engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Sunday, 25 March 2012

லட்சுமமணன்.

கும்பகோணம், மார்ச். 23-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் அனுமார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க ராசுமகன் லட்சுமமணன். (வயது 33). மூவேந்தர் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளராக இருந்தார். நேற்று இரவு லட்சுமணன் தாராபுரம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமணனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய லட்சுமணனை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இறந்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் மூவேந்தர்
முன்னேற்ற கழகத்தினர் திரண்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாஸ்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். லட்சுமணனை கொன்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது. கொலையுண்ட லட்சுமணன், கடந்த 2009-ம் ஆண்டு தாராசுரம் கேண்டீன் ஊழியர் செந்தில் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் வீரமைந்தன் கொடுத்த புகா ரின் பேரில் லட்சுமணன் மீது வன்கொடுமை வழக்கும் உள்ளது. இவை தவிர கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே இதில் பாதிக்கப்பட்டவர்கள் லட்சுமணனை பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

லட்சுமணனின் உடல் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. கொலை யாளிகளை கைது செய்ய கோரி மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரியில் முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். கொலையுண்ட லட்சுமணனுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. மனைவி பெயர் வினிதா.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கணவர் இறந்த செய்தியை கேட்டு அவர் கதறி துடித்தார். கொலை சம்பவத்தை அடுத்து தாராசுரம் பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips