engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Tuesday, 20 September 2011

devarsrini






பெண் காதல் வயப்பட்டிருந்தால்!

1) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம்.
(கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)

அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்"
எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை.

பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?
பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள்.

தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips