- இன்று காலை தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணியினர் மேற்கொண்ட மதுரை விமான நிலைய முற்றுகையால் விமான நிலைய வளாகமே போர்க்களம்போல காட்சியளித்தது.
- காவல்துறைக்கு முன்னறிவிப்பு செய்யாமலேயே போராட்டத்தை நிகழ்த்தியமையால் காவல்துறையினர் திணறிப் போயினர். இது தொடர்பாக தேவர் பேரவை இளைஞர் அணி பொதுச்செயலாளர் திரு பசும்பொன் முத்தையா தேவர் அவர்கள் அளித்த செய்தி :
- " மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரைவைக்க கோரி தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி சார்பில் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை செவி சாய்க்காத மத்திய அரசின் இந்த செயல் தேவர் மக்களின் மனதை புண்படுத்திய செயலாகும்.
- தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி சார்பில் கடந்த 23.10.2011 அன்று இதே கோரிக்கைக்காக மதுரை விமான நிலையத்தை என் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்ற வகையில் இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தியிருகின்றோம் . இதற்கு மேலும் தாமதிப்பின் தமிழகம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
- இதப் போராட்டத்தில் : வி.பி.தேவன் , ஆர், தேவராஜ், எஸ்.செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் ஜி.சீனு , ராமு, லட்சுமணன், கே.பழனிச்சாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
engalin uyir
Monday, 5 March 2012
தமிழ்நாடு தேவர் பேரவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment