போயஸ் தோட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இடமாற்றம், என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?
அரசியல் விமர்சகர் என்ற ரீதியில் நான் பேசுகிறேன். ஒரு, எக்ஸ்ட்ரா கான்ஸ்டிட்யூஷனல் அத்தாரிட்டியாக (சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையம்) யாராவது செயல்பட்டால், அது அரசு நிர்வாகத்துக்கு நல்லதல்ல. அதுவும், அந்த மாதிரி செயல்படுபவர்கள், தாங்களாகவே அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருந்தால், அது நிர்வாகத்துக்கு இன்னமும் கெடுதல். அந்த மாதிரியான நிலை, நீக்கப்பட்டு இருக்கிறது. இது, ஆளுங்கட்சிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் ரொம்பவே நல்லது. நேர்மையான, தெளிவான பாதை வகுத்து நிர்வாகம் செல்வதற்கு இது உதவும். யாருடைய குறுக்கீடும் இல்லாமல், கட்சியும், ஆட்சியும் செயல்பட இது வழிவகுக்கும்.
சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக சசிகலா குடும்பத்தினர் செயல்படுகின்றனர் என்பது, முதல் முறை எழுந்திருக்கும் புகார் அல்ல. 1991ல் இருந்தே இருந்து வரும் புகார் தான். இப்போது, திடீரென அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணம் என்ன?
எந்த நடவடிக்கையுமே திடீரென எடுக்கப்படுவதல்ல. நீண்ட யோசனைக்குப் பிறகு தான், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேற்று ஏதோ நடந்து, இன்று நடவடிக்கை என்பதாக நினைக்கக் கூடாது. நான் அப்படி நினைப்பதில்லை. நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிற நிகழ்ச்சிகளைக் கவனித்து, அது தொடர்பான தெளிவான முடிவுக்கு வருவதற்கு, கொஞ்சம் நேரம் பிடித்திருக்கலாம். அதில் தவறில்லை. முடிவு எடுக்கிற போது தெளிவு இருக்க வேண்டும். அது இருந்திருக்கிறது. தற்போது நடந்திருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே, தொடர் நிகழ்வுகளின் எதிரொலியாகத் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இப்படி ஒரு மீடியா கேட்ட கேள்விக்கு சோ பதில் அளித்துள்ளார். இதன்மூலம் என்ன தெரிகிறது?
இதுவரை போயஸ் தோட்டத்தை முக்குலத்தோர் லாபிப்பண்ணிக் கொண்டிருந்தார்கள். இனி போயஸ் தோட்டத்தில் பிராமண லாபி தொடங்கிவிட்டதாகவே எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அண்ணா திமுகவின் வெற்றிக்கு நான் பிராமிண் (முக்குலத்தோர்) லாபி பெரிதும் உதவியிருக்கிறது. ஆட்சியைப் பிடித்ததும் அவர்களை பிராமிண் லாபி துறத்தி விட்டதாக பேசப்படுகிறது.
இதுவரை ஜெயலலிதா தனது சொந்த ஞானத்தைப் பயன்படுத்தி முக்குலத்தோர் லாபி மூலம் 3 முறை முதலமைச்சர் ஆகியிருப்பதாகவும் இனி பிரமாண லாபி மூலம் அந்த வாய்ப்பை அவர் பெற முடியுமா? என்பது சந்தேகமே என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிக வாக்கு வங்கி இங்கே உள்ள சாதி முக்குலத்தோரே. அதற்கு அடுத்துதான் மற்ற இனத்தவர்கள். சசிகலா அன் கோவை வெளியேற்றிவிட்டதால் முக்குலத்தோர் டாமினேஷன் அகற்றப்பட்டுவிட்டது. அவர்களது ஆட்டம் ஒடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனிப்பட்ட ஜெயலலிதா எதிர்காலம் எப்படி? என்பது போக போகத்தான் தெரியும்.
அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சென்னைக்கு அழைத்து இங்கேயே தங்க வைத்திருப்பதன் மூலம் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்கிற பயம் காரணமாகத்தானே... ஆனால், அந்த மாதிரி விபரீதத்தை சசிகலா அன் கோவினர் செய்யமாட்டார்கள் என்றே தெரிகிறது. சசிகலா ஆதரவோடு பதவிக்கு வந்தவர்களும், அரசு பதவியில் உள்ளவர்களும் உடனடியாக மாற்றப்படலாம் என்று பேசப்படுகிறது. இது நடந்தால் சசிகலா கோஷ்டியினர் ஜெ.வுக்கு விசுவாசமாக இருந்த அளவுக்கு புதிதாக வரும் பிராமண ஆதரவாளர்கள் ஜெ.வுக்கு வேண்டுமானால் விசுவாசமாக இருப்பார்கள். தமிழ்நாட்டின் பிற சாதியினருக்கு விசுவாசமாக இருப்பார்களா? போக போகத்தான் பிரமாண லாபியின் வீரியம் தெரியும்.
No comments:
Post a Comment