதி பாக்குற சமுதாயம் இல்ல எங்கள் தேவர் சமுதாயம்)
No comments:
Post a Comment