- இந்திய விடுதலை போராட்டத்தை தொடங்கி வைத்தவர் .... வெள்ளையனே வெளியேறு என்று முதல் குரல் கொடுத்த நம் முக்குலத்து தெய்வம் காத்தப்பராசா பூலித்தேவன் .......... இவர் பிறந்த இடம் திருநெல்வேலி சீமையில் நெல்கட்டும் சேவல் ... ஒரு மதம் பிடித்த யானையை ஒரு சேவல் எதிர்த்து நின்ற இடம் .. வீரம் விளைந்த பூமி ... 01. 09. 1715 இல் சித்திரபுத்திர தேவரும் சிவஞான நாச்சியாரும் பெற்ற இளவரசர் காத்தப்பராசா தேவர் .... சின்ன வயதிலையே மிகுந்த ஆற்றலும் திறமையும் கொண்டவர்....1726 இல் தன்னுடைய 12 வயதிலேயே அரசனாக பதவி ஏற்றார் ... மதுரை மக்களை அச்சுறுத்திய புலியை கொன்றதால் பூலித்தேவன் என்று அழைக்கப்பட்டார் .... பாளையக்காரர்களில் நிர்வாகத்திறன் அதிகம் உள்ளவர் பூலித்தேவன் மட்டுமே ...... நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் மீதம் இருக்கும் பணத்தை கோவில் திருப்பணிகளுக்கும் ,அறப்பணிகளுக்கும் செலவிடுவார் ... பூலித்தேவரின் வீரத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .....இவரின் போர் வாளின் எடை 17 கிலோ,... இந்தியாவில் பிழைக்க வந்த பரங்கியர்களினால் { வெள்ளையர்கள் } ஆபத்து வரப்போவதை முன்னரே கணித்த பூலித்தேவர் பாளையக்காரர்களை ஒற்றுமைப்படுத்த எண்ணினார் ..... அதில் ஓரளவு வெற்றியும் கண்டார்.... ஆனால் வெறும் பேச்சளவில் வீரமாக இருந்த மற்ற பாளையக்காரர்கள் போர் என்றதும் பின்வாங்கினர் .... பரங்கியர் பூலித்தேவரிடம் வரி கேட்க வந்தனர் ... சும்மா பெயரளவில் கொஞ்சம் கொடுங்கள் போதும் என்றார்கள் பரங்கியர் .... என்னிடம் இருந்து ஒரு நெல்மணியை கூட உங்களால் கொண்டுசெல்லமுடியாது என்றார் பூலித்தேவர் ......1755 இல் வெள்ளையர் படையின் முதல் தளபதி அலெக்ஸாண்டர் ஹெரான் பூலித்தேவரை வெல்ல படையெடுத்து வந்தான் ... அவனை பூலித்தேவர் போரில் வென்று ஓட விட்டார் .... பூலித்தேவரை ஜெயிக்க வெள்ளையர்களால் ஒரு பெரும் படை உருவாக்கப்பட்டது ,.. அந்த படைக்கு தலைவனாக மருதநாயகம் { யூசுப்கான் } என்ற ஒரு தமிழன் நியமிக்கப்பட்டான் .... பதவி ஆசைக்காக அவனும் இதை ஏற்றுக்கொண்டான் ...... பூலித்தேவரை வெல்ல 1755 to 1767 வரை 12 வருடங்கள் போரிட்டாலும் அவரை ஜெயிக்க முடியல ... பூலித்தேவர் கோட்டையில் ஒரு சிறிய விரிசல் ஏற்படுத்த வெள்ளையர்கள் எடுத்துக்கொண்ட காலம் 12 வருடங்கள் .... தன் கோட்டையை எதிரிகள் கைப்பற்றிய பிறகு 2 மாதம் பதுங்கி இருந்து மீண்டும் புலி போல பாய்ந்தார் பூலித்தேவர் ...வெள்ளையரோடு போரிட்டு வென்றார் ..... இறுதியாக ஒரு மாபெரும் படையை திரட்டி வந்தனர் வெள்ளையர்கள் .... இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பெய்வாய் பிரங்கிகளும் அந்த படையில் அணிவகுத்தன .....அந்த படையின் நவீன ஆயுதங்கள் முன்னால் பூலித்தேவன் படையின் வேல்கம்பும் வாளும வெகுநேரம் நிற்க முடியவில்லை ....பிறகு பூலித்தேவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார் ... அவர் உயிரோடு தெய்வமாக மாறினார் என்றும் நம் வரலாறில் உண்டு .... வாழ்க பூலித்தேவர்....வளர்க அவர் புகழ் .... பூலித்தேவன் பேரன் டா
engalin uyir
Monday, 5 March 2012
இந்திய விடுதலை போராட்டத்தை தொடங்கி வைத்தவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment