engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday, 19 December 2011

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?






  • சென்னை: இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத்திருந்த அத்தனை பேருக்கும் சசிகலாவை ஜெயலலிதா அதிரடியாக நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினரே கூட இதை நம்ப மறுக்கிறார்கள்.

  • ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவரும் பேணிக் காத்து வந்தனர். இவர்களின் நட்பு உருவான கதை சுவாரஸ்யமானது.

  • தமிழக அரசில், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்தவர் எம்.நடராஜன். இவரது மனைவிதான் சசிகலா. சாதாரணமான பெண்மணியாக, வீடியோ கடை நடத்தி வந்தவர் சசிகலா. 1982ம் ஆண்டு அப்போதைய தென் ஆற்காடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார் நடராஜன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரலேகாவுடன் நல்ல நட்பை வைத்திருந்தார். 

  • அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத்தில் நடந்து வந்தது. சந்திரலேகாவிடம் தனது மனைவியை நடராஜன் அறிமுகம் செய்து வைத்தார். அவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசியை அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் புகுந்தார் சசிகலா.

  • வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்து வந்தார் சசிகலா. அந்த நட்பு இறுகி இருவரும் பிரிய முடியாத தோழிகளாயினர்.

  • அதன் பிறகு அவருக்கு உதவியாளர் போல செயல்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கட்சியில் உறுப்பினரானார் சசிகலா. அதிமுகவில் பெரும் செல்வாக்கு மிக்கவராக உயர்ந்தார். அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியும் தந்தார் ஜெயலலிதா.

  • அவரது அக்காள் மகனான டி.டி.வி.தினகரன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் பொருளாளராகவும் பின்னர் அமைப்பு செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.

  • வீட்டுக்குள் நுழைய நடராஜனுக்கு ஜெயலலிதா தடை விதித்த போது தனது வீட்டை விட்டுவிட்டு, கணவரைப் பிரிந்து, போயஸ் தோட்டத்துக்கே வந்துவிட்டார் சசிகலா. கடந்த 29 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வீடடில் தான் வசித்து வந்தார் சசிகலா.

  • இந்த நீண்ட கால நட்புக்கு வித்திட்ட சந்திரேலகா பின்னர் அப்போதைய ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். முகம் கருகிப் போய் படுகாயமடைந்த சந்திரலேகா பின்னர் தனது பணியை ராஜினமா செய்தார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியுடன் இணைந்து அரசியலில் குதித்தார்.

  • சாதாரண பெண்மணியாக வலம் வந்து கொண்டிருந்த சசிகலா, போயஸ் தோட்டத்திற்குள் புகுந்த பின்னர் ஜெயலலிதாவின் ஆசியுடன் சக்தி வாய்ந்தவராக வலம் வந்தார். தனது தோழியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பேசி வந்தார் ஜெயலலிதாவும். சசிகலா மீது பல புகார்கள் வருகிறதே, ஏன் அவரை உங்களுடனேயே வைத்துள்ளீர்கள் என்று பலமுறை பல தரப்பிலும் கேட்கப்பட்டபோதும், சசிகலா எனது தோழி என்று அழுத்தம் திருத்தமாக கூறி அவருடன் தனது நட்பை விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் ஜெயலலிதா.

  • ஆனால் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பாக மாறி தன்னையே பதம் பார்க்க சசிகலா நினைத்ததால்தான் இன்று அவரை நீக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

  • ஆட்சியில் அராஜக தலையீடு:

  • கடந்த 2 அதிமுக ஆட்சியில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில், தற்போதைய 3வது அதிமுக ஆட்சியில் சசிகலாவின் தலையீடுகள் அராஜகமாக இருந்ததாக தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகளை மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார் சசிகலா. நான் முதல்வரா யார் முதல்வர் என்று ஜெயலலிதாவே கொதித்தெழுந்து கேட்கும் அளவுக்கு சசிகலாவின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

  • தனக்குப் பணியாத பல ஐஏஎஸ் அதிகாரிகளை மிரட்டி நீண்ட விடுப்பில் போக வைத்தார் சசிகலா என்று கூறுகிறார்கள். எந்த அதிகாரியாக இருந்தாலும் தன்னைத் தாண்டி ஜெயலலிதாவிடம் போகக் கூடாது என்றும் சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

  • சசிகலாவின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போனதால்தான் கொதித்தெழுந்து அவரை தூக்கி எறிந்துள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

முல்லை பெரியாற்றுப் போராட்டம் - தேவரின பாதுகாப்பு பேரவை



முல்லை பெரியாற்று உரிமையை நிலைநாட்டவும் , பெரியற்றுச் சதியில் ஈடுபடும் கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்தும் மேலூரில் கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் ஊர்வலம் நடத்தப்பட்டது.


மதுரை மாவட்டம் மேலூரில் முல்லை பெரியாற்றை உடைத்து புதிய அணை கட்டப்போவதாக மிரட்டும் கேரளா அரசைக் கண்டித்தும் , உச்சநீதிமன்றம் பலகட்டங்களில் ஆராய்ந்து வெளியிட்ட ஆணையை உதாசீனப் படுத்தி இந்திய அரசையே அவமானப்படுத்திய ஆணவப்போக்கையும் கண்டித்து 10.11.2010 அன்று ஒருநாள் கடையடைப்பு ,ஊர்வலம் மற்றும் வேலை நிறுத்தத்தை தேவரின பாதுகாப்புக் கழகம் ஒருங்கிணைத்து செயல்படுத்தினர். இந்த நிகழ்வில் அனைத்து சங்கங்களும் கலந்துகொண்டனர்.

தேவரின பாதுகாப்பு பேரவை சார்பாக அதன் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சிவ.கலைமணி , தலைமை நிலையச் செயலாளர் ஆண்டிச்சாமி, இளையோர் அணிச்செயலாளர் மாணிக்கம், துணைச்செயலாளர் பாண்டி , மேலூர் ஒன்றியச் செயலாளர் மதன் குமார், மேலூர் நகர் செயலாளர் இளவரசு , மாநில அமைப்புச் செயலாளர் கருப்பையா மற்றும் தேவரின பாதுகாப்பு பேரவை தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்தினர்.

சசி நீக்கம் ஏன்., ?

  • சசி நீக்கம் ஏன்., ? பரபரப்பு தகவல்: சசியை கட்சியில் இருந்து நீக்க ஜெ., எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பல பின்னணி தகவல்கள் இருந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு: சசிகலா மற்றும் அவரது வட்டாரத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்தியது சசி கூட்டம். இதன் ஒரு கட்டமாக நடராஜன் அ.தி.மு,.க.,வை தங்கள் வசம் கொண்டு வர தங்களுக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசில் அதிகாரிகள் என பலரை தங்கள் இஷ்டம் போல் பொறுப்பில் கொண்டு வரதிட்டமிட்டார். இதற்கு சசியும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இந்த உள்ளடி வேலை நடந்த போது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட ஜெ., இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றன.

தேவர்

மரணம் கூட அஞ்சும் மறவன் வந்தால் 

         தென்னாடு கை கட்டும் கள்ளர் நடந்தால் 


    அரங்கமே அதிரும் அகமுடையார் பேசினால் 


     எமனும் பின் வாங்குவான் என் தேவர் கும் 


    என்றால்

mazhai.net

Tuesday, 8 November 2011

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.





.N . வெள்ளைச்சாமித் தேவர்




முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுகளில் ஒருவரான வெள்ளைச்சாமி தேவர் மரணமடைந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:
பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாரிசுகளில் ஒருவருமான என். வெள்ளைச்சாமி தேவர் இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
வெள்ளைச்சாமி தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தினை சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


Animated Social Gadget - Blogger And Wordpress Tips