engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Friday 30 March 2012

மருத்துவமனையின் பணவெறி

கடந்த 25 .03 .2012 நண்பகல் 12 மணியளவில் மதுரை ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்த தேவரின பாதுகாப்பு பேரவையின் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் செயல்மறவன் கார்த்திக்தேவன் வயது 28
, தனது நண்பனுடன் மீனாட்சி மிசின் மருத்துவமனை அருகேயுள்ள பாண்டி கோவிலை நோக்கி செல்லும் ரிங் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற போதுஅவர்களது பின்னால் அதிவேகமாக வந்த மாருதி ஓம்னி வான் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர் ,உடனே 100 அடி தூரமேயுள்ள சேதுராமனின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ,அங்கிருந்த மருத்துவமனை நிர்வாகிகள் ,மருத்துவர்கள் காயமடைந்த இருவரையும் பார்த்துவிட்டு ஒரு நபருக்கு ரூபாய் 20 ,000 பணம் கட்டினால்தான் சிகிச்சை செய்வோம் என்று கூறியுள்ளனர்,அதற்கு உடனிருந்தவர்கள் தயவு செய்து இவர்களை காப்பாற்றுங்கள் இருவரும் முன்பு உங்கள் நிறுவனரின் கட்சியில் பணியாற்றியவர்கள் ,பக்கத்துக்கு ஊரான ஒத்தகடையை சேர்த்தவர்கள் ஆகவே கண்டிப்பாக பணத்தை கட்டி விடுகிறோம் தயவுசெய்து காப்பற்றுங்கள் என்று கதறியுள்ளனர் ,ஆனால் எதையும் காதில் வாங்காத மருத்துவமனை நிர்வாகம் இருவரையும் தூக்கி சென்று விடுங்கள் ,பணம் கட்டாமல் நாங்கள் சிகிச்சை செய்ய முடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டதை தொடர்ந்து ,வேறு வழிஇன்றி மதுரை அரசு மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சமுதாய பணியாற்றிய திருமணம் ஆகாத அந்த இளைஞன் கார்த்திக்தேவன் மரணமடைந்தான் ,மற்றொருவன் உயிருக்கு போராடி வருகிறான் ,பின்னர் 26 ஆம் தேதி நண்பகல் சுமார் 1 மணியளவில் தேவரின பாதுகாப்பு பேரவை தலைவர் திரு .ந .பசும்பொன் பாண்டியன் ,பொதுசெயலாளர் சிவ.கலைமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து இறுதி ஊர்வலம் ஒத்தக்கடை நரசிங்கம் நோக்கி புறப்பட்டது ,ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கரவாகனங்கள் ,பத்திற்கும் மேற்பட்ட நான்கு சற்கர வாகனங்கள் அணிவகுத்துவந்தன ,ஊர்வலம் சேதுராமன் மருத்துவமனை அருகே வந்தபோது சேதுராமன் கட்சியின் மதுரை கிழக்கு ஒன்றிய செயலர் அழகுபாண்டி தலைமையில் உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் சேதுராமனின் மருத்துவமனையை கண்டித்து கோசங்கள் எழுப்பினர் ,இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது ,பின்னர் நிர்வாகிகள் தலையிட்டு ஊர்வலத்தை அமைதியாக வழிநடத்தி சென்றனர் ,பின்பு கார்திக்தேவனின் அண்ணன் திரு பாண்டி மதுரை மத்திய சிறையில் இருந்து பரோலில் அழைத்து வரப்பட்டு இறுதி சடங்குகள் நிறைவேற்றப்பட்டன .விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பலருக்கு இலவச மருத்துவம் பார்க்கும் சேதுராமனின் சமுதாய சேவையை தனது சொந்த சாதிக்கு செய்ய மறந்தது ஏனோ ?தெரியவில்லை ,ஒத்தக்கடை பகுதி தேவர் சமுதாயத்தின் அன்பினை பெற்ற கார்த்திக்தேவனின் மறைவிற்கு காரணமான சேதுராமன் மருத்துவமனையின் பணவெறி ஒரு சமுதாய துடிப்புள்ள இளைஞனை தேவர் சமுதாயம் இழந்துவிட்டது என அப்பகுதி மக்கள் சேதுராமனை வசைபாடினார்

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips