நெல்லை, ஆக.14-
பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம் சார்பில் பூலித்தேவர் பிறந்த நாள்விழா, மருதுபாண்டியர் நினைவு நாள், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா ஆகிய முப்பெரும் விழா கூட்டம் பாளையில் இன்று நடந்தது.
விழாவுக்கு பசும்பொன் தேசிய கழக மாநில பொருளாளர் ராமர் தலைமை தாங்கினார். செயலாளர் மகேஸ்வரன், சினிமா டைரக்டர் உதயன், மாநில வக்கீல் அணி செயலாளர் முத்துமந்திர மூர்த்தி ஆகியோர்முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர செயலாளர் மாணிக்கராஜ் வரவேற்று பேசினார். பசும்பொன் தேவர் மக்கள் இயக்க தலைவரும், முத்துராமலிங்க தேவரின் பேரனுமான வெள்ளைச்சாமி தேவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, டைரக்டர் மனோஜ்குமார், சென்னை தொழிலதிபர் எழில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பூலித்தேவர் பிறந்த நாளான செப்டம்பர்1-ந்தேதியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். மதுரைவிமானநிலையத்திற்கு வருகிற 30-ந்தேதிக்குள் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டவேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் மருதுசகோதரர்கள் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். முத்துராமலிங்க தேவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
கள்ளர், மறவர், அகமுடையாரை தேவர் இனம் என அறிவித்து முறையான அரசாணை வெளியிட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம் அனைத்து சமுதாய மக்கள் மீது தவறாக பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment