engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Wednesday, 28 September 2011

வேதாரண்யம் தேவர் வரலாறு

நமது வேதாரண்யம் பற்றின பழமையான வரலாற்றினை ... இதில் எனக்கு தெரிந்த உண்மையான தகவல்களை நான் தருகிறேன் .... இதே போல் ... அனைவரும் அவர் அவர்களுக்கு தெரிந்த ...வேதரன்யத்தை பூர்விகமாக கொண்ட தேவர்(அகமுடையார்) பற்றி தங்களுக்கு ஆதாரபுர்வமாக தெரிந்த செய்திகளை  (devarsrini@gmail.com) என்ற id கு  தருமாறு கேட்டு கொள்கிறேன்

திருமறைகாடு என்பதுதான் வேதாரன்யத்தின் உண்மையான தமிழ் பெயர். அதாவது
வேதம் என்பது மறை, ஆரண்யம் என்பது காடு, வடமொழியில் -வேதாரண்யம் ...தமிழில்-திருமறைக்காடு...

வேதங்களின் தலைவன் ...முதல்வன் ..எம்பெருமான் சிவபெருமான் விற்றிருக்கும் ஆரண்யம் (காடு). என்பது நமது திருமறைகாடு என்பதிற்கு பொருள். 
தல வரலாறு:


வடமொழி வேதங்கள் ரிக், யசூர்,சாம, அதர்வண என்ற நான்கும் மனித உருக் கொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன் இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை ., இனி நாங்கள் இருப்பது நல்லதல்ல என்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது.பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர்.பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும் ,வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம் என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.  

தல சிறப்பு

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு. இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது. வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம். நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி - அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது. 

கோட்டைபத்து அகமுடையரின் கோட்டை

சோழ பேரரசின் கிழக்கு எல்லை வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை
உலகின் தலைசிறந்த கடற்படை சோழர்களின் கடற்படை...கோடியக்கரை என்று சோழர்களின் ஒரு முக்கியமான துறைமுகம் ...இது போர் படை துறைமுகமாக மட்டுமே இருந்தது ... சோழர்களின் மிக முக்கிய படைகளில் கோட்டைபத்து தேவர்கள் என்பது இதிலிருந்து நமக்கு விளங்கும்....

இது மறுக்க முடியாத உண்மை.... 

கோட்டைபத்து அகமுடையர்களின் கோட்டை காக்கும் முறை

கோட்டைபத்து அகமுடையர்களின் கோட்டை காக்கும் முறை

கோட்டை என்பது மன்னனின் அரண்மனை ,கருவுலம்(கஜான), ஆயுத கிடங்கு , அமைச்சர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் , அனைத்து தலைமை அலுவுலகங்கள்...அனைத்தும் உள்ளடங்கியது .. இதனைத்தையும் சுற்றி வானுயர்ந்த மதில் எழுப்ப பற்றிருக்கும்.... அதன் பிறகு அகழி ஒன்று கோட்டையை சுற்றி தோண்ட பற்றிருக்கும் அதில் கொடிய முதலைகள் விட பற்றிருக்கும்....இப்படி பட்ட கோட்டை காவல் மற்றும் கோட்டையின் தினசரி செயல்பாடுகள் அனைத்தும்.... இவர்கள் வசமே இருந்தது .

வேல் ,வில் அம்பு ,வாள் ,அரிவாள் ,கொதிக்கும் எண்ணெய்(மதில் மேல் ஏறி வருபவர்கள் மீது ஊற்ற), மற்றும் பல ஆயுதங்கள் கொண்டு கோட்டையை காத்தனர்

கோட்டைக்குள் யார் எப்போது வர வேண்டும் ... என்று நிர்ணயக்கும் அதிகாரம் இவர்களிடம் மட்டுமே இருக்கும்..
இலச்சினை இல்லாத எவரும் கோட்டைக்குள் அனுமதிகவோ முக்கிய அதிகாரிகளை பார்க்கவோ முடியாது ...

நாடு முற்றிலும் எதிரிகள் ஆக்ரமித்த பிறகும்... கோட்டைக்குள் அவர்கள் நுழையாத படி அம்பு மழை போல் எய்து எதிரிகளை விழ்த்தி கோட்டையை காத்தனர்.... 
 
நன்றி 
orkut   சொந்தமே
 
 

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips