- சசி நீக்கம் ஏன்., ? பரபரப்பு தகவல்: சசியை கட்சியில் இருந்து நீக்க ஜெ., எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பல பின்னணி தகவல்கள் இருந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு: சசிகலா மற்றும் அவரது வட்டாரத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்தியது சசி கூட்டம். இதன் ஒரு கட்டமாக நடராஜன் அ.தி.மு,.க.,வை தங்கள் வசம் கொண்டு வர தங்களுக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசில் அதிகாரிகள் என பலரை தங்கள் இஷ்டம் போல் பொறுப்பில் கொண்டு வரதிட்டமிட்டார். இதற்கு சசியும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இந்த உள்ளடி வேலை நடந்த போது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட ஜெ., இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றன.
engalin uyir
Monday, 19 December 2011
சசி நீக்கம் ஏன்., ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment