engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Tuesday, 27 September 2011

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்:



1. மாநில எல்லை சீரமைப்பில் காமராஜ் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய வியாபாரி நாடர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளை சென்னை மாகாணத்தோடு இணைப்பதில் காட்டிய அக்கறையினை கேரள இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேடு, தேவிகுளம், முல்லைப் பெரியாறு, தேக்கடி, குமுளி, மூன்று போன்ற நாடார் இன மக்கள் வசிக்காத மூப்பனார், நாயக்கர், தேவமார், அரிசன், இஸ்லாமியர் வாழும் பகுதிகளை இணைப்பதில் அக்கறை கட்டவில்லை. இன்று வரை இப்பகுதி வாழ் தமிழ் மக்கள் காமராஜ் நாடார் மீது பெரும் மனக்குறையுடன் தான் கேரளா மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அன்றே… இப்பகுதி இணைப்பு குறித்து எதிர்க்கட்சிகளும், எல்லாப் பத்திரிக்கைகளும், எவ்வளவோ எழுதியும் காமராஜ் நாடார் கண்டு கொள்ளதவராகவே இருந்து விட்டார்.

2. 1954-ல் மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு தமிழ்நாடு முதன் மந்திரி பதவி மீது காமராஜ் நாடாருக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கு மற்றக் கட்சி தலைவர்களிடமும், சுய மரியாதை இயக்கத் தலைவர்களிடமும், ஆதரவு கேட்டுப் பெற்ற காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரிடம் ஆதரவு கேட்க, ஸ்ரீ வரதராஜுலு நாய்டு வீட்டில் சந்திப்பு நடக்கிறது. அவரிடம் காமராஜ் மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியோடு இருப்பது நல்லது என்றும் “உங்களைப்பற்றித் தெரியும் (காமராஜ் நாடார் இனப்பற்று மிக்கவர்) இந்தப் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என்றும் பசும்பொன் பெருமகனார் மறுத்துவிட காமராஜ் நாடாருக்கு தேவர் மீது வெறுப்பு தோன்றுகிறது.

3. இதற்கு முன்னரே பசும்பொன் பெருமகனார் பற்பல கூட்டங்களில் விருதுநகர் வியாபாரிகள் பற்றிப் பேசி வந்தார்.

“நிலத்தில் எடுக்கப்படும் இரும்பு, தங்கம், வெள்ளி, நிலக்கரி, பெட்ரோல் பெருட்கள், புகையிலை, கரும்பு, உலோகம் மற்றும் தாதுப் பொருட்கள் முதலான விலைப் பொருட்களை அரசே எடுத்துக் கொண்டு, அதற்குரிய விலையை நிர்ணயம் செய்கிறது.

ஆனால் தரமாக விளையக்கூடிய பொருட்களை விவசாயிடமிருந்து வாங்கி, அதைத் தரம் பிரித்து வணிகம் செய்து, தரமில்லாத பொருட்களை கலப்படம் செய்து விற்று, அதை உண்ண வைக்கிறார்கள்”.

“வயலில் இடுப்பொடிய விவசாயம் செய்கிறான் நம் விவசாயி. உடப்பில் உப்புப்பரிய பருத்தி எடுக்கிறாள் எம் பெண் மக்கள். ஆனால் அதற்கு விலை வைப்பதோ விருதுநகர் வியாபாரி. இது எந்த வகை நியாயம்! இதையெல்லாம் அரசாங்கம் நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்க செய்ய வேண்டாமா? என்று மேடையில் பேசினார்.

விருதுநகர் வியாபாரிகள் கலப்படம் செய்து, தரமில்லாத பொருட்களை விற்கிறார்கள். வியாபாரம் தர்மத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்கிறார்கள் என்று பல கூடங்களில் பேசி வந்தார்கள்.

அன்றைய சினிமாவிலும், நாடக மேடைகளிலும் கலப்படம் பற்றிய பாட்டுக்கள் பல வந்துள்ளன. உதாரணமாக ஒரு பாட்டு….

“இருந்தா முக்காலணா
இல்லேன்னா காலணா! லேபிள்
இருந்தா முக்காலணா
இல்லேன்னா காலணா!
பழைய புட்டி, பழைய டப்பா….
டப்பா….டப்பா….என்ன டப்பா!

என்ற பாட்டு அப்போது மிகவும் பிரபலம். இது விருதுநகர் நாடார் வியாபாரிகளுக்கேன்றே எழுதப்பட்டது போலிருக்கும்.

அப்போது கார்லிக்ஸ் டப்பா டின், பால்பவுடர் டப்பா, முகப்பவுடர் டப்பா, காப்பித்தூள் டாப்பா, டின்கள் இவைகளின் லேபிள் கிழியாமல் இருந்து கொடுக்கப்படும் டப்பா, மற்றும் டின்களுக்கு கூடிதல் காசும், லேபிள் இல்லாமலும், கிழிந்தும் இருக்கும் டப்பா மற்றும் டின்களுக்கு குறைந்த காசும் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள், கூடை வியாபாரிகளான நாடார் வியாபாரிகள். இவைகள் அன்று கலப்படம் செய்து விர்ப்பதர்க்கு பயன்பட்டன.

இப்படியெல்லாம் பசும்பொன் பெருமகனார் பேசியதனால் தூத்துக்குடி நாடார் வியாபாரி ஒருவர் கோபம் கொண்டு “இவரை வெட்டிப் போட்டுவிட்டு ஜெயிலுக்கு போனால் தப்பில்லை” என்று பேசியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பெருமகனாரும்….

“என் ஒருவனைக் கொள்வதனால்; அவர்களுக்கு திருப்தி எனில், என்னை கொன்று விட்டுப் போகட்டும். நான் இறந்தாலும்; என் போன்ற ஆயிரமாயிரம் முத்துராமலிங்கத்தைப் பெற்றெடுக்கும் சக்தியுள்ளவள் என் பாரத மாதா!” என்று பேசினார்.

4. பசும்பொன் பெருமகனார், காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்று பல மேடைகளில் பேசினார். இது பற்றி திரு.கே.ஆர்.நல்லசிவம், எம்.எல்.ஏ. அவர்கள் 1957 அக்டோபர் மாதம் 29ந் தேதி சென்னை மாகாண சட்டசபை கூட்டத் தொடரில் ஒரு கேள்வி எழுப்பிகிறார்.

“ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் திரு. காமாராஜ் நாடார் அவர்கள் கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகிப்பதற்கு உடந்தையாக உள்ளார்கள் எனக் குறிப்பிட்டதாகச் செய்தி வந்தது. நாட்டிலும் இது பற்றி அநேகப் பேச்சுக்கள்!

குறிப்பாக….
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வந்திருக்கிறது. விலைவாசிகள் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. சர்க்கார் ஒரு பங்கு அதாவது 500 கோடி ரூபாய்க்கு நூறுகள் வெளியிட்டார்கள் என்றால்…. அதைபோல் வெளியில் இருப்பவர்கள் இன்னொரு மடங்கு 500 கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சிட்டார்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்” என்று பேசுகிறார்.

அதற்கு காமராஜ் நாடரின் பதில்…

திரு. காமராஜ் (தமிழக முதல்வர்): நான் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகிக்கிறேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா! அச்சிட்டு விநியோகிக்க நான் உடந்தையாக இருக்கிறேன் என்பது போலவே பேச்சு இருக்கிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா?

திரு.கே.ஆர்.நல்லசிவம், (எம்.எல்.ஏ): உண்மையிலேயே அவர் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்று தான் கேள்விப்பட்டேன். செல்வாக்குள்ள பத்திரிக்கைகளில், பத்தாயிரம், இருபதாயிரம் பிரசுரமாகிற பத்திரிக்கைகளில் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆகவே இது பொய் என்பதை நிரூபிப்பதற்காகவாவது ஏன் அப்போதே முதல் மந்திரி அவர்கள் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு தொடரவில்லை என்று தான் கேட்கிறேன்.

உண்மையில் அந்தக் குற்றச்சாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றால் நாட்டுமக்கள் உண்மையை அறிந்து கொள்ள, அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்திய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு நடத்தியிருக்கவேண்டும். அவர் என்ன சாதாரணமானவரா? ஒரு பொறுப்புள்ள அங்கத்தினர். பாராளுமன்ற உறுப்பினர்.

இந்தக் கேள்விகளுக்கு காமராஜ் நாடார் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.
(“சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு” பக்கம் 85-86 )

5. பசும்பொன் பெருமகனார், சென்னை திருவல்லிக்கேணி கூட்டத்தில் காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிக்கத் துணை போகிறார் என்று பேசியதைக் கேட்ட ஐ.ஜியின் நடவடிக்கையால் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் விருதுநகர் நாடார் வியாபாரி நாராயணசாமி கைது செய்யப்படுகிறார். ஆனால் அவரை காமராஜ் நாடார் சிபார்சு செய்து, வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க இயலாதவாறு செய்து விடுவிக்கப்படுகிறார்.

அந்த விருதுநகர் வியாபாரி மீது நடவடிக்க எடுக்கப்பட்டதா என்று சட்டசபையில் கேள்வி கேட்டபோது திரு. காமராஜ் நாடாருக்குப் பதிலாக திரு.கே.சி.சுப்பிரமணியம் பதில் கூறுகிறார்.

“இந்த கேஸை மேற்கொண்டு நடத்த முடியவில்லை!” என்று கூறுகிறார். ஏனெனில் காமராஜ் நாடார் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கும். அதனால் மூடி மறைத்துவிட்டார்கள்.
(“தேவரின் மேடை பேச்சு” பக்கம் 64 )

6. அப்போது காமராஜ் நாடாரின் மந்திரி சபையில் மந்திர்கள் லஞ்சம் வாங்கியது சம்பந்தமாக பசும்பொன் பெருமகனார் குற்றம் சாட்டிப் பேசினார். காமராஜ் நாடாரின் சக மந்திரி ஒருவர் லஞ்சமாக பணம் பெற்றுக் கொள்ளாமல், ஒருவரிடம் “ப்ளாங்க் செக்’ வாங்கிய விவகாரம் அப்போது பிரபலமாகப் பேசப் பட்டது. அம்மாதிரி பெயர் பி.பரமேஸ்வரன். அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கப் படவில்லை.

7. 1955-ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வில் (Tண்Pஸ்C) சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு செய்ததில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாடார் இன மக்களாகவே காமராஜ் நாடரின் சிபாரிச்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். கள்ள நோட்டு அச்சிட்டதாக அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான தேனி தியாகராஜன் அவர்கள் மீது வதந்திகளும், கோயம்புத்தூர் கிருஷ்ணன் (மில் அதிபர்) மீது நூறு ரூபாய் கள்ள நோட்டு வழக்கும், நடந்த செய்தி தமிழகம் மற்றும் இந்தியாவையே உலுக்கியது.

8. உண்மையான காங்கிரஸ்காரர்களும், காமராஜ் நாடாரால் மனம் நொந்து போன தேசியவாதிகளும் சேர்ந்து, பசும்பொன் பெருமகனார் தலைமையில் சீர்திருத்தக் காங்கிரஸ் போன்ற கட்சியை தோற்றுவித்து, 1957 தேர்தலில் 80 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றிகளினால் அதிர்ச்சியடைந்த காமராஜ் நாடாருக்கு, அடுத்த தேர்தலில் சீர்திருத்த காங்கிரஸ் ஜெயித்து வந்து ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தோன்றத் தொடங்கியது. இதனால் காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று துடிக்கிறார்.

9. 1955-ல் பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் சீலபத்ரயாஜி மூலம் காங்கிரஸ் கட்சியில் பார்வர்டு பிளாக் கட்சியை இணைக்க நடந்த முயற்சியை பசும்பொன் பெருமகனார் தடுத்து விட்டதோடு, நேரு நடத்திய இணைப்பு நாடகத்தை போலி என்று மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கியது நேருவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

10. இரண்டாம் முறை பர்மா சென்று வந்த பசும்பொன் பெருமகனார் “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை பார்த்து விட்டு தான் வருகிறேன். இப்போது அவர் யுத்த முனையில் இருக்கிறார்” என்று கல்கத்தாவில் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் பேசியது; நேதாஜி இறந்து விட்டார் என்று நம்ப வைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்த நேருவுக்கு மிகுந்த கோபத்தோடு தலைவலியைக் கொடுத்தது.

“உண்மையான சுதந்திரம் 1937லிலேயே வந்திருக்க வேண்டும். பத்து வருட கால தாமததிருக்கு காரணமே, அப்போதுள்ள காங்கிரஸ்காரர்கள் தான்” என்றும்

மேலும் “நாம் அடைந்துள்ள இந்த சுதந்திரமானது முழுச் சுதந்திரமல்ல. மூளிச் சுதந்திரம். மவுண்ட் பேட்டனின் பிரித்தாளும் தந்திர முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரதத் தாய் கைகளுக்கு இரட்டை விலங்கு போடப்பட்ட நாள் தான் ஆகஸ்ட் 15ம் நாள். மேலும் மூன்றாவது உலகப் போர் தொடங்கும் காலத்தில் நேதாஜி சுபாஸ் பாபு தக்க நேரத்தில் தனது சேனையோடு பாரதத்திற்குள் பிரவேசிப்பார். அக்காலத்தில் நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கச் செய்வார்” என்று பசும்பொன் பெருமகனாரது ஆணித்தரமான பேச்சும்,

“இந்தியாவின் வீரமகனான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தலையை அடமானமாக வைத்துதான் பிரிட்டிசாரிடம் சுதந்திரம் பெற்றது காங்கிரஸ். இது கேவலமான சுதந்திரம்” என்றும் பேசியது நேருவுக்கு எரிச்சலை ஊட்டியது.

1937லிருந்து தொடர்ந்து எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருப்பவரை எப்படியாவது பாராளுமன்றத்திற்கு வரவிடாமல் செய்து விடுங்கள் என்று காமராஜ் நாடாருக்கு நேரு கட்டளை இடுகிறார்.

மேலே நேருவுக்கு நேதாஜி சம்பந்தமாக பசும்பொன் பெருமகனரால் பெரும் தலைவலி, நெருக்கடி, கீழே தமிழ்நாட்டில் காமாராஜ் நாடாருக்கு தன் இனமக்கள் பிரச்சனைகளைப் பேசியதால் இடைஞ்சல் ஆகியவை தனி மனிதரான பசும்பொன் பெருமகனாரை நேரிடையாக சந்திக்க முடியாமல்…

இரண்டு அரசுகளின் மூலம் ஒரு சதித் திட்டம் தீட்டப்படுகிறது. அதுதான் இராமநாதபுரம் ஜாதிக் கலவரம். அதற்கு பகடைக் காயாகப் பயன்படுத்தப் பட்டு பலிகடாவாக ஆக்கப்பட்டவர்தான் காங்கிரசின் பிரதிநிதியான திரு. இம்மானுவேல் அவர்கள்.

அப்போதைய முதல் மந்திரியான காமராஜ் நாடாரின் ஆலோசனையின் பேரில், அரிசன நலத்துறை மந்திரியான கக்கன் அவர்களும் இம்மானுவேலுக்கு கட்சியில் பல பதவி தருவதாகக் கூறினார். அரிசனங்களின் ரிசர்வ் தொகுதிகளில் தேர்தலுக்கு நிற்பதர்க்கான தகுதி இந்து-அரிசனுக்குத் தான் உண்டு. ஆகவே கிறிஸ்தவரான இம்மனுவேலுவை இந்து மதத்திற்கு மாற்றி இம்மானுவேல் சேகரன் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். ஆனால் கக்கன் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், காமராஜ் நாடார் எந்த பதவியும் அவருக்குத் தராமல் காலதாமதம் செய்தார். இதை அப்போதைய அரிசன மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர்.

மேற்கூறியவைகள் எல்லாம் காமராஜ் நாடார் படிக்காதவராக இருந்தாலும், தனது இன மக்களுக்கு அனுசரணையாகவும், கூடுதல் பற்றுதலுடனும் இருந்தார் என்பதற்கு சான்றாகவும், பசும்பொன் பெருமகனாருக்கு எதிராக செயல்பட தூண்டிய காரணிகள் என்பதுவும் வெள்ளிடைமலை.
நன்றி :
தனியன்.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips