engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Wednesday, 7 March 2012

தேவர் யார்?


அருமை உறவினர்களுக்கு,
 
விலங்கின் குணத்திலிருந்து மனிதனாய் மாறி பின் பல்வேறு குணநலன்களை புரிந்துகொண்டு  அதில் மெருகேறி பலவற்றை பேணும் போற்றுதலுக்குரிய குணம் கொண்டோர் தெய்வமயமானவர்கள் தேவர்கள் என அழைக்கப்பட்டனர். எல்லோரையும் மதிக்கும், அவர்களை வேறுபாடு பார்க்காது காக்கும், மனமும், குணமும், உடலும் கொண்டோர் தெய்வர்கள் என்றும், தெய்வமயமானவர்கள் என்றும் அது மருவி தேவர்கள் என்றும் அழைக்கப்பட்டது படுகிறது.
 
ஆகையால் நல்ல குணம் எவை? தீயவை எவை? அவற்றின் கூறுகள் என்ன? அதன் பாதிப்புகளை குறைப்பது எப்படி? நல்ல எண்ணங்களை செயல்களை, மனநிறைவை, அமைதியை பெற்று தனிமனிதராய் சமூகத்தில் பெருவாழ்வு பெறுவது எப்படி? போன்ற பல்வேறு சிந்தனைகள் ஏற்கனவே பல உள்ளன.
 
அவற்றை நாம் தெரிந்து கொள்வதும், பழகிக் கொள்வதும், தனக்கும் பலருக்கும் நன்மைபயக்கும் வாழ்வு வாழ்வதும் பெரும்பேறு. அதை எல்லோரும் பெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 
சிற்றறிவில் சிதறிப் போகாமால், பொருளாதார சூழ்ச்சியில் துவண்டு விடாமல், கடும் கோபத்தில் சிக்கி கொள்ளாமல், காமத்தில் கவிழ்ந்து விடாமல், பழிகெடுத்து, பகைகெடுத்து மகிழ்வுடன், நிறைவுடன், முகமலர்ச்சியுடன் சமூக மாற்றத்திற்கு எப்படி முன்னேடுப்பது என்பதை நம் முன்னோர்களை ஆய்ந்து தெளிந்து விளக்கியுள்ளனர். அது தான் பட்ட பாடாகிய பண்பட்ட பாடாகிய  பண்பாடு என்பது.  
 
நல்லவை நமக்கு சரியான நேரத்தில் சரியாத தருணத்தில் சிறப்பாக வந்து சேரும்.
அவற்றை நம்முள் இணைத்து முன்னேறுவதும், கைவிட்டு கவலையேற்றுக்  தடுமாறுவதும் நம் கைகளில் தான் இருக்கிறது.
 
நல்லவை நினைத்து, நல்லவை செய்து, தெய்வத்திருஉருவாய் தெய்வராய் தேவராய் மாறுவோம்! என்றும் இருப்போம்!
நல்ல தலைமுறையையும் முன்னெடுப்போம்!
 
உங்களின் கருத்து முனைப்புக்காகhttp://www.youtube.com/watch?v=sj0B6xncxv4
 

வாழ்க வளமுடன்!
 
நன்றி,
தனியன்.
YouTube - Videos from this email




No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips