- சங்கரன்கோவில்:""அ.தி.மு.க.,வை விட்டு எத்தனை பேர் விலகி சென்றாலும் முக்குலத்தோர் சமுதாயம் ஜெயலலிதா பின்னால் நிற்கும்'' என்று சங்கரன்கோவிலில் நேற்று அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தெரிவித்தார்.சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளத்தில் நேற்று மாலை அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சியின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் சங்கரன்கோவில் பயணியர் விடுதிக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சங்கரன்கோவில் தொகுதி அ.தி.மு.க.,வின் கோட்டை. இந்த தொகுதியில் தொடர்ந்து பல முறை அ.தி.மு.க.,வெற்றி பெற்று இருக்கிறது. ஜாதி கலவரம் அதிகமாக இருந்த காலங்களில் கூட சங்கரன்கோவிலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு இரண்டு சமுதாயத்திற்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கி இருக்கிறார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும், வாக்குறுதி கொடுக்காத திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறார்கள். தற்போது ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு வகையில் எடுத்த கருத்து கணிப்பின்படி மற்ற கட்சிகள் மிகப்பெரிய அளவில் தோல்வி அடையும் என்று தெரிய வருகிறது. டெப்பாசிட் தொகையை தக்க வைத்துக் கொள்வதற்காக மற்ற கட்சிகள் வேலை செய்ய வேண்டும்.
- இந்த முறை தில்லு, முல்லு இல்லாத தேர்தலை மக்கள் பார்க்க இருக்கிறார்கள்.
- தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக தான் பால் விலை, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வியாதிக்கு கசப்பு மருந்து கட்டண உயர்வு தான்.
- அ.தி.மு.க.,வை விட்டு எத்தனை பேர் விலகி சென்றாலும் ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாயமும் ஜெயலலிதா பின்னால் தான் அணி வகுத்து இருக்கிறது. நாங்களே வெளியே சென்று விட்டு தான் வந்து இருக்கிறோம். தி.மு.க.,வினர் அடித்த கொள்ளை மக்களுக்கு தெரியும். அ.தி.மு.க.,வை விட்டு சிலர் சென்றதால் ஜெயலலிதாவிற்கு நல்ல காலம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் கூடும். கடந்த தேர்தலில் அமைச்சர் கருப்பசாமி வாங்கிய ஓட்டுகளை விட அ.தி.மு.க., வேட்பாளர் முத்துசெல்வி அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார். நாங்கள் அ.தி.மு.க.,வுடன் இணைந்து பிரசாரம் செய்வோம். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எங்கள் தேர்தல் பணிக்குழு தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டது. இவ்வாறு டாக்டர் சேதுராமன் தெரிவித்தார்.
- பேட்டியின் போது, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொது செயலாளர் இசக்கிமுத்து, மாநில அமைப்பு செயலாளர் வேலாயுதசாமி, தலைமை நிலைய செயலாளர் குருசாமி, மாநில துணை தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் குருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
engalin uyir
Friday, 10 February 2012
சங்கரன்கோவில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment