engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Thursday, 8 September 2011





பெண்களின் மனதை கவருவது எப்படி? உங்களுக்காக சில யோசனைகள்!!

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.

இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:

நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.

நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.

பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.

பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது.

எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம் போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போக வேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விடயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும்? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள்.

இன்றைய 21ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வனாவது நிச்சயம்.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips