engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday, 19 December 2011

இளைய தளபதிக்கு ஒரு கடிதம்



  எதிர்கால தமிழக முதல்வரும் , அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று , ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மிக கடினமான
சோதனைகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்து முனைவர் படம் பெற்று அதை பெருமையாக தன்
பெயருக்கு பின்னால்
எப்பொழுதும் போட்டு கொள்ளும் இளையதளபதி டாக்டர் ஜோசப் விஜய்
அவர்களுக்கு,


உங்களை பற்றி ஏதாவது
எழுதினால் உங்கள் அடி பொடிகள் ஏதோ நாங்கள் பொறாமையில் எழுதுவதாக பிதற்றுகிறார்கள். உங்கள் மேல் பொறாமை படும் அளவுக்கு நீங்கள் என்ன செய்து
விட்டீர்கள் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. நீங்கள் ஒரு சினிமா நடிகனாக
மட்டும் தங்களை அடையாளபடுத்தி இருந்தால் உங்களை புறக்கணித்து விட்டு நாங்கள் எங்கள் வேலையை பார்த்து
கொண்டிருப்போம். ஆனால் ஒரு சமூக ஆர்வலராக
, எதிர்கால அரசியல்வாதியாக மாற  முயலும் உங்கள் நடவடிக்கைதான் உங்களை பற்றி இப்படியெல்லாம் எழுத தூண்டுகிறது.
எனக்கு உங்களின் சினிமாக்கள் பெரும்பாலும் பிடிக்காது (கில்லி ,சிவகாசி
மட்டும் விதிவிலக்கு) ,ஆனால்
இந்த பதிவு அதை பற்றியது இல்லை. உங்களின் மற்ற இரண்டு
பரிமாணங்களான சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆகியவற்றை பற்றிதான் எழுதபோகிறேன். அஜீத் இந்த இரண்டு பரிமானங்களிலும்
தன்னை வெளிபடுத்திக்கொள்வதில்லை என்பது எனக்கு சாதகமான
விஷயம்தான் என்றாலும் அதற்காக மட்டும் இதை எழுதவில்லை ,சினிமாவில் நடித்து விட்டு ,தனக்கு பின்னால் ஒரு கூட்டம் கூடியவுடன்
முதல்வர் கனவுடன் எந்தவிதமான தகுதியும் இல்லாமல் அரசியலில் இறங்க துடிக்கும் உங்களை போன்ற சமூகத்தை கெடுக்கும் கிருமிகளை பார்க்கும் போது சூடு சுரணையுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் எழும் ஆதங்கம் என்னுள்ளும் எழுந்ததே முக்கிய காரணம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு
தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது மற்ற போராட்டங்களை போல இது
ஒரு அரசியல்வாதியின் தலமையிலோ , இல்லை
கார்ப்பரேட் முதலாளிகளின் ஸ்போன்சர்ஷிப்பிலோ , ஜாதி தலைவரின் பெயரை கொண்டோ , உங்களை போன்ற சினிமா நடிகனின் சுயநலத்துக்காகவோ இந்த போராட்டம்
நடைபெறவில்லை. மக்களே முன்னின்று இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நம்முடைய
காலகட்டத்தில் இவ்வளவு மக்கள் ஒரு பிரச்சனைக்காக ஒன்று கூடி நாம் பார்திருக்க இயலாது.
நீங்கள் நாகபட்டினத்தில் உங்கள் சுயநலத்திர்க்காக
கூட்டிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் ஒவ்வொரு நாளும் தேனியில் கூடுகிறது. விஷயம்
அதுவள்ள,

இலங்கையில் தமிழன் மீது
தாக்குதல் நடந்த போது உண்ணாவிரதமும் , மீனவன் சுடபடுவதற்க்கு கண்டன கூட்டமும் நடத்தி தமிழனின் மீது அக்கறை இருப்பதை
போல காட்டி கொண்டீர்கள். அன்னா ஹசாரே மீடியாக்களின் துணையோடு ஊழல் எதிர்ப்பு
போராட்டம் நடத்திய பொழுது ஒரு மணிநேரம் மட்டும்  அந்த மேடையில் அவரோடு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து போட்டோவுக்கும் ,வீடியோவுக்கும் போஸ் கொடுத்துவிட்டு
வந்தீர்கள்  உங்கள் பட வெளியீட்டு நாளிலும்
,உங்கள்
பிறந்த நாளிலும் ஏழைகளுக்கு தையல் மெசினும் . கறவை மாடும் இலவசமாக கொடுத்து அதை
பேப்பரிலும் ,டிவியிலும் விளம்பரபடுத்தி கொண்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்தீர்கள். ஒன்று உங்கள் அரசியல் பிரவேசத்திர்க்கு ஏழை பங்காளன் என்ற விளம்பரம் , இன்னொன்று இதையே காரணம் காட்டி கள்ளக்கணக்கு
எழுதி வருமான வரியில் கொஞ்சம் விலக்கு…   அப்பொழுதெல்லாம்
மக்களின் நலனை விட மீடியாக்களில் உங்கள் பெயர் பரபரப்பாக அடிபடபட வேண்டும்
, மக்கள் மத்தியில் ஒரு சமூக ஆர்வலராக
உங்களை காட்டி கொள்ள வேண்டும் என்ற முனைப்பில்தான் நீங்கள் இதையெல்லாம் செய்தீர்கள்
என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டிருந்தது … அதுதான் உண்மையும் கூட.
பக்கத்து நாட்டில் தமிழன்
அடிபட்ட பொழுது , கூட்டத்தை கூட்டி
நான் அடிச்சா தாங்க மாட்ட , உலக வரைபடத்திலிருந்து
உன் நாட்டையே தூக்கிடுவேன் என்று சிங்களவனை பார்த்து வீராவேசமாக வசனம் பேசினீர்களே , இன்று சொந்த நாட்டிலேயே தமிழன் உரிமை பிரச்சனைக்காக
போராடி கொண்டிருக்கிறானே , அவனுக்காக
இறங்கி போராடாமல் , அமைதி காப்பது
ஏன்? சிங்களவனை கண்டித்து நாகபட்டினத்தில்
கூட்டம் கூட்டியதை போல ,நமக்கு
தண்ணீர் தர மறுக்கும் மலையாளியை கண்டித்து தேனியில் ஒரு கண்டன ஆர்பாட்டம் நடத்த வேண்டியதுதானே?அதில்
மலையாளியை பார்த்து நான் அடிச்சா தாங்க மாட்ட ,இந்திய
வரைபடத்திலிருந்து உங்க மாநிலத்தையே தூக்கிடுவேன் என்று வாய் சவாடல் விட வேண்டியதுதானே.
கண்டிப்பாக முடியாது ,காரணம்
சிங்களவனை எதிர்ப்பதால் உங்களுக்கோ உங்கள் படத்துக்கோ
எந்த பாதகமும் நேர்ந்துவிட போவதில்லை மாறாக இலங்கை தமிழர்களின் ஆதரவு உங்களுக்கும் , உங்கள் படத்துக்கும் அதிகமாகும் .  ஆனால் மலையாளியை பகைத்து
கொண்டால் உங்கள் படத்தை கேரளாவில் வெளியிட தடை விதிப்பார்கள் ,மேலும்
தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யாரும் உங்கள் படத்தை பார்க்கமாட்டார்கள்.
இப்படி இழப்பு உங்களுக்கு என்னும் பொழுது நீங்கள் எப்படி
தமிழனுக்கு ஆதரவாக களம் இறங்குவீர்கள். கண்ணுக்கு தெரியாத ஊழல்வாதிகலையும் , உங்களை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத சிங்களவனையும்
எதிர்த்த உங்களால்  இப்பொழுது தமிழனுக்காக மலையாளியை எதிர்க்க
முடியுமா? அது விளம்பரதுக்கு ஆசைப்பட்டு உயிரையே விட்ட கதையாகி விடும் என்று உங்களுக்கு தெரியாதா? உங்கள் படங்கள் கேரளாவில்
அதிகபட்சம் மூன்று கோடி வசூலை கொடுக்குமா? தமிழனுக்காக அந்த மூன்று கோடியை புறந்தள்ளிவிட்டு இறங்கி போராட முடியுமா? அரசியலுக்கு வருவதற்க்கு முன்னரே ஒவ்வொரு விசயத்திலும்
சுயநலமாக செயல்படும் நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துவிட
முடியும்? இப்படிபட்ட  உங்களை பற்றி நல்லாவிதமாக மட்டுமே எழுத வேண்டும்
என்று நீங்களும் உங்கள் அடிபொடிகளும் எப்படி எதிர்பார்க்கலாம்?

கடைசியாக இன்று அரசியலில்
இருந்து கொண்டு ஊழல் செய்து நாட்டை குட்டி சுவாராக்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை
விட தன்னுடைய சுயநலத்துக்காக தனக்கு பின்னால் இருக்கும் கூட்டத்தை பயன்படுத்தி எந்த  தகுதியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியலில் இறங்க துடித்து கொண்டிருக்கும் உங்களை
போன்றவர்கள் தான் மிகவும்  அபாயகரமானவர்கள்.
இவர்களை போன்றவர்களை நம்மால் எல்லாம் திருத்த
முடியாது,இவர்களுக்கு  பின்னால் இருந்து கொண்டு ,இவர்களின் சுயநலதிர்க்கு பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் இவர்களின் தொண்டர்கள் தான்
இவர்களை புறக்கணிக்க வேண்டும். ஆனால் சினிமா மாயையில் மூழ்கி கிடக்கும் அவர்கள் இதையெல்லாம்
சிந்திக்கவா போகிறார்கள்?
சினிமாவும் அரசியலும்
அனைவருக்கும் பொதுவானவைஅதில்
நுழைய எப்படி ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளதோ அதை போல அதில் இருப்பவர்களையே விமர்சிக்கவும்
அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நான் விஜயை பற்றி விமர்சிப்பதில்
ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். நான் அஜீத் ரசிகனாக
இருப்பதால்தான் விஜயை விமர்சிகிறேன் என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை மட்டும்
சொல்லிக்கொள்கிறேன் விஜய் அந்த
அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்…

நன்றி : http://apkraja.blogspot.com



No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips